India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
NDA-வின் து.ஜனாதிபதி வேட்பாளராக CPR-ஐ களமிறக்கியதற்கு பின்னால் கொங்கு வாக்காளர்களை கவரும் பாஜகவின் பிளான் இருப்பதாக கூறப்பட்டது. அதோடு, CPRஐ திமுக ஆதரிக்க தவறினால் அது அவர்களுக்கு பேக் ஃபயர் ஆகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், அதே கொங்கு பெல்ட்டை சேர்ந்தவரான இஸ்ரோ மயில்சாமி அண்ணாதுரையின் பெயரை திமுக பரிந்துரைத்துள்ளதாம். திமுகவின் இந்த மாஸ்டர் பிளான் வொர்க் அவுட் ஆகுமா?
பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. டிரம்ப் 50% வரி விதித்ததால், தமிழக உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு CM ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஆக.19 முதல் செப்.30 வரை பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு விலக்கு அளித்து, மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. துணை ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதேபோல், INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்று பிற்பகல் 12:30 மணிக்கு கூட்டணி கட்சிகள் ஆலோசிக்க உள்ளன.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. சட்டப்பேரவை இயற்றிய மசோதாக்களை கிடப்பில் போடுவதாக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அதில், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் கவர்னரும், ஜனாதிபதியும் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹73,880-க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ₹9,235-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹126-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,26,000-க்கும் விற்பனையாகிறது.
2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. சுப்மன் கில் அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என கூறப்படுகிறது. டி20 ஃபார்மெட்டில் வரும் செப்டம்பர் 9-ம் தேதி துபாய் மற்றும் அபுதாபியில் இந்த போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியா vs பாகிஸ்தான் மோதும் போட்டிகள் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது.
அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்க, ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு தைலாபுரம் தோட்டத்தில் சற்றுநேரத்தில் கூடுகிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணிக்கு, ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் அவரது தரப்பில் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால், அவர் மீது நடவடிக்கை பாய உள்ளது.
இன்று உலக மனிதாபிமான தினம். துயரத்தில் இருப்பவருக்கு நம்பிக்கையாக, பசியால் வாடுபவருக்கு அன்னமாக, கண்ணீரில் மூழ்குபவருக்கு ஆறுதலாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். மனிதர்களின் இதயத்தில் கருணை இருந்தால் உலகம் அமைதி அடைந்து, அன்பு, சகோதரத்துவம் நிரம்பிய தாயகமாகிறது. அதனை நோக்கி முன்னேறுவது மனிதனின் ஆகச்சிறந்த பணியாகும். மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்வது Best quality அல்ல, அது Basic quality.
INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் நேற்று தீவிர ஆலோசனை நடத்திய நிலையில், வேட்பாளரை தேர்வு செய்யும் இறுதி அதிகாரம் காங்., தலைவர் கார்கேவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் 21-ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது, பாம்பன், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி உள்ளிட்ட அனைத்து துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவான நிலையில், இன்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.