News April 24, 2025

பிரபல நடிகர் டேமியன் ஸ்டோன் காலமானார்

image

பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடி பில்டருமான டேமியன் ஸ்டோன் (32) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மால்டோவாவில் பிறந்த இவர், தனது நேர்த்தியான நடிப்பு, உடலமைப்பால் பலரையும் கவர்ந்தார். தன்பாலின ஈர்ப்பாளராக அறியப்பட்ட இவர், சில ஆபாச படங்களிலும் நடித்துள்ளார். USA-வின் பென்சில்வேனியாவில் வசித்து வந்த இவர் 3 முறை பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #RIPDamienStone

News April 24, 2025

பஹல்காமில் தாக்குதல் நடத்தியது 7 தீவிரவாதிகள்

image

பஹல்காமில் தாக்குதல் நடத்தியது 7 தீவிரவாதிகள் என்றத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து எனப்படும் பைசாரன் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 28 பேரைக் கொன்றனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 5 தீவிரவாதிகள் பாகிஸ்தானியர் என்பதும், அவர்கள் உருது மொழி பேசியதும், எஞ்சிய 2 பேர் காஷ்மீரிகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News April 24, 2025

நடிகைகள் ரேப்: இயக்குநர் மீதான வழக்கு மறுவிசாரணை

image

ME TOO விவகாரம் எழுந்தபோது, ஹாலிவுட் இயக்குநர் ஹார்வி வெயின்ஸ்டன் மீது நடிகைகள் உள்ளிட்ட சுமார் 80 பேர் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட புகார்களைத் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான வழக்கில் 2020-ல் அவருக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் மேலும் 2 பேர் தெரிவித்த புகார்கள் அடிப்படையில் வழக்கு மீது மறுவிசாரணை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹார்வி வெயின்ஸ்டன் வீல் சேரில் வந்து ஆஜரானார்.

News April 24, 2025

நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்.. பாக்.கிற்கு என்ன பாதிப்பு? (1/2)

image

நேரு-அயூப்கான் முன்னிலையில் உலக வங்கி மத்தியஸ்தத்துடன் 1960-ல் இந்தியா, பாக். இடையே சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கிழக்கு நதிகளான சட்லஸ், பீயாஸ், ராவி நதிநீர் அனைத்தும் இந்தியாவுக்கும், சிந்து, ஜீலம், செனாப் நதிநீர் பாகிஸ்தானிற்கும் என தீர்மானிக்கப்பட்டது. இதன்மூலம் 33 மில்லியன் ஏக்கர் இந்திய விவசாய நிலமும், 135 மில்லியன் ஏக்கர் பாகிஸ்தான் விவசாய நிலமும் பயனடையும்.

News April 24, 2025

நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்.. பாக்.கிற்கு என்ன பாதிப்பு? (2/2)

image

மேடான இந்திய பகுதிகளில் உருவாகி கீழ்நோக்கி வரும் இந்நதிகளின் நீரையே பாகிஸ்தான் விவசாயிகள் அதிகம் நம்பி உள்ளனர். பாகிஸ்தானில் குடிநீருக்கும் இந்நீரே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் இந்நீரை இந்தியா வழங்கி வந்தது. தீவிரவாதத்தை தூண்டிவிடுவதை நிறுத்தாததால், தற்போது இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

News April 24, 2025

கும்பகோணத்தில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’

image

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க காங்கிரஸ், பாமக, விசிக, தமாக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்ததாகவும், பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக திகழ்ந்து கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவருக்கு செய்யும் கவுரவம் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

News April 24, 2025

ஸ்ரீநகருக்கான விமானக் கட்டணம் பாதியாக சரிவு

image

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஸ்ரீநகருக்கான விமானக் கட்டணம் சரிந்துள்ளது. டெல்லி-ஸ்ரீநகருக்கு சென்று வரும் கட்டணம் ரூ.24,000 வரை அதிகரித்திருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலால் பயணிகள் முன்பதிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் ரூ.11,200ஆக சரிந்துள்ளது. இதேபோல், சென்னை-ஸ்ரீநகர் இடையேயான கட்டணம் ரூ.19,960ஆக இருந்தது. அக்கட்டணம் 51% சரிந்து ரூ.9,775ஆக குறைந்துள்ளது.

News April 24, 2025

+2-க்கு அப்புறம் டிஜிட்டல் மார்க்கெட்டிங்

image

எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு ஒரு சூப்பர் சாய்ஸ். டிப்ளமோவில் தொடங்கி முதுகலை படிப்பு வரை இருக்கிறது. Market Research Analyst, Content Marketer/Manager என பல வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தொடக்க சம்பளமாகவே ₹25,000 – ₹40,000 வரை வழங்கப்படுகிறது. ஃபேஸ்புக், கூகுள் தளங்களில் இலவசமாக கிளாஸ் எடுக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

News April 24, 2025

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்

image

அரசு ஊழியர்களை பணியைவிட்டு நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் டாட்ஜ்(DOGE) துறை தலைவர் பதவியிலிருந்து எலான் மஸ்க் விலகியுள்ளார். USA அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு உருவாக்கப்பட்ட இந்த புதிய துறை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறுவேன் என்றும் மஸ்க் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

News April 24, 2025

இந்தியாவில் பாமாயில் இறக்குமதி அதிகரிப்பு

image

5 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவின் பாமாயில் இறக்குமதி உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் விலை குறைவான சோயாபீன் எண்ணெயின் சந்தைப்பங்கு அதிகரித்ததால் வீழ்ச்சியடைந்த பாமாயில் இறக்குமதி, வருகிற ஜூலை – செப்டம்பரில் 7 லட்சம் டன் அதிகரிக்கும் என எண்ணெய் டீலர்கள் கூறுகின்றனர். தற்போது சோயாபீன் எண்ணெய் விலையை விட பாமாயில் விலை குறைந்ததால், அதன் தேவை அதிகரித்துள்ளதும் இறக்குமதி உயர்வுக்கு காரணம்.

error: Content is protected !!