India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காலையில் எழுந்தவுடன் பின்பற்றும் சில பழக்கங்கள், அன்றைய நாள் முழுவதும் நம் மனநிலையில் நேர்மறையான தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். காலை பொழுதில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே போட்டோக்களாக பட்டியலிட்டுள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.

அரசு பஸ்களில் பொங்கல் தொடர் விடுமுறைக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. 90 நாள்களுக்கு முன்பான புக்கிங் வசதி இருப்பதால், சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக tnstc தளத்தில் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் பஸ்களில் புக்கிங் அதிகம் இருந்தால், சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு வெளியிடப்படும்.

அன்புமணி, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை BJP மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளதால், NDA கூட்டணிக்கு கூடுதல் கட்சிகளை அழைத்து வர BJP வியூகம் அமைத்து வருகிறது. இன்று பைஜயந்த் பாண்டா தலைமையில் பாஜக ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் அன்புமணி, தேமுதிகவுடன் கூட்டணியை உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்படும் என்று கூறப்படுகிறது.

சுல்தான், வாரிசு படங்களுக்கு பிறகு கோலிவுட்டில் நடிக்கவில்லை என்றாலும் ரஷ்மிகா மந்தனா மீது தமிழ் ரசிகர்களுக்கு க்ரஷ் உண்டு. அதற்கு ஏற்றார் போல் அவரும் அடிக்கடி போட்டோஷுட் நடத்தி, அவற்றை SM-ல் பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கிறார். ஒரு படத்திற்கு ₹8-10 கோடி சம்பளம் வாங்கும் அவரை மீண்டும் தமிழில் நடிக்க வைக்க கோலிவுட் வட்டாரம் முயற்சிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.

*காலை நேரத்தில் ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து குறைபாட்டை போக்க முடியும். *இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் மேம்படும். *இது உடலில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. *உடலின் ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சுதல் ஒழுங்குபடுவதால், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம் குறைகிறது. *சரும பிரச்னைகளை தீர்த்து இயற்கையான பொலிவை வழங்குகிறது. *உடலில் எனர்ஜி அதிகரிக்கிறது.

Chat Gpt-ஐ இனி கல்வி தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Chat Gpt மருத்துவம், சட்டம் மற்றும் நிதி சார்ந்தவற்றில் ஆலோசனைகளை வழங்காது என Open AI நிறுவனம் கூறியுள்ளது. Chat Gpt பயன்படுத்தி பலரும் மருத்துவரை நாடாமல் தாங்களாக சிகிச்சை எடுப்பது உயிருக்கு ஆபத்தாக மாறும் காரணத்தினால், Open AI நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

காரீப் பருவத்திற்காக விவசாயிகளுக்கு போதுமான அளவு யூரியா, உரங்களை வழங்கியுள்ளதாக மத்திய அரசின் உரங்கள் துறை தெரிவித்துள்ளது. 185.39 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவை என கணக்கிட்ட நிலையில், 230.53 லட்சம் மெட்ரிக் டன் இருப்பு உறுதி செய்யப்பட்டு, 193.20 லட்சம் மெட்ரிக் டன் விற்கப்பட்டதாக கூறியுள்ளது. இது கடந்த ஆண்டில் பயன்படுத்தியதை விட 4.08 லட்சம் மெட்ரிக் டன் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

*1884–தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் பிறந்தநாள். *1897–தாவரவியலாளர் ஜானகி அம்மாள் பிறந்தநாள். *1967–எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பு. *1972–நடிகை தபூ பிறந்தநாள். *2012–சமையல் கலைஞர் ஜேக்கப் சகாயகுமார் அருணி மறைந்த நாள். *2022–தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் மறைந்த நாள்.

பாடகர் ஜுபின் கார்க்கின் மரணமானது, விபத்து அல்ல அது கொலை என்று அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இவ்வழக்கை SIT தீவிரமாக விசாரிக்கும் நிலையில், டிச.8-ற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி அமித்ஷாவிடம் பேசியதாகவும், வெளிநாட்டில் அவர் மரணமடைந்ததால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பாலியல் குற்றங்களை தடுப்பதில் போலீசுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் கோவை கொடூரம் போன்ற சம்பவங்கள் நடப்பதாக செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுபோன்ற கோர நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் X-ல் அவர் கூறியுள்ளார். இத்தகைய வன்கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில் CM ஸ்டாலின் போலீசுக்கு உத்தரவுகளை பிறக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.