India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஐந்து கண் மதகில் 3 ஷட்டர்கள் வழியாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகளுடன் நேற்று அங்கு, ஸ்ரீபெரும்புதுார் MLA செல்வப்பெருந்தகை ஆய்வில் ஈடுபட்டார். அப்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் தண்ணீரை திறந்து விட்டது ஏன் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். நீங்களே மக்கள் பிரதிநிதியாகி விட்டால் எதற்கு அரசு எனவும் கடிந்துகொண்டார்.

வருண முத்ரா உடலில் நீர் உள்ளடக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், நீரிழப்பை தடுக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வலது கையின் சிறு விரலை, உள்நோக்கி மடித்து, கட்டை விரலை அத்துடன் சேர்த்து பிடித்து, மற்ற 3 விரல்களை நீட்டிப் பிடிக்கவும். கைகளை மார்புக்கு முன் வைத்து, விரல்களை அழுத்திப் பிடிக்கவும். இந்த நிலையில் ஆழமாக மூச்சை இழுத்து விடவும். இப்படி ஒரு 5 நிமிடம் செய்யுங்கள்.

சென்னையில் இன்று(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். சில இடங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அம்மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவித்திருந்தார். முன்னதாக தருமபுரியில் இன்று பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறையாகும்.

மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, தெ.ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு இப்போது இந்திய அணி போராடி வருகிறது. அதற்கு இன்று நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். தொடரை சிறப்பாக தொடங்கிய இந்திய கடைசி 3 போட்டிகளில் சொதப்பியது. மீண்டும் வெற்றிப்பாதைக்கு இந்தியா திரும்புமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

சூரியன் மறைவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் விளக்கு ஏற்றுவது நல்லது. லட்சுமி தேவிக்காக விளக்கை வடக்கு திசையில் ஏற்றி வைக்க வேண்டும். அங்கே செருப்பு இருக்கக் கூடாது. விளக்கை நன்றாக சுத்தம் செய்து விட்டே விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கில் கரி படிந்திருந்தால், அதை மாற்ற வேண்டும். விளக்கு ஏற்றியவுடன் கதவை மூடக்கூடாது. வீட்டிற்குள் வரும் நல்ல சக்திகள் வெளியே தங்கிவிடும் என்பது ஐதீகம். SHARE IT.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(அக்.23) காலையில் மழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. இதனிடையே, மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், மறைந்த MLA EVKS இளங்கோவனின் நெருங்கிய நண்பருமான நாசே ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் கடலூர் (அ) மயிலாடுதுறை தொகுதிகளில் போட்டியிட விரும்பிய அவருக்கு சீட்டு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார். ஈரோட்டில் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் அதிமுக, பாஜகவினர் தங்கள் கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.

தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா, இன்று 2-வது ஆட்டத்தில் களமிறங்க உள்ளது. இந்தியா வெற்றி பாதைக்கு திரும்ப விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பார்ம் ரொம்ப முக்கியம். இந்த போட்டியில் தோற்றால் சீரிஸை இழந்து விடுவோம் என்பதால் இந்திய அணி முழு திறனையும் வெளிக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல.

திமுக கூட்டணியை விட்டு வேறு கூட்டணியை சிந்திப்பதே கிடையாது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(IUML) தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு 6 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும், குறைந்தது 5 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைப்போம் என்றும் கூறியுள்ளார். கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற IUML 3 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.