News April 24, 2025

பிரபல நடிகர் டேமியன் ஸ்டோன் காலமானார்

image

பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடி பில்டருமான டேமியன் ஸ்டோன் (32) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மால்டோவில் பிறந்த இவர், தனது நேர்த்தியான நடிப்பு, உடலமைப்பால் பலரையும் கவர்ந்தார். தன்பாலின ஈர்ப்பாளராக அறியப்பட்ட இவர், சில ஆபாச படங்களிலும் நடித்துள்ளார். USA-வின் பென்சில்வேனியாவில் வசித்து வந்த இவர் 3 முறை பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #RIPDamienStone

News April 24, 2025

ஓபிஎஸ்சுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணியா?

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-சை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ், அவரின் 2 மகன்களை நேற்று சீமான் சந்தித்துப் பேசினார். எதற்காக 3 பேரையும் அவர் திடீரென சந்தித்தார் என்றத் தகவல் இல்லை. இதுகுறித்து பேட்டியளித்துள்ள சீமான், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

News April 24, 2025

நயன்தாராவுடன் மோதலா?.. சுந்தர்.சி ஓபன் டாக்!

image

‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பின்போது நயன்தாராவுடன் மோதல் என பரவிய செய்திக்கு படத்தின் இயக்குநர் சுந்தர்.சி பதிலளித்துள்ளார். நயன்தாரா மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நடிகை எனக் குறிப்பிட்ட சுந்தர்.சி, தனக்கும் அவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என விளக்கமளித்துள்ளார். இதுபோன்று வெளியாகும் கிசுகிசுகளுக்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

News April 24, 2025

T20 கிரிக்கெட்டில் ஹிட்மேனின் அசாத்திய சாதனை!

image

T20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். அவர், 456 மேட்சுகளில் இந்த சரித்திர சாதனையை எட்டியுள்ளார். இதற்கு முன்னர், விராட் கோலியும் T20-ல் 12,000 ரன்களை அடித்து இருக்கிறார். சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக, 12,000 ரன்களை அடித்த 8-வது வீரர் என்ற பெருமையையும் ரோஹித்தை சாரும். உங்களுக்கு பிடிச்ச ரோஹித் இன்னிங்ஸ் எது?

News April 24, 2025

கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு

image

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், காஷ்மீரில் முக்கிய செய்தித்தாள்கள் முதல் பக்கத்தில் கருப்பு நிறத்துடன் செய்திகளை பிரசுரித்திருந்தன. பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு அந்த செய்தித்தாள்களில் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்து கடும் வார்த்தைகளில் தலைப்புகள் வெளியாகி இருந்தன. தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் காஷ்மீர் மக்களின் பேட்டிகளும் அதிகம் இடம் பெற்றிருந்தன.

News April 24, 2025

மயோனைஸ் விற்பனைக்கு தடை: அரசு அதிரடி முடிவு

image

பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு மாநில உணவு பாதுகாப்புத்துறை திடீர் தடை விதித்துள்ளது. ஓராண்டுக்கு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மையோனைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டையால், உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்புள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2025

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு..

image

திருப்பதியில் வரும் ஜூலை மாதத்தின் ₹300-க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் புக்கிங், இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் நேற்று காலை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. டிக்கெட் பெற <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

News April 24, 2025

இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்த USA துணை அதிபர்

image

USA துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி, குழந்தைகளுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். ஜெய்ப்பூர் அரண்மனையை நேற்று அவர் பார்வையிட இருந்தது. ஆனால் திடீரென அதை ரத்து செய்து விட்டார். அத்துடன் இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு குடும்பத்தினருடன் USA -க்கு வான்ஸ் இன்று புறப்பட்டுச் சென்றார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, அவர் பயணத்தை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.

News April 24, 2025

உயிரிழக்கையில் கர்ப்பமாக இருந்த நோவா பட நடிகை

image

நோவா பட நடிகை Sophie Nyweide உயிரிழக்கையில் கர்ப்பமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது. நோவா, பெல்லா, சேடோஸ் அன்ட் லைஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் Sophie Nyweide. 24 வயதான அவர் அண்மையில் நதிக்கரையோரம் திடீரென உயிரிழந்து கிடந்தார். அவர் இறப்புக்கான காரணம் தெரியாத நிலையில், அதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

News April 24, 2025

பஹல்காமில் குதிரை சவாரி தொழிலாளி பலியான சோகம்

image

சையது அடில் ஹுசைன் ஷா என்ற குதிரை சவாரி தொழிலாளி, சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் நோக்கில் தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றபோது சுடப்பட்டு உயிரிழந்தார். குடும்பத்தின் மூத்த பிள்ளையான இவர் ஒருவரின் சம்பளமே ஒரே வருமானம் என அவரது பெற்றோர், மனைவி ஆகியோர் கண்ணீர் விடுகின்றனர். அதேநேரம், சையதுவின் குடும்பத்தை அரசு பார்த்துக்கொள்ளும் என J&K CM உமர் அப்துல்லா உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!