News October 22, 2025

BREAKING: தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.22) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹300 குறைந்து ₹11,700-க்கும், சவரன் ₹93,600-க்கும் விற்பனையாகிறது. <<18068993>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை 5% சரிந்திருந்த நிலையில், இந்திய சந்தையிலும் பெரிய அளவில் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 22, 2025

தென் தமிழகத்தில் இது முக்கியம்: துருவ் விக்ரம்

image

சாதி ஒரு பேய் என்று மாரி செல்வராஜ் கூறியிருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக ‘பைசன்’ பட கதாநாயகன் துருவ் விக்ரமிடம் கேட்கப்பட்டது. அதற்கு, மாரி செல்வராஜ் தான் கடந்து வந்த பாதைகளில் இருந்தே படத்தை இயக்குகிறார் என துருவ் தெரிவித்தார். இந்தியா போன்ற ஒரு சமூக கட்டமைப்பு உள்ள நாட்டில், குறிப்பாக தென் தமிழகத்தில் சினிமா உள்ளிட்ட கலை மூலம் சாதி பிரச்னையை வெளிப்படையாக பேசுவது முக்கியம் என்றும் கூறினார்.

News October 22, 2025

விஜய் அரசியலுக்கு அடுத்தடுத்து இடர்களா?

image

செப்.27-ல் நிகழ்ந்த கரூர் துயரத்திற்கு பிறகு விஜய் வெளியில் தலைகாட்டவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை ஆன்லைன் மூலமே அனுப்பிவிட்டார். 16 நாள்கள் துக்கம், தீபாவளி விடுமுறை என 25 நாள்கள் கடந்துவிட்டன. தற்போது கனமழையும் பெய்ய தொடங்கிவிட்டது. இதனால் விஜய்யின் கரூர் பயணம் மட்டுமல்லாது, அவரது அரசியலுக்கும் அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் வருவதாக தவெகவினர் புலம்புகின்றனர்.

News October 22, 2025

BREAKING: இன்று மாலை உருவாகிறது.. கனமழை அலர்ட்

image

வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என IMD கணித்துள்ளது. இது, வட தமிழகம் – தெற்கு ஆந்திரா இடையே கரையை நோக்கி நகரும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புகள் குறைவு எனவும், அதேநேரம் நிலப்பகுதிக்கு அருகே உள்ளதால் கனமழை பெய்யும் எனவும் IMD தெரிவித்துள்ளது.

News October 22, 2025

BREAKING: நீலகிரி சுற்றுலாத் தளங்கள் மூடல்

image

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், மழை பெய்துகொண்டே இருப்பதால், மலைப்பாதையில் அவர்கள் ஊர் திரும்புவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

News October 22, 2025

மீண்டும் ரஷ்யா தாக்குதல்.. 10 வயது சிறுமி உயிரிழப்பு

image

ரஷ்யா – உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நேற்று உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில், ரஷ்யா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 10 வயது சிறுமி உள்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலால் சில இடங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

News October 22, 2025

டிராபியை தரேன்; ஆனா ஒரு கண்டிஷன்: மோசின் நக்வி

image

Asia Cup டிராபியை எடுத்துச்சென்ற ACC தலைவர் மோசின் நக்வி உடனே அதை இந்திய அணியிடம் வழங்குமாறு <<18063977>>BCCI இ-மெயில்<<>> அனுப்பியது. இந்நிலையில் மோசின் நக்வி, BCCI-க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நவ.10 அன்று துபாயில் இந்திய அணிக்கு ஆசிய கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் இந்திய வீரர்களும், கேப்டன் SKY-ம் பங்கேற்றால்தான், கோப்பையை வழங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

News October 22, 2025

குழந்தை பாக்கியம் உண்டாக சஷ்டியில் மிளகு விரதம்!

image

சஷ்டியில் மிளகு விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பார்கள். அதாவது சஷ்டி முதல் நாளில் ஒரே ஒரு மிளகு, தண்ணீர் குடித்து காலை உணவை சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். 2-வது நாளில் 2 மிளகு, 3-வது நாளில் 3. இப்படி சஷ்டியின் ஒவ்வொரு நாளும் மிளகின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே சென்று, 6-வது நாள் 6 மிளகு சாப்பிட்டு, முருகனை வேண்டி, விரதத்தை நிறைவு செய்யவேண்டும் எனும் ஐதீகம் இருக்கிறது.

News October 22, 2025

மழை பாதிப்பு: டெல்டாவுக்கு விரையும் இபிஎஸ்

image

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்புகளைப் பார்வையிட இன்று(அக்.22) EPS நேரில் செல்கிறார். தஞ்சாவூர் அம்மாபேட்டை புத்தூர், நல்ல வன்னியன் குடிகாடு, காட்டூர் மற்றும் திருவாரூரில் மன்னார்குடி, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல்மணிகள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நேரில் ஆறுதல் கூற உள்ளார்.

News October 22, 2025

மீண்டும் மீண்டுமா? டிரம்ப் சர்ச்சை – மோடி மெளனம்

image

இந்தியா மீது வரி விதிப்பு, போர் நிறுத்தம், ரஷ்ய எண்ணெய் குறித்து சர்ச்சை கருத்து, இந்தியா மறுப்பு, மோடி என் நண்பர்… ரிப்பீட்டு… அண்மை காலமாக டிரம்பின் வாடிக்கையாகவே மாறிவிட்டது இது. ஆனால் இது குறித்து தற்போது வரை PM மோடி மெளனம் கலைக்கவில்லை. உண்மையில் இருநாட்டு உறவுகளின் நிலை என்ன? PM மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையே என்னதான் நடக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!