News October 22, 2025

நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போதும் பல மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது. மேலும், இன்றிரவு 10 மணி வரை <<18075508>>சென்னை உள்பட 29 மாவட்டங்களில்<<>> மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மழைப்பொழிவை பொருத்து மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பை வெளியிட உள்ளது.

News October 22, 2025

RJD vs காங்கிரஸ்: தொகுதி பங்கீட்டில் தொடரும் இழுபறி

image

பிஹாரில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக RJD, காங்கிரஸ் இடையே இழுபறி நீடிப்பதால், கூட்டணிக்குள் பதற்றம் நிலவுகிறது. இதை சரிசெய்ய காங்., கட்சியின் முக்கிய தலைவர்கள் பிஹாரில் முகாமிட்டு, தேஜஸ்வி யாதவ்வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் காங்., EX CM அசோக் கெலாட், 5 – 10 தொகுதிகளில் நட்பு ரீதியான சண்டை நீடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

‘அம்மா SORRY.. நான் சாகப்போறேன்’

image

‘அம்மா நான் தப்பு பண்ணிட்டேன். SORRY. எனது சாவுக்கு சக்திவேல், முத்துராஜ், முருகேசன்தான் காரணம்’. தென்காசியில் தற்கொலை செய்த இளம்பெண்(26) எழுதிய வரிகள் இவை. சக்திவேலுக்கும் அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை வைத்து பெண்ணிடம் பணம் பறித்த சக்திவேல், அவரது அந்தரங்க வீடியோவை லீக் செய்துள்ளார். இதனால், பெண் உயிரை மாய்த்துக் கொள்ள, நண்பர்கள் 2 பேருடன் சேர்த்து சக்திவேல் கம்பி எண்ணுகிறார்.

News October 22, 2025

GALLERY: ரெஸ்ட்டில் இவ்ளோ வகைகளா?

image

ரெஸ்ட் எடுக்கணும் என்றால், சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றுதானே யோசிப்போம். ஆனால், மனிதர்களுக்கு 6 வகையான ரெஸ்ட் தேவை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நமது உடலையும், மூளையும் மீண்டும் ‘Reset’ பண்ண இது தேவை என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றை பற்றி தெரிந்துகொள்ள, மேலே உள்ள போட்டோஸை Swipe பண்ணி பாருங்க. உங்களுக்கு இதில் எத்தனை விதமான ரெஸ்ட் தேவைப்படுது? கமெண்ட் பண்ணுங்க.

News October 22, 2025

ஆங்கிலத்தில் வெளியாகும் ‘காந்தாரா சாப்டர் 1’

image

‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ஆங்கில பதிப்பு வரும் 31-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசல் பதிப்பில் இருந்து அரை மணி நேர காட்சிகளை குறைத்து, ஆங்கில பதிப்பு வெளியாக உள்ளது. அதன்படி, ஆங்கில பதிப்பின் ரன்னிங் டைம், 2 மணி நேரம் 14 நிமிடங்கள் 45 விநாடிகள் ஆகும். பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இப்படம், இதுவரை உலகளவில் ₹800 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

News October 22, 2025

அப்துல் கலாமின் குரு ’ஏக்நாத் சிட்னிஸ்’

image

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை (இஸ்ரோ) தோற்றுவித்தவர்களில் ஒருவரான விஞ்ஞானி ஏக்நாத் சிட்னிஸ் மறைவுக்கு(1925-2025) பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இஸ்ரோவை உருவாக்க விக்ரம் சாராபாய் தேர்ந்தெடுத்த சிலரில் இவரும் ஒருவர். அப்போது இளம் விஞ்ஞானியாக இருந்த அப்துல் கலாமுக்கு வழிகாட்டி, DRDO தலைவராக, பின் ஜனாதிபதியாக உயர இவரும் ஒரு காரணமாக இருந்தார். 1985-ல் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. RIP

News October 22, 2025

அடுத்த மாநாட்டை அறிவித்தார் சீமான்

image

திருச்சியில் வரும் 2026 பிப்ரவரி 7-ம் தேதி ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டை’ நடத்த போவதாக சீமான் அறிவித்துள்ளார். நம் இனத்தின் திருவிழா என்பதால், அனைவரும் கூடுவோம் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை ‘மரங்களின் மாநாடு’, ‘மலைகளின் மாநாடு’, ‘ஆடு மாடுகளின் மாநாடு’ ஆகியவற்றை நடத்தியுள்ள அவர், வரும் நவம்பர் 15-ம் தேதி ‘தண்ணீர் மாநாட்டையும்’ நடத்த உள்ளார்.

News October 22, 2025

BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

image

பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தீவிர பாதிப்புள்ள நோயாளிகள், பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளை ஹாஸ்பிடலில் சேர்க்க அனைத்து மாவட்ட தலைமை ஹாஸ்பிடல்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கவும், தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்களை பழுதின்றி பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News October 22, 2025

சத்யா நாதெள்ளாவின் சம்பளம் ₹846 கோடி

image

மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெள்ளாவுக்கு இந்த வருஷம் எவ்வளவு இன்கிரீமெண்ட் தெரியுமா? கடந்த ஆண்டை விட 22% அதிகமாம். அதன்படி தற்போது அவர் ஆண்டுக்கு 96.5 மில்லியன் டாலர் (₹846 கோடி) சம்பளம் பெறுகிறார். சத்யா நாதெள்ளாவின் தலைமை மற்றும் அவரது குழுவால் AI துறையில் மைக்ரோசாப்ட் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், இதனால் நிறுவன பங்குகள் விலையும் உயர்ந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

News October 22, 2025

காதலர் தினத்தில் ‘ராட்சசன்’ காம்போ

image

‘ராட்சசன்’ மெகா வெற்றிக்கு பிறகு, அப்படத்தின் இயக்குநர் ராம்குமாரும், நடிகர் விஷ்ணு விஷாலும் இணைந்துள்ளதால், ‘இரண்டு வானம்’ படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. காதல் + அட்வெஞ்சர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை, 2026 பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். குறிப்பாக காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!