News June 8, 2024

மத்திய அமைச்சரவை ஒரு பார்வை (1/3)

image

மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கை, மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15%க்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய அமைச்சரவையின் தலைவராக பிரதமர் விளங்குவார். மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு), இணை அமைச்சர்கள் (MoS) என்று 3 பிரிவுகள் உள்ளன. இவை இல்லாமல், துணை அமைச்சர்கள் என்று சிலரை நியமிக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது.

News June 8, 2024

தமிழகத்தில் கூடுதலாக ரேஷன் கடைகள்

image

ரேஷன் கடைகளில் எண்ணெய், பருப்பு, அரிசி உள்ளிட்ட பொருள்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்த நிலையில், இவற்றை புகாருக்கு இடமின்றி முறையாக வழங்க வேண்டும் என அமைச்சார் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். மேலும் தேவைப்படும் இடங்களில் கூடுதல் ரேஷன் கடைகளைத் திறக்க உத்தரவிட்ட அவர், ரேஷன் பொருட்கள் கடத்தல், பதுக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

image

▶விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கு முன்பு அனுமதி சீட்டுடன் வர வேண்டும். ▶9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. ▶தேர்வு எழுதும் அறைக்குள் செல்போன், எலக்ட்ரானிக் கடிகாரம், புளூடூத் சாதனங்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. ▶தேர்வர்கள் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டுவர வேண்டும்‌.

News June 8, 2024

நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி வழங்கவில்லை: காங்கிரஸ்

image

நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவியை வழங்க INDIA கூட்டணி முன்வந்ததாக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிர்வாகி கே.சி.தியாகி தெரிவித்திருந்தார். இதற்கு, காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “அப்படி எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை. இதுகுறித்து தியாகிதான் விளக்கமளிக்க வேண்டும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

News June 8, 2024

டி20: தென்னாப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு

image

தென்னாப்பிரிக்கா-நெதர்லாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை லீக் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் நியூயார்க்கில் தொடங்க உள்ளது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் தங்கள் முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், எந்த அணி முதல் தோல்வியை சந்திக்கப் போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். எந்த அணி வெற்றி பெறும் என கமெண்டில் சொல்லுங்க.

News June 8, 2024

கோவையில் முப்பெரும் விழா

image

கோவையில் வரும் 14ஆம் தேதி முப்பெரும் விழா நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு நிறைவு, திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தந்ததற்காக மக்களுக்கு நன்றி, வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு பாராட்டு ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாட திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News June 8, 2024

திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

image

*நடுத்தர மாணவர்களின் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். *நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட தேசத் தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் அமைக்க வேண்டும். *தமிழகத்தின் திட்டங்கள், உரிமைகளுக்கு நாடாளுமன்றத்தில் அயராது குரல் கொடுப்போம். *நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் வெற்றியை தேடித்தந்த முதல்வருக்கு நன்றி. *கோவையில் ஜூன் 14ஆம் தேதி முப்பெரும் விழா கொண்டாடப்படும்.

News June 8, 2024

மூன்றாம் பாலினத்தவர்களின் வாக்குகள் அதிகரிப்பு

image

தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியான நிலையில், தேர்தல் குறித்த பல்வேறு தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி, மூன்றாம் பாலினத்தவர்களின் வாக்குகள் கடந்த தேர்தலைக் காட்டிலும், இந்த முறை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2019இல் மூன்றாம் பாலினத்தவர்களின் வாக்கு சதவிகிதம் 14.58% ஆக இருந்த நிலையில் இந்த முறை 25% ஆக உயர்ந்துள்ளது.

News June 8, 2024

மழைக்காலங்களில் மிஸ் ஆகும் வாக்கிங்!

image

மழைக்காலங்களில் வாக்கிங் மிஸ் ஆவதாக, பலர் கவலை தெரிவிக்கின்றனர். அவர்கள், வீட்டுக்குள்ளேயே 45 நிமிடங்கள் வரை நடக்கலாம் அல்லது உடற்பயிற்சி செய்யலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வாக்கிங் செல்ல இயலாத நாள்களில், வழக்கமாக சாப்பிடுவதைவிட உணவின் அளவை குறைத்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர். மாறாக, முழுத்தானியங்கள், காய்கறிகள், கீரைகள், முட்டை போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளும்படி கூறுகின்றனர்.

News June 8, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!