News November 4, 2025

நாளை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்..

image

₹50,000 வரை பரிசுகளை வெல்லும் வாய்ப்புள்ள, மாநில அளவிலான விநாடி-வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நாளை(நவ.5) கடைசி நாளாகும். ‘சூழல் அறிவோம்’ என்ற தலைப்பில் 6-9 வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விநாடி-வினா போட்டி நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. https://www.tackon.org/soozhal இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 2 மாணவர்களை உள்ளடக்கிய 5 குழுக்களை பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 4, 2025

வானில் என்னென்ன நடக்க இருக்குனு தெரியுமா?

image

இரவு நேரங்களில் வானத்தை பார்ப்பது எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அதுவும் சிறப்பு நிகழ்வுகள் என்றால், குழந்தைபோல் பார்த்து மகிழ்வோம். இந்த நவம்பர், நம்மை மகிழ்விக்க பல வியப்பூட்டும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அவை என்னென்ன நிகழ்வுகள், எந்த நாள்களில் நடக்கின்றன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு எதை பார்க்க ஆசை? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 4, 2025

Drug overdose: வாரந்தோறும் 12 பேர் பலி

image

இந்தியாவில் வாரம் ஒன்றுக்கு சராசரியாக 12 பேர், மருந்துகளை அதிகமாக பயன்படுத்தியதால் உயிரிழந்துள்ளதாக NCRB தெரிவித்துள்ளது. 2019 முதல் 2023 வரை 3,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் ‘Overdose’ காரணமாக நிகழ்ந்துள்ளன. Opiod வலி நிவாரணிகள், பதற்றத்தை குறைக்கும் மருந்துகள் எளிதாக கிடைப்பதே இதற்கு காரணம் என்று கூறும் நிபுணர்கள், போதைப்பொருள் அதிகரிப்பின் அச்சுறுத்தலை இது சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

News November 4, 2025

Worldcup சாம்பியன் கேப்டனின் சொத்து மதிப்பு தெரியுமா?

image

இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. BCCI கிரேடு ஏ காண்ட்ராக்ட்டில் ஆண்டுக்கு ₹50 லட்சம், சர்வதேச போட்டிகளுக்கு ₹31 லட்சம், WPL-ல் ₹1.80 கோடி வருமானம் ஈட்டுகிறார். இதுதவிர, ஒரு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக ₹10 – ₹12 லட்சம் வரை பெறுகிறார். ஆடம்பர பங்களா, சொகுசு வாகனங்களையும் வைத்துள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு ₹30 கோடியாகும்.

News November 4, 2025

மத்திய அரசு மீது தலைமை நீதிபதி குற்றச்சாட்டு

image

அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி BR கவாய் விமர்சித்துள்ளார். BR கவாய் அமர்வு விசாரித்த Tribunal Reforms Act குறித்த வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மத்திய அரசு கோரியது. வாதங்களை முழுவதும் கேட்ட பிறகு, நள்ளிரவில் சமர்ப்பித்துள்ள மத்திய அரசின் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த கவாய், அதை ஏற்க மறுத்துள்ளார்.

News November 4, 2025

USA முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார்

image

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி (84) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தில், 2001 முதல் 2009 வரை துணை அதிபராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தான் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு, சதாம் உசேனுக்கு மரண தண்டனை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. அமெரிக்க வரலாற்றில் மிகவும் வலிமை வாய்ந்த துணை அதிபராக கருதப்பட்டவர்.

News November 4, 2025

இந்திய பங்குச்சந்தைகளின் இன்றைய நிலவரம்

image

நவம்பர் மாதத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று, சற்று ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்று சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், 519 புள்ளிகள் குறைந்து 83,459 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 167 புள்ளிகள் குறைந்து 25,597 புள்ளிகளுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2025

நாளை வானில் அதிசயம்… மிஸ் பண்ணாதீங்க!

image

Beaver Moon என அழைக்கப்படும் சூப்பர் மூன் நாளை (நவ.5) வானில் தோன்றவுள்ளது. பூமிக்கு மிக அருகில் நிலவு வரவுள்ளதால் வழக்கமான பௌர்ணமியை விட 14% பிரகாசமாகவும், 30% பெரிதாகவும் தோன்றும். 2025-ன் மிகப்பெரிய சூப்பர் மூன் இது. பீவர் (எ) நீர்நாய்கள், இந்த மாதத்தில் மிக ஆக்டிவாக இருந்து பெளர்ணமி நிலவொளியில் தங்களின் வீடுகளை கட்டும் பணிகளை முடித்துவிடும். இதன் காரணமாகவே, பீவர் மூன் என அழைக்கப்படுகிறதாம்.

News November 4, 2025

கால்குலேட்டருக்கு அனுமதி: மாணவர்களுக்கு HAPPY NEWS

image

10, +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். இதில் சிறப்பம்சமாக, கணக்குப்பதிவியல் தேர்வின்போது மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிப்பது இதுவே முதல்முறை.

News November 4, 2025

டாப்-9 நகரங்கள்: இதிலுள்ள தமிழக நகரம் எது தெரியுமா?

image

கலை, இசை, உணவு, சினிமா, கைவினை, இலக்கியம், வடிவமைப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் நகரங்களை “படைப்பாற்றல் நகரங்கள்” என்று UNESCO அறிவிக்கிறது. சமீபத்தில் லக்னோவும் அந்த அங்கீகாரம் பெற்றது. இதனுடன் சேர்த்து இந்தியாவில், மொத்தம் 9 படைப்பாற்றல் நகரங்கள் உள்ளன. அவை எந்தெந்த நகரங்கள், அதன் சிறப்புகளை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT

error: Content is protected !!