News October 22, 2025

wwc: மழையால் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்

image

மகளிர் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் விளையாடிய தெ.ஆப்பிரிக்கா 312 ரன்களை குவித்தது. கேப்டன் லாரா வால்வார்ட் 90 ரன்கள் அடித்து அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். ஆனால் மழை குறுக்கிட்டதால், DLS விதிப்படி 20 ஓவர்களில் 234 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமைய, 20 ஓவர்களில் 83 ரன்களை மட்டுமே எடுக்க படுதோல்வியடைந்தது.

News October 22, 2025

₹343 லட்சம் கோடி.. ஆப்பிளின் வரலாறு காணாத உச்சம்

image

ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளன. ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகளவு விற்பனையானதால், அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹343 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் ₹390 லட்சம் கோடியுடன் Nvidia உள்ளது.

News October 22, 2025

மகளின் புகைப்படத்தை வெளியிட்ட தீபிகா படுகோன்

image

ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதி, தங்களது மகளின் புகைப்படத்தை தீபாவளி ஸ்பெஷலாக பகிர்ந்துள்ளனர். கடந்த 2024 செப்டம்பரில் அந்த நட்சத்திர தம்பதிக்கு குழந்தை பிறந்த நிலையில், தற்போதுதான் முதல்முறையாக மகள் துவா படுகோன் சிங்கை வெளியுலகத்திற்கு காட்டியுள்ளனர். பாரம்பரிய உடையில், மழலை கொஞ்சும் சிரிப்பில் இருக்கும் துவாவிற்கு நெட்டிசன்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.

News October 22, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News October 22, 2025

டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

image

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹங்கேரியில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தயாரிப்பு பணிகளுக்கு இன்னும் நேரம் தேவைப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை தங்களிடம் வழங்க வேண்டும் என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

News October 22, 2025

இயக்குநரின் இரக்கமற்ற ட்வீட்.. கடும் எதிர்ப்பு

image

இந்தியாவில் ஒரு நாள் மட்டுமே தீபாவளி என்றும், காஸாவில் ஒவ்வொரு நாளுமே தீபாவளி எனவும் X-ல் இயக்குநர் ராம் கோபால் வர்மா பதிவிட்டது சர்ச்சையாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காஸாவில் குழந்தைகள் உள்பட 68,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதனை தீபாவளி கொண்டாட்டத்துடன் ஒப்பிடும் ராம் கோபால் வர்மா மனிதனாக வளர்ச்சி பெற பல ஆண்டுகள் ஆகும் என்று சாடும் நெட்டிசன்கள், அவரை ஈவு இரக்கமற்றவர் என விமர்சித்துள்ளனர்.

News October 22, 2025

மழைக்காலத்தில் உதவும் டிப்ஸ்!

image

*மழைக்காலம் ஆரம்பித்தாலே, கொசுக்களின் ஆதிக்கமும் துவங்கி விடும். இதிலிருந்து தப்பிக்க, நெருப்பில், வேப்பிலை போட்டு, புகை போடலாம்.
*ஜில்லென்று இருக்கும் துணிகளை மடித்து, கம்பளியில் சுருட்டி, நான்கு மணி நேரம் கழித்து எடுத்தால், வெயிலில் காய வைத்தது போன்று மொட மொடப்பாக இருக்கும்.
*ஆடைகளில் சேறு படிந்தால், உருளைக்கிழங்கை நறுக்கி, சேறு உள்ள இடத்தில் தேய்த்து, பின், துவைத்தால், கறை மறைந்து போகும்.

News October 22, 2025

நாளை இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

image

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை(அக்.22) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், கவனமுடன் இருங்கள்!

News October 22, 2025

4 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கனில் இந்திய தூதரகம்

image

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள இந்திய அரசின் அலுவலகத்தை தூதரகமாக மேம்படுத்தி, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இருதரப்பு உறவை மேம்படுத்தும் முயற்சி இதுவென்றும் தெரிவித்துள்ளது. 2021-ல் தாலிபன்கள் ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றியதும், இந்தியா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது. இருப்பினும், 2022-ல் சில அதிகாரிகளுடன் அலுவல் குழு அனுப்பி வைக்கப்பட்டது.

News October 22, 2025

ராசி பலன்கள் (22.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!