India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒடிசா தேர்தலில் பிஜூ ஜனதா தளம் படுதோல்வி அடைந்ததற்கு நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன் காரணம் என விமர்சனம் எழுந்த நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும், நவீன் பட்நாயக்கிற்கு உதவி புரியவே அரசியலுக்கு வந்தேன்; பதவிக்காகவோ, பொறுப்புக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. பிஜூ ஜனதா தளம் தோல்வி அடைந்ததற்கு மன்னிப்பு கோருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
‘தி கோட்’ படத்தை தொடர்ந்து, ஒரு படத்துடன் நடிப்பதை நிறுத்திவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக விஜய் அறிவித்திருந்தார். இந்த சூழலில் விஜய்யுடன் நடிக்க விரும்புவதாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் லைகர் படத்திலும் நடித்துள்ளார் அனன்யா. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விஜய்யுடன் நடிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.
பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் எல்.முருகன், நிர்மலா உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்ற நிலையில், அண்ணாமலை பங்கேற்கவில்லை. இதனால், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தான் தமிழக அரசியலில் கவனம் செலுத்தவுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளதால், அவரே மாநிலத் தலைவராக தொடருவார். இதன் மூலம், அடுத்த மாநிலத் தலைவர் யார் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல், மே மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் சுட்டெரித்ததால் ஜுன் 1இல் திறக்கப்பட இருந்த பள்ளிகள், ஜுன் 10க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியிட்டது முதல் பல மாவட்டங்களில் மாலையிலும், இரவிலும் மழை பெய்து வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதம் போல மேகமூட்டம் வானில் காணப்படுகிறது. இதனால், வெளியே செல்வோர் மழை பெய்யுமா, பெய்யாதா என்ற சந்தேகத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது.
செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளில் பேசும் பெண்கள், முதலீடு மற்றும் ஓடிபி குறித்து பேசி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இதுபோல அழைப்புகளில் பேசுவோர் உண்மையில் பலர் பெண்களே கிடையாது. செயலியில் உள்ள வசதியை பயன்படுத்தி, பெண் போல ஆண்களே பேசி பணப்பறிப்பில் ஈடுபடுகின்றனர். அதனால் தெரியாத பெண்கள் ஓடிபி கேட்கும்போதும், முதலீடு செய்ய கூறும்போதும் எச்சரிக்கை வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் கடும் போட்டிக்கு பிறகு மாணிக்கம் தாகூரிடம் தோல்வியைத் தழுவினார். விஜயகாந்த் மறைவால் ஏற்பட்ட அனுதாப அலை இருந்தும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையே அவர் நம்பியுள்ளார். அந்தத் தேர்தலில் அவருக்கு இத்தனை வாக்குகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் பணி செய்தால் மட்டுமே வெற்றிக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த தலைமுறை போர் ‘ஜெட்’ விமானத்தை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் இந்தியத் தலைவர் கிஷோர் ஜெயராமன், இந்தியாவில் கார் இன்ஜின்களை தயார் செய்வதோடு, விண்வெளி & விமான நிறுவனங்களுக்கும் இன்ஜின்களை தயாரிக்கவுள்ளதாகவும், இதன் மூலம் 35,000 பேருக்கு வேலை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிதாக பொறுப்பேற்கவிருக்கும் அமைச்சர்களுக்கு பிரதமர் (தேர்வு) அளித்த தேநீர் விருந்தில் ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூர் இருவரும் பங்கேற்கவில்லை. மோடியின் கடந்த ஆட்சியில் இவர்கள் இருவரும் அமைச்சர் பொறுப்பு வகித்திருந்தனர். ஆனால், இந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் இவர்கள் இருவருக்கும் பதவி வழங்கப்படாது என்று தெரிகிறது.
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில், மத்தியில் ஒரு வலுவான எதிர்கட்சி அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில், ஒரு வலுவான எதிர்க்கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இது ஜனநாயகத்துக்கு ஓர் ஆரோக்யமான அறிகுறி எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ள நாதகவிற்கும், சீமானுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநகராட்சி தேர்தலில் நின்றால்கூட அண்ணாமலையால் வெற்றிபெற முடியாது
என்று காங்கிரஸ் மூத்த தலைவர் EVKS இளங்கோவன் கிண்டலாக கூறியுள்ளார். பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது எனக் கூறிய அவர், அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு, தமிழிசை ஆளுநர் பதவியைவிட்டு விலகி இருக்கக் கூடாது என்றார். அத்துடன், தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும் மோடி தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.