News November 5, 2025

உங்களுக்கு ஃபோனா? ஃபோனுக்காக நீங்களா?

image

ஸ்மார்ட்போன் வழியாக தினசரி இணையம் பயன்படுத்துவோர், அதிக சமூக தனிமைப் படுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆன்லைனில் நேரம் செலவிடும் போது, சக மனிதர்களுடன் செலவிடும் நேரமும், அவர்களுடனான நெருக்கமும் குறைகிறது. ஆகவே, தேவைக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதீர். உறவுகளோடு உறவாடுங்கள். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.

News November 5, 2025

WEAK PASSWORD: ஹாஸ்பிடலில் நடந்த கொடூரம்

image

ஒரு Weak Password-ஆல், ஹாஸ்பிடலின் கர்ப்பிணிகளின் அந்தரங்க செக்கப் காட்சிகள் இணையத்தில் விற்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. குஜராத், ராஜ்கோட்டில் உள்ள தனியார் பிரசவ ஹாஸ்பிடலை ஹேக் செய்த கொடூரர்கள், கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ‘admin123’ என்ற Weak Password தான் ஹேக் செய்யப்பட முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதுபோன்று 50,000 வீடியோக்களை அவர்கள் திருடி விற்றுள்ளனர்.

News November 5, 2025

ராசி பலன்கள் (05.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News November 5, 2025

பிரபல மராத்தி நடிகை காலமானார்

image

பிரபல மராத்தி நடிகை தயா டோங்ரே (85) வயது முதிர்வு காரணமாக காலமானார். 16 வயதில் நாடகத் துறையில் நுழைந்த அவர், பல்வேறு சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். தூர்தர்ஷனில் வெளியான ‘Gajara’ சீரியலில் நடித்ததன் மூலம் தேசிய அளவில் பிரபலமானார். இவரது இழப்பினால், மராத்திய நாடக கலையின் சகாப்தம் முடிவுக்கு வந்ததாக பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News November 5, 2025

RAIN ALERT: நாளை மிக கவனம்

image

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றிரவு கனமழை பெய்தது. இந்நிலையில், நாளை(நவ.5) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாளும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள்!

News November 5, 2025

நகை கடன்… முக்கிய அறிவிப்பு

image

2026 ஏப்.1 முதல், தங்கத்தைபோல் வெள்ளியையும் அடகு வைத்து கடன் பெறலாம் என RBI அண்மையில் அறிவித்தது. இதில் முக்கிய அம்சமாக, வெள்ளி நகைகள், நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். பார் வெள்ளி, ETF, மியூச்சுவல் பண்ட் போன்ற நிதி சொத்துக்கு கடன் கிடையாது. நீங்கள் ₹2.5 லட்சம் வரை பெற விரும்பினால் வெள்ளியின் மதிப்பில் 85% கடன் கிடைக்கும். ₹5 லட்சம் வரை 80% வரையும், அதற்கு மேல் 75% வரையும் கடன் பெறலாம்.

News November 5, 2025

உயர்சாதியினர் கைகளில் இந்திய ராணுவம்: ராகுல்

image

இந்திய ராணுவம், நாட்டின் மக்கள் தொகையில் 10% உள்ள உயர் சாதியினர் கட்டுப்பாட்டில் உள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், கார்ப்பரேட், அரசு துறை பதவிகள், நீதித்துறையிலும் உயர் சாதியினரே கோலோச்சுவதாகவும், மீதமுள்ள 90% மக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News November 5, 2025

‘ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்

image

‘ஆர்யன்’ படத்தின் கிளைமாக்ஸை மாற்றி வெளியிடுவதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கிளைமாக்ஸ் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் வந்ததால், ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த இன்னொரு கிளைமாக்ஸை இன்று முதல் படத்தில் சேர்த்து வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். நீங்கள் ‘ஆர்யன்’ படம் பார்த்தீங்களா? படம் எப்படி இருந்தது என கமெண்ட் பண்ணுங்க.

News November 4, 2025

செல்போன் ரீசார்ஜ்.. இது 6 மாதம் இலவசம்

image

BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சம்மன் பிளானை அறிமுகம் செய்துள்ளது. இதில், ₹1,812-க்கு ரீசார்ஜ் செய்தால் ஓராண்டுக்கு தினமும் 2GB டேட்டா, 100 SMS மற்றும் அன்லிமிட்டெட் கால் உள்ளிட்டவற்றை பெறலாம். முக்கிய அம்சமாக, இந்த திட்டத்தில் BiTV பிரீமியம் சப்ஸ்கிரிப்சனை 6 மாதத்திற்கு இலவசமாக பெறலாம். இந்த ஆஃபர் நவ.18 வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News November 4, 2025

PAK-கிற்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை வழங்கும் சீனா

image

சீனாவின் அதிநவீன 8 நீர்மூழ்கி போர் கப்பல்களை (Hangor – Class Diesel – Electric Submarines) அடுத்த ஆண்டு தங்களது கடற்படையில் சேர்க்க உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இவை அதிநவீன ஆயுதங்கள், சென்சார்களை கொண்டிருப்பதோடு, நீருக்குள் வாரக்கணக்கில் இருக்கும் அளவிற்கு பேட்டரி திறனை கொண்டிருக்கும். இந்த தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!