India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் தெரிவிக்கும் நிகழ்வு நிறைவடைந்துள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பாதிக்கப்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். அப்போது முக்கியமான அறிவிப்பாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடைய கல்வி, மருத்துவச் செலவுகளை ஏற்பதாகவும், வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் விஜய் உறுதியளித்துள்ளார்.

உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு விருப்பமான பழக்கம் உண்டு. அதில் சில முக்கியமான உறுப்புகள், அதன் செயல்பாட்டை சிறப்பாக வைத்திருக்க, என்ன செயல்கள் உதவியாக இருக்கும் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த தகவலை கமெண்ட்ல சொல்லுங்க

EPS-தான் ஒரே எதிரி என்ற மோடில் இயங்கிக்கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன். இதனால்தான் NDA கூட்டணி வேண்டாமென இருக்கிறார். அத்துடன் விஜய்யும் EPS உடன் சேரக்கூடாது என கூறி வருகிறார். ஆனால், விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், டிடிவி அடுத்து செல்லும் இடம் திமுகதான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்காகவே கரூர் மேட்டரில் ஆளும் தரப்புக்கு எதிரான கருத்துகளை அவர் சொல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

‘மொன்தா’ புயல் எதிரொலியாக அடுத்த 1 மணி நேரத்திற்கு சென்னை, செங்கை, கடலூர், கோவை, திண்டுக்கல், காஞ்சி, குமரி, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருக்கவும். SHARE IT.

முன்பெல்லாம் வீட்டில் சத்தான உணவுகளை செய்து சாப்பிடுவோம். ஆனால் இன்றைய சூழலில் எல்லாம் Fast Food தான். இதனால் பலரும் பலவீனமாக இருக்கிறார்கள். இதற்கு உளுந்தங்கஞ்சியை ரெகுலராக சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். வாரத்தில் 2 முறையாவது இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் அவர்கள், இதன் மூலம் மூட்டு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி உள்ளிட்டவைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த OPS-சிடம் ‘திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என CM கூறி இருக்கிறாரே’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால், திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக பதிலளித்தார். திமுகவா! என்று அழுத்தமாக கேட்ட உடனே, சுதாரித்துக் கொண்ட அவர், மக்கள் பேசிக் கொள்கிறார்கள்; என் மீது பழியை போட்டுவிடாதீங்க சாமி! என சிரித்துக் கொண்டே கூறினார்.

நடிக்கும்போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு, நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு என்ற போக்கு கொடுமையானது என சீமான் தெரிவித்துள்ளார். வேறு எங்கேயும் நடக்காத இது, இங்கு மட்டும் ஏன் நடக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், அரசியல் என்பது வாழ்வியல் என்று குறிப்பிட்டுள்ளார். தம்பி, தங்கைகளுக்கு ஒரு மூத்தவனாக சொல்கிறேன், அரசியலை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்தூரில் ஆஸி., கிரிக்கெட் அணி வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதற்கு அவர்களே தான் காரணம் என்பது போல ம.பி., பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேசியுள்ளார். இந்த சம்பவத்தில் இருந்து அவர்கள் பாடம் கற்க வேண்டும் என்ற அவர், யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்றது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கிரிக்கெட்டர்கள் பிரபலமானவர்கள் என்பதால், அவர்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் வாங்க SMAM Subsidy Scheme மூலம் மத்திய அரசு 40% – 80% வரை மானியம் வழங்குகிறது. இதனால் அவர்களின் நேரமும், உழைப்பும், பணமும் மிச்சமாகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது https://www.agrimachinery.nic.in/ -ல் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். மானியத்துக்கு தகுதி பெற்றால் உங்கள் மொபைல் நம்பருக்கு SMS அனுப்பப்படும். SHARE.

நடிகர் கார்த்தியின் ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’ படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே நானியின் ‘Hit-3’-ல் கேமியோ ரோல் செய்த அவர், ‘Hit-4’-ல் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் சிரஞ்சீவி, இயக்குநர் பாபி இணையும் அடுத்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.