India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியாவில் வாரம் ஒன்றுக்கு சராசரியாக 12 பேர், மருந்துகளை அதிகமாக பயன்படுத்தியதால் உயிரிழந்துள்ளதாக NCRB தெரிவித்துள்ளது. 2019 முதல் 2023 வரை 3,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் ‘Overdose’ காரணமாக நிகழ்ந்துள்ளன. Opiod வலி நிவாரணிகள், பதற்றத்தை குறைக்கும் மருந்துகள் எளிதாக கிடைப்பதே இதற்கு காரணம் என்று கூறும் நிபுணர்கள், போதைப்பொருள் அதிகரிப்பின் அச்சுறுத்தலை இது சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. BCCI கிரேடு ஏ காண்ட்ராக்ட்டில் ஆண்டுக்கு ₹50 லட்சம், சர்வதேச போட்டிகளுக்கு ₹31 லட்சம், WPL-ல் ₹1.80 கோடி வருமானம் ஈட்டுகிறார். இதுதவிர, ஒரு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக ₹10 – ₹12 லட்சம் வரை பெறுகிறார். ஆடம்பர பங்களா, சொகுசு வாகனங்களையும் வைத்துள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு ₹30 கோடியாகும்.

அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி BR கவாய் விமர்சித்துள்ளார். BR கவாய் அமர்வு விசாரித்த Tribunal Reforms Act குறித்த வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மத்திய அரசு கோரியது. வாதங்களை முழுவதும் கேட்ட பிறகு, நள்ளிரவில் சமர்ப்பித்துள்ள மத்திய அரசின் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த கவாய், அதை ஏற்க மறுத்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி (84) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தில், 2001 முதல் 2009 வரை துணை அதிபராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தான் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு, சதாம் உசேனுக்கு மரண தண்டனை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. அமெரிக்க வரலாற்றில் மிகவும் வலிமை வாய்ந்த துணை அதிபராக கருதப்பட்டவர்.

நவம்பர் மாதத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று, சற்று ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்று சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், 519 புள்ளிகள் குறைந்து 83,459 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 167 புள்ளிகள் குறைந்து 25,597 புள்ளிகளுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Beaver Moon என அழைக்கப்படும் சூப்பர் மூன் நாளை (நவ.5) வானில் தோன்றவுள்ளது. பூமிக்கு மிக அருகில் நிலவு வரவுள்ளதால் வழக்கமான பௌர்ணமியை விட 14% பிரகாசமாகவும், 30% பெரிதாகவும் தோன்றும். 2025-ன் மிகப்பெரிய சூப்பர் மூன் இது. பீவர் (எ) நீர்நாய்கள், இந்த மாதத்தில் மிக ஆக்டிவாக இருந்து பெளர்ணமி நிலவொளியில் தங்களின் வீடுகளை கட்டும் பணிகளை முடித்துவிடும். இதன் காரணமாகவே, பீவர் மூன் என அழைக்கப்படுகிறதாம்.

10, +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். இதில் சிறப்பம்சமாக, கணக்குப்பதிவியல் தேர்வின்போது மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிப்பது இதுவே முதல்முறை.

கலை, இசை, உணவு, சினிமா, கைவினை, இலக்கியம், வடிவமைப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் நகரங்களை “படைப்பாற்றல் நகரங்கள்” என்று UNESCO அறிவிக்கிறது. சமீபத்தில் லக்னோவும் அந்த அங்கீகாரம் பெற்றது. இதனுடன் சேர்த்து இந்தியாவில், மொத்தம் 9 படைப்பாற்றல் நகரங்கள் உள்ளன. அவை எந்தெந்த நகரங்கள், அதன் சிறப்புகளை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் நவ.6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. 243 தொகுதிகளை கொண்ட பிஹாரில், முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எஞ்சிய தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நவ.11-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னையில் நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதேபோல், நடிகர் விஷால், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.