News April 28, 2025

பிரபல நடிகை பியான்கா காஸ்ட்ரோ காலமானார்

image

‘RuPaul’s Drag Race’ நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற பிரபல நடிகை பியான்கா காஸ்ட்ரோ(44) காலமானார். பிலிப்பைன்ஸில் பிறந்த பியான்கா, தனது 10 வயதில் தாய், சகோதரருடன் அமெரிக்காவின் குயின்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். பின்னர் பெரும் சிரமத்திற்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்றார். அண்மையில், நோய்த்தொற்றுக் காரணமாக, அவருக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்தார். #RIP

News April 28, 2025

மகன் குறித்த சர்ச்சை கருத்து.. கடுப்பான பும்ரா மனைவி

image

MI போட்டியை நேரில் காண வந்த பும்ரா மனைவி சஞ்சனா பும்ரா விக்கெட் எடுக்கும் போது துள்ளிக்குதித்தார். ஆனால் உலகம் அறியாத அவர்களது ஒன்றரை வயது மகன் அங்கத் அமைதியாக இருந்தான். இதை வைத்து சிலர் அங்கத்துக்கு ஏதோ பிரச்சனை உள்ளது போல் சமூக ஊடங்களில் பேச சஞ்சனா கடுப்பானார். என் மகனை பற்றி ஒன்றுமே தெரியாமல், இதுபோல பேசுவது வருத்தம் அளிப்பதாக சஞ்சனா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

News April 28, 2025

இன்னும் அதிகப்படுத்தலாமே..!

image

வெயிலில் பைக் ஓட்டவே மக்கள் பயப்படுகின்றனர். குறிப்பாக, ட்ராபிக் சிக்னலில் நிற்கும் போது, தவித்து போய் விடுவார்கள். இதற்காக மாநகராட்சிகளின் சார்பில், சில இடங்களில் கிரீன் கலர் ஸ்கீரின்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்ற போதிலும், இது எங்கள் ஏரியாவிலும் கொண்டுவந்தால், நன்றாக இருக்கும் என்கிற கோரிக்கையும் அதிகமாக உள்ளது. இன்னும் எந்த ஏரியாவில் இந்த ஸ்கிரீன் வேண்டும்?

News April 28, 2025

கிடைக்குற இடத்துலலாம் Wifi கனெக்ட் பண்றீங்களா?

image

பொதுவாக எங்கு போனாலும், Free WiFi-யில் கனெக்ட் பண்ணும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால், அது ஆபத்தானது என மத்திய அரசின் CERT அமைப்பு எச்சரிக்கிறது. பாதுகாப்பற்ற இணைப்புகளின் மூலம் எளிதில் போனை ஹேக் செய்து, டேட்டா திருட்டு, நிதி இழப்பு போன்ற பிரச்னைகள் வரும் என CERT தெரிவிக்கிறது. அரசின் அங்கீகரிக்கப்பட்ட WiFi-கள் தவிர பிற WiFi-களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News April 28, 2025

இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் யார் கரெக்ட் சாய்ஸ்?

image

T20-ல் மிடில் ஆர்டரில் யாரை களமிறக்குவது என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர் என பலர் இருக்க, இதற்கு DC-யின் கோச் கெவின் பீட்டர்சன் ஒரு தீர்வை கொடுக்கிறார். கடந்த ஆண்டை விட கே.எல்.ராகுலின் ஆட்டம் மிக சிறப்பாக முன்னேறியிருப்பதாக குறிப்பிட்டு, அவரே கரெக்ட்டான சாய்ஸ் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யார் கரெக்ட்டா இருப்பாங்க?

News April 28, 2025

பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்!

image

பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பயங்கரவாதிகளைப் பிடிக்க, பஹல்காமின் காட்டு பகுதிகளில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. உளவுத்துறை அமைப்புகளின் தகவல்களின் அடிப்படையில், மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து ராணுவம், பயங்கரவாதிகளை 5 நாட்களில் 4 முறை கண்டதாகவும், இதில் ஒருமுறை துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

News April 28, 2025

ரீ-ரிலீசாகும் அல்டிமேட் காமெடி படம்..!

image

ஒரு சில படங்கள எத்தன தடவ பார்த்தாலும் சலிக்காது. அப்படி, ஓப்பனிங்ல இருந்து எண்டு வர குலுங்கி குலுங்கி சிரிச்சிட்டே இருக்கிற மாதிரி படம்தான் ‘சுந்தரா டிராவல்ஸ்’. முரளி – வடிவேலு சேர்ந்து கலக்கி இருக்கிற இந்த படம் மறுபடியும் தியேட்டருக்கு வரப்போகுதாம். 2002-ல் ரிலீசான இந்த படத்த அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் பண்ணப் போறாங்க. மிஸ் பண்ணிடாதீங்க. இந்த படத்துல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு கமெண்ட் பண்ணுங்க!

News April 28, 2025

16 பாகிஸ்தான் யூ-டியூப் சேனல்களுக்கு இந்தியா தடை

image

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 16 யூ-டியூப் சேனல்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை முன்வைத்து, டான் நியூஸ், சாம்னா நியூஸ், ஜியோ நியூஸ், அக்தர் யூ-டியூப் உள்ளிட்ட யூ-டியூப் சேனல்கள், இந்தியா, இந்திய ராணுவம்- பாதுகாப்புப் படைகள் குறித்து தவறான தகவலை பரப்பியதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த சேனல்களுக்கு இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

News April 28, 2025

BREAKING: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு

image

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை <<16241060>>CM ஸ்டாலின்<<>> வெளியிட்டுள்ளார். அதில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டுள்ளது. 01.01.2025 தேதியில் இருந்து கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ₹10,000-ல் இருந்து ₹20,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News April 28, 2025

பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா?

image

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசு இதனை கருத்தில் கொண்டு 3 வகை ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய குழு அமைத்திருந்தது. இந்த குழு செப்டம்பரில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை அடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து அரசு பரிசீலிக்கும்.

error: Content is protected !!