News April 28, 2025

3 குழந்தைகளுக்கு தாயான ஸ்ரீலீலா…. குவியும் பாராட்டு

image

தெலுங்கில் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இவர் 2022-ல் 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், 3-வதாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளதாக ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார். அக்குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவரின் தாய் உள்ளத்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.

News April 28, 2025

இபிஎஸ்-க்கு அரசியல் வீழ்ச்சி கவுண்ட்டவுன் ஸ்டார்ட்

image

அமைச்சரவை மாற்றம் குறித்து விமர்சித்த இபிஎஸ்-க்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். குடும்பத்திற்காக கூட்டணி வைத்த இபிஎஸ்ஸின் அரசியல் வீழ்ச்சியின் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது எனக் கூறிய அவர், இபிஎஸ் ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா? என கேள்வி எழுப்பினார். மேலும், தோல்வியில் சாதனை படைக்கும் ‘தோல்விசாமி’, அதிமுகவை பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு செல்வதாகவும் விமர்சித்துள்ளார்.

News April 28, 2025

மூன்று நாள்கள் போர் நிறுத்தம்

image

உக்ரைன் மீதான போர் 3 நாள்கள் நிறுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். மே 8 முதல் மே 10 வரை போர்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மே 9-ம் தேதி இரண்டாம் உலகப்போரின் வெற்றி தின கொண்டாட்டம் நடைபெறவிருப்பதால், புடின் இந்த முடிவை எடுத்திருக்கிறார். மேலும், இந்த போர்நிறுத்தம் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News April 28, 2025

பொள்ளாச்சி வழக்கில் விரைவில் தீர்ப்பு

image

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பளிக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம். 2019-ம் ஆண்டு 19 வயது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில் தொடங்கிய விசாரணை, பூதாகரமாகி நாட்டையே உலுக்கியது. 9 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியது, பின்னர் CBI விசாரணையில் அம்பலமானது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்திருக்கும் நிலையில் மே 13-ம் தேதி தீர்ப்பு வருகிறது.

News April 28, 2025

காவலர்களுக்கு வார விடுமுறை.. உறுதி செய்த ஐகோர்ட்

image

காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை, வாரம் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வார விடுமுறை வழங்குவது தொடர்பான அரசாணையை முறையாக நடைமுறை படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்ட ஐகோர்ட், விடுமுறை வழங்க தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

News April 28, 2025

இப்படி தர்பூசணியை சாப்பிட்டால் பிரச்னைதான்!

image

சம்மர் சீசனில் பலரும் விரும்பும் பழமாக இருக்கிறது தர்பூசணி. ஆனால், அதைச் சாப்பிடும்போது நிச்சயம் கவனம் வேண்டும். இல்லையேல், அது ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிட்டால் வாயு ஏற்படலாம். அதே போல, அதிக அளவில் தர்பூசணியை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். மேலும், பித்தம், வயிற்று பிரச்னை போன்றவை உண்டாக வாய்ப்பிருக்கிறதாம்.

News April 28, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் & கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, சேலம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, நாகை & நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News April 28, 2025

பங்குச்சந்தை கிடுகிடுவென உயர்வு

image

வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் கணிசமான உயர்வை கண்டுள்ளன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 289 புள்ளிகள் உயர்ந்து, 24,328 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,005 புள்ளிகள் உயர்ந்து, 80,218 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. எண்ணெய் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் & பொதுத்துறை வங்கிகள் இன்று உயர்வு கண்டுள்ளன. உங்களின் லாபம் அதிகரித்திருக்கிறதா?

News April 28, 2025

3 நாள்களில் 1 சவரன் தங்கம் ₹2,800 சரிவு

image

ஏப்.22-ல் <<16240956>>தங்கம்<<>> விலை 1 கிராம் ₹9,290ஆகவும், 1 சவரன் ₹74,320 ஆகவும் அதிகரித்தது. அதற்கடுத்து 23, 24-ம் தேதிகளில் 1 கிராம் தங்கம் ₹285-ம், 1 சவரன் ₹2,280-ம் குறைந்தது. அதன்பிறகு 3 நாள்களாக விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று கிராமுக்கு ₹65-ம், சவரனுக்கு ₹520-ம் குறைந்துள்ளது. அதாவது, 3 நாள்களில் 1 கிராம் 350-ம், 1 சவரன் ₹2,800-ம் வீழ்ச்சியடைந்துள்ளது.

News April 28, 2025

3 நாள்களில் 1 சவரன் தங்கம் ₹2,800 சரிவு

image

ஏப்.22-ல் <<16240956>>தங்கம்<<>> விலை 1 கிராம் ₹9,290ஆகவும், 1 சவரன் ₹74,320 ஆகவும் அதிகரித்தது. அதற்கடுத்து 23, 24-ம் தேதிகளில் 1 கிராம் தங்கம் ₹285-ம், 1 சவரன் ₹2,280-ம் குறைந்தது. அதன்பிறகு 3 நாள்களாக விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று கிராமுக்கு ₹65-ம், சவரனுக்கு ₹520-ம் குறைந்துள்ளது. அதாவது, 3 நாள்களில் 1 கிராம் 350-ம், 1 சவரன் ₹2,800-ம் வீழ்ச்சியடைந்துள்ளது.

error: Content is protected !!