India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததால், NDA கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதற்கு வலுசேர்க்கும் வகையில், மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி செல்லவில்லை. முன்னதாக, NDA கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற கீழவையான மக்களவையில் 272க்கு மேல் இடங்களைக் கைப்பற்றும் கட்சி அல்லது கூட்டணியின் தலைவரே பிரதமராக முடியும். அந்த பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வயது வரம்பு தெரியுமா? பிரதமராக பொறுப்பேற்பவர் மக்களவை எம்பி எனில், அவர் 25 வயதை கடந்திருக்க வேண்டும். அப்போதுதான் பிரதமராக முடியும். அதேபோல், பிரதமர் மாநிலங்களவை எம்பி எனில், அவர் 30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
நீட் வினாத்தாள் கசிந்ததை அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும், இளைஞர்களின் குரல் நசுக்கப்படுவதை ஏற்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணி மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், முறைகேட்டை அரசு மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்திரா காந்தி நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்துள்ளார். அவரது காலத்திலேயே வங்கதேச விடுதலைப் போர் நடைபெற்றது. அப்போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்து, வங்கதேசத்துக்கு விடுதலை பெற்றுத் தந்தது. அவரே இந்தியாவின் முதல் பெண் பிரதமரும் ஆவார். இதுபோல பல பெருமைகளுக்கு சொந்தகாரரான இந்திரா காந்தியே மாநிலங்களவையில் இருந்து பிரதமரான முதல் எம்பி என்ற பெருமையை கொண்டுள்ளார்.
கடனில் சிக்கி, வட்டி கட்ட முடியாமல் மோசமான நிதி நிலையில், தவிக்கும் நிறுவனங்கள் ‘ஜாம்பி நிறுவனங்கள்’ என அழைக்கப்படுகின்றன. உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய
நிறுவனங்களின் எண்ணிக்கை 7,000 ஐ எட்டியுள்ளதாக (கடன் மதிப்பு $1.1 டிரில்லியன்) எனக் கூறப்படுகிறது இந்த நிறுவனங்களை கடனில் இருந்து மீட்கவில்லையென்றால், கடும் வேலைவாய்ப்பின்மை நெருக்கடி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மோடி 3.0 அமைச்சரவையில் பங்கேற்கும் புதிய அமைச்சர்களுக்கு தனது இல்லத்தில் தேநீர் விருந்து அளித்து வருகிறார் மோடி. இதில், அமித் ஷா, ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங் சவுஹான், நிர்மலா சீதாராமன், ஜெய்ஷங்கர், ஜோதிராதித்ய சந்தியா, பியூஷ் கோயல், குமாரசாமி, சிராக் பாஸ்வான், கிரண் ரிஜிஜு, மனோகர் லால் கட்டார் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுள் பெரும்பாலானோர் அமைச்சர்களாக இருக்கலாம்.
ஒடிஷாவில் படுதோல்வியை சந்தித்த பின், முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் மூளையாக செயல்பட்ட வி.கே.பாண்டியன், பொதுவெளிக்கு வரவே இல்லை என கூறப்படுகிறது. டெல்லியில் தங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா கார்த்திகேயன், தற்போது பணியில் இருந்து 6 மாத விடுப்பில் சென்றுள்ளார். 10ஆம் வகுப்பு தேர்வு எழுதப்போகும் தனது மகளை கவனித்து கொள்ள விடுப்பு எடுத்துள்ளார்.
மக்களாட்சி நாட்டில் பிரதமரே முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்துவார். அவருக்கென சில தனி அதிகாரம் அரசியலமைப்பு சட்டம் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன? *மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் அதிகாரம் *அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் *அமைச்சரவை குழுக்களை நியமிக்கும் அதிகாரம் *சர்வதேச மாநாடுகளில் இந்திய பிரதிநிதியாக பங்கேற்கும் அதிகாரம்.
தமிழக பாஜகவுக்குள் குற்றப் பின்னணி கொண்டோருக்கு பதவி வழங்கப்படுவதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறிய குற்றச்சாட்டுக்கு கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. அண்ணாமலை ஆதரவாளரான திருச்சி சூர்யா, தமிழிசையை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழிசை, அண்ணாமலை இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மத்திய அமைச்சரவையில் கேபினட், இணை, துணை என 3 வித அமைச்சர்கள் இருப்பார்கள். இந்த 3 அமைச்சர்களும் அமைச்சரவைக்கு தலைவர் என்ற முறையில் பிரதமருக்கு கட்டுப்பட்டவர்கள் ஆவர். மூத்த தலைவர்களும், அனுபவசாலிகளுமே கேபினட் அமைச்சராக நியமிக்கப்படுவர். அவர்களின் ஆலோசனைகளை பிரதமர் கேட்பதுண்டு. கேபினட் அமைச்சர் எண்ணிக்கை 20 வரையும், மற்ற அமைச்சர் எண்ணிக்கை 70 வரையும் இருக்கலாம்.
Sorry, no posts matched your criteria.