News April 28, 2025

கோர விபத்து.. PM மோடி இரங்கல்

image

ம.பி. சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாந்த்சௌர் பகுதியில் பைக் மீது மோதி வேன் கிணற்றில் விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மோடி, தலா ₹2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

News April 28, 2025

PM மோடி சொன்ன ஆப்… உங்ககிட்ட இருக்கா..?

image

‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் PM மோடி குறிப்பிட்ட SACHET செயலியின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா? இந்திய வானிலை ஆய்வு துறையின் அதிகாரப்பூர்வ ஆப்பான இதில், தங்கள் பகுதியின் real-time வானிலையை மக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், பேரழிவு காலங்களில் இந்த செயலியின் மூலம் உதவி எண்கள், அதிகம் பாதிக்கப்பட்ட இடங்கள் போன்ற தகவல்களையும் அறியலாம். இது 12 மொழிகளிலும் சேவை வழங்குகிறது. உங்ககிட்ட இருக்கா?

News April 28, 2025

திமுக ஆட்சி குறித்து பேச அதிமுகவிற்கு தகுதியில்லை: CM

image

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என பேசிய இபிஎஸ்-க்கு CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடி சாட்சி, அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி என்று விமர்சித்த அவர், சட்டம் ஒழுங்கு குறித்து பேசவும், திமுக ஆட்சி மீது குற்றம் சாட்டவும் அதிமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அடகு வைத்தாக விமர்சித்தார்.

News April 28, 2025

NCERT பாடநூலில் கும்பமேளா IN முகலாய வரலாறு OUT..!

image

மத்திய அரசின் கீழுள்ள NCERT பாடநூலில் செய்யப்பட்ட மாற்றம் சர்ச்சையாகியுள்ளது. 7-ம் வகுப்பு பாடநூலில் மகாகும்பமேளா உள்ளிட்ட புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், முகலாய மன்னர், டெல்லி சுல்தான்களின் வரலாறு நீக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2025

கோர விபத்தில் 5 தமிழர்கள் பலி

image

திருப்பதி அருகே நடைபெற்ற கோர விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். தோட்டப்பள்ளி என்ற பகுதியில் கார் ஒன்று கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News April 28, 2025

செந்தில் பாலாஜி வழக்கு முடித்து வைப்பு

image

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி எந்த பதவியும் வகிக்கக்கூடாது என ED கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொண்டு, செந்தில் பாலாஜிக்கு எதிரான ஜாமின் வழக்கை முடித்து வைத்தது. SC தெளிவாக கூறிவிட்டதால், அவரின் கட்சிப் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை.

News April 28, 2025

செந்தில் பாலாஜிக்கு கூடுதல் கட்டுப்பாடு தேவை: ED

image

செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. இதில், செந்தில் பாலாஜி மீதான ஜாமின் நிபந்தனையில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் மீண்டும் அமைச்சராகக் கூடாது, எந்த பொறுப்பிலும் இருக்கக் கூடாது என்றும் ED வலியுறுத்தியுள்ளது.

News April 28, 2025

நெட்பிளிக்ஸ், அமேசானுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

image

சென்சார் கட்டுப்பாடு இல்லாததால், OTT-ல் வெளிவரும் பல தொடர்கள், படங்களில் ஆபாசக்காட்சிகள் அதிகமாக இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இது குறித்த மனு மீதான விசாரணையில், விளக்கம் அளிக்க அமேசான், நெட்பிளிக்ஸ், உள்ளிட்ட OTT தளங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், விசாரணையின் போது இந்த தளங்களுக்கும் சமூக பொறுப்பு இருப்பதாகவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News April 28, 2025

பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொள்ளப்படுவார்கள்: ஷிண்டே

image

பாகிஸ்தானியர்கள் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறாவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று ஏக்நாத் ஷிண்டே பகிரங்கமாக எச்சரித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த 107 பேர் மகாராஷ்டிராவில் இருப்பதாகவும், அவர்கள் எந்த பொந்துக்குள் ஒளிந்திருந்தாலும், காவல் துறை அவர்களை கண்டுபிடித்து அங்கேயே கொல்லும். பாகிஸ்தானியர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

News April 28, 2025

பம்பர் ஆஃபர்.. அரசு விரைவுப் பஸ்சில் இலவச பயணம்!

image

இந்த சம்மரில் அரசு விரைவுப் பஸ்சில் பயணித்தால், குலுக்கல் முறையில் 75 பேருக்கு இலவச பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறதாம். ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜுன் 15-ம் தேதி வரை பயணிப்பவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து இந்த பரிசு அளிக்கப்படும். முதல் பரிசாக, 25 பேர் ஓராண்டுக்கு 20 முறையும், 2-ம் பரிசாக 25 பேர் 10 முறையும், 3-ம் பரிசாக 25 பேர் 5 முறையும் பயணிக்கலாம். இப்பவே கிளம்புங்க!

error: Content is protected !!