India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

T20 & ODI பார்மெட்களை எப்படி பேலன்ஸ் செய்வது என AB டிவில்லியர்ஸிடம் அறிவுரை கேட்டுள்ளார் இந்திய T20 கேப்டன் சூர்யகுமார் யாதவ். T20-ல் நன்றாக விளையாடினாலும், ODI-ல் தான் தடுமாறுவதாக குறிப்பிட்ட அவர், இப்பேட்டியை பார்த்தால் AB டிவில்லியர்ஸ் தன்னை உடனடியாக அணுகி அட்வைஸ் தர வேண்டும் என கூறினார். மேலும், இரு பார்மெட்டுக்கு மத்தியில் தன்னால், சமநிலையை பெறமுடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிட்னி திருட்டு வழக்கில் திருச்சி தனியார் சிதார் ஹாஸ்பிடலின் லைசன்ஸை அரசு ரத்து செய்திருந்தது. ஆனால், அந்த உத்தரவை இன்று ஐகோர்ட் மதுரைக் கிளை ரத்து செய்தது. இதை கண்டித்துள்ள EPS, அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சிக்காரரின் ஹாஸ்பிடலை தப்பிக்க வைக்க, மக்கள் நலனை ‘Failure மாடல் ஸ்டாலின் அரசு’ புறந்தள்ளியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரில் நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் வசமாக சிக்கியுள்ளார். ஜாய் கிரிசில்டாவை 2-வது திருமணம் செய்ததாக, மகளிர் ஆணையத்தில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தான்தான் அப்பா என்றும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, DNA பரிசோதனை தேவையில்லை என மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

ODI உலகக்கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை PM மோடி நாளை(நவம்பர் 5) சந்திக்கவுள்ளார். இதற்காக, பிரதமர் அலுவகத்திலிருந்து BCCI-க்கு சிறப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி வீராங்கனைகள் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளனர். முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சிலர் ஆர்வக்கோளாறில் பல வித்தியாசமான செயல்களை செய்வர். ஆனால் இங்கு ஒருவர் 100-க்கும் மேற்பட்டோரின் உயிரை பணயம் வைத்து ஒரு சம்பவத்தை செய்துள்ளார். வாரணாசியில் இருந்து மும்பை செல்லவிருந்த ஆகாசா ஏர் விமானம், ஓடுபாதையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, சுஜித் சிங் என்ற பயணி, Emergency Exit-ஐ திறக்க முயன்றுள்ளார். விசாரித்ததில், ஆர்வம் காரணமாக திறந்ததாக விளக்கமளித்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

MGR ஆட்சிக் காலத்தில் 1985-89 வரை சபாநாயகராக இருந்த பி.ஹெச்.பாண்டியனின் மகன் தான், <<18194000>>மனோஜ் பாண்டியன்<<>>. பி.ஹெச்.பாண்டியன் தனது அரசியல் பலத்தால், 1993-ல் மனோஜ் பாண்டியனை அரசியலுக்கு கொண்டு வந்தார். அவரும் ஜெ.,வின் அன்பை பெற்று பல முக்கிய பொறுப்புகளை பெற்றார். 2001-ல் சேரன்மகாதேவியிலும், 2021-ல் ஆலங்குளத்திலும் போட்டியிட்டு MLA-வாக தேர்வானார். இதற்கிடையில், 2010-16 வரை ராஜ்யசபா MP-ஆகவும் இருந்தார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 750 Local Bank Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ★கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ★வயது: 20- 30 ★சம்பளம்: ₹48,480- ₹85,920 ★தேர்ச்சி முறை: Online Written Test, Local Language Proficiency Test & Personal Interview ★விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 23 ★முழு விவரங்களுக்கு <

மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நாளை தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே, பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம் மற்றும் கழக அடையாள அட்டையைக் கட்டாயம் தவறாமல் கொண்டு வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Ex அமைச்சர் பொன்முடி மீண்டும் திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சைவம், வைணவத்தை பெண்களுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசிய சர்ச்சையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் சாமிநாதனுக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், திமுகவில் து.பொ., எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவின் கிழக்கில் அமைந்துள்ள Kamchatka பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்வு 24 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த சேத விவரமும் பதிவாகவில்லை. இப்பகுதியில் உள்ள கண்டத் தட்டுகள் (Tectonic Plates) நகர்ந்து வருவதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.