News June 11, 2024

ராணுவம் இல்லாத நாடுகள்

image

உலக நாடுகள் பலவும் ராணுவத்துக்காக பட்ஜெட்டில் மிகப்பெரிய தொகையை செலவிடுகின்றன. ஆனால், 9 நாடுகள் மட்டும் சொந்தமாக ராணுவ அமைப்பை கட்டமைக்கவில்லை. பிற நாடுகளுடன் செய்த ஒப்பந்தம், காவல்துறைக்கு அளித்த அதிகாரத்தால் அந்நாடுகள் ராணுவத்தை கட்டமைக்கவில்லை. *ஐஸ்லாந்து *மொரிசீயஸ் *கோஸ்டாரிகா *வாடிகன் சிட்டி *லிஸ்டென்ஸ்டின் *அன்டோரா *செயின்ட் லூசியா *டொமினிகா *சாலமன் தீவுகளே அந்நாடுகள் ஆகும்.

News June 11, 2024

பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ பரிசோதனை

image

புதுச்சேரியில் விஷ வாயு கசிவு ஏற்பட்ட பகுதியில் வட்டாட்சியர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ள முதல்வர் ரங்கசாமி, நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார். முன்னதாக, புகார் கொடுத்தும் சாக்கடையை சுத்தம் செய்யவில்லை என கூறப்பட்ட நிலையில், சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

News June 11, 2024

டி20 உலகக் கோப்பையில் இருந்து ஓமன் வெளியேறியது

image

உலகக் கோப்பை டி20 போட்டிகள் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லீக் சுற்றில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த ஓமன் அணி, ‘சூப்பர் 8’ சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து முதல் அணியாக WC தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அதேநேரம், விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள இலங்கை, பாக்., அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News June 11, 2024

விஷ வாயு தாக்கி 3 பேர் பலி

image

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் சாக்கடையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் மூதாட்டி உள்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு கழிவறைக்குள் பரவியதையடுத்து மயங்கி விழுந்த செந்தாமரை (72) என்ற மூதாட்டியைக் காப்பாற்றச் சென்ற அவரது மகளும் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், அப்பகுதியினர் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

News June 11, 2024

உலகின் முதல் 2ஆவது பாக திரைப்படம் எது?

image

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலகத்திலும் 2வது பாக படம் எடுப்பது வாடிக்கையாகியுள்ளது. இதுபோல 2வது பாகம் எடுக்கும் பழக்கம் 1916ல் தொடங்கியது. 1916இல் அமெரிக்காவில் கருப்பு வெள்ளை நிறத்தில் The Fall of a Nation என்ற ஊமைப்படம் வெளியானது. அப்படம், The Birth of a Nation என்ற படத்தின் 2ஆவது பாகமாகும். ₹25 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படத்தை தாமஸ் டிக்சன் ஜுனியர் இயக்கியிருந்தார்.

News June 11, 2024

விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவன்

image

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பெற்றோருக்குத் தெரியாமல் கார் ஓட்டிய 14 வயது சிறுவனும் அவரது 17 வயது நண்பனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பெற்றோருக்குத் தெரியாமல் இருவரும் மாருதி ஆம்னி வேனை எடுத்து ஓட்டிச் சென்றிருக்கின்றனர். அப்போது எதிரே வந்த கார் மோதியதில், இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News June 11, 2024

பகிரங்க மன்னிப்பு கேட்டார் பாக்., வீரர்

image

இந்தியா, பாகிஸ்தான் போட்டியின்போது நேரலையில் பேசிய பாக்., முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், அர்ஷ்தீப் சிங்கை மத ரீதியாக தாக்கி பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த ஹர்பஜன், இஸ்லாமியர்களுக்கு உதவிய சீக்கியர்களின் வரலாறு தெரியாமல் நீங்கள் பேசுவது வெட்கக்கேடாக உள்ளது என கூறி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது கருத்துக்கு கம்ரான் அக்மல் X தளத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

News June 11, 2024

அதிமுகவின் தோல்விக்கு காரணம் இதுதான்

image

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிமுக தோல்வியை சந்தித்திருக்காது என மதுரை ஆதீனம் ஞானசம்பந்த பரமாச்சாரியார் தெரிவித்துள்ளார். பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கின்றன என்றும், அதிமுக அதனை செய்யத் தவறிவிட்டது என்றும் அவர் சாடியுள்ளார். மதுரை ஆதீனம் முன்பு அதிமுகவுடன் நெருக்கமாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 11, 2024

ப்ளஸ் 1 மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ப்ளஸ் 1 மாணவர்கள் முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் ஜூன் 26 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றிபெறும் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுக்கு ₹10000 வீதம் இளநிலை படிப்பு முடிக்கும் வரை வழங்கப்படும். இதற்கு மாணவர்கள் <>https://www.dge.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அத்துடன் தலைமை ஆசிரியரிடம் ₹50 செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.

News June 11, 2024

இ-கார்கள் பதிவில் பெங்களூரு முதலிடம்

image

இந்தியாவில் இ-கார்கள் அதிகம் பதிவுசெய்யப்பட்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. நாட்டின் முக்கிய தொழில் நகரங்களான மும்பை, டெல்லியை பின்னுக்குத் தள்ளிய பெங்களூருவில், கடந்த ஆண்டில் 8,690 இ-கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 40,000க்கும் அதிகமான இ-கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 8,211, ஹைதராபாத்தில் 6,408 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

error: Content is protected !!