News August 19, 2025

படம் எடுக்கலாம்.. ஸ்கூல் பசங்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்பட மன்றம் சார்ந்த போட்டிகள் நாளை(ஆக.20) தொடங்கவுள்ளது. இதில், ‘ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான்’ என்ற 3 நிமிட படத்துக்கு கதையுடன் வசனம் எழுதுதல், மரங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் 1 நிமிட படத்தை உருவாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. மார்க் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். நீங்க ரெடியா..!

News August 19, 2025

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்: CM ஆலோசனை

image

துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக CM ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன், முத்தரசன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் மற்றும் திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து CM ஸ்டாலின் ஆலோசித்துள்ளார்.

News August 19, 2025

எப்போதும் சோர்வாவே இருக்கீங்களா? இதோ 7 டிப்ஸ்!

image

▶தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்வது சிறந்தது.▶இரவு 10 மணிக்கு தூங்கப் பழகுங்கள்; 8 மணி நேர தூக்கம் அவசியம். ▶காலையில் உடற்பயிற்சி/யோகா செய்வது நல்லது. ▶காலையில் நார் சத்து நிறைந்த உணவை சாப்பிடுங்கள். ▶பிடித்த பாடலை கேட்டுவிட்டு அலுவலகத்துக்கு புறப்படுங்கள். ▶நாள் முழுவதும் மனநிலையை சீராக வைக்க போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள்.▶காஃபீன், Junk Food-ஐ தவிருங்கள்.

News August 19, 2025

FLASH: நாய் கடிக்கு ஒரே நாளில் 2 பேர் பலியான சோகம்

image

சென்னை, சேலத்தில் நாய் கடிக்கு அடுத்தடுத்து இருவர் உயிரிழந்தனர். சேலம், இலவம்பாளையத்தை சேர்ந்த குப்புசாமி(43) 2 மாதங்களுக்கு முன்பு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டார். அவர் முறையாக சிகிச்சை எடுத்து கொள்ளாததால் ரேபிஸ் நோய்க்கு ஆளாகி இன்று உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் சென்னை குமரன்நகரில் தடைசெய்யப்பட்ட Pit Bull நாய் கடித்ததில் கருணாகரன்(55) சற்றுமுன் உயிரிழந்தார். தெருவில் நாய்களிடம் உஷார்!

News August 19, 2025

லிப்ஸ்டிக் போடும் பெண்களே உஷார்..!

image

பெண்களின் மேக்கப்பில் கண்டிப்பாக இடம்பெறும் லிப்ஸ்டிக்கை, வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. லிப்ஸ்டிக் அட்டையில் ‘PPA Free’ என எழுதியிருந்தால் மட்டுமே வாங்குங்க. இந்த PPA(bisphenol A) இருக்கும் லிப்ஸ்டிக்கை உபயோகித்தால், உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது. பொதுவாக அனைத்து லிப்ஸ்டிக்கிலும் இது இருக்காது என்றாலும், கவனமாக இருந்துக்கோங்க!

News August 19, 2025

PM மோடியை சந்தித்த சீன அமைச்சர் வாங் யி

image

டெல்லியில் PM மோடியை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இரு நாட்டு எல்லைப் பிரச்னை, வர்த்தகம், கல்விக்கான விசா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியா – சீனா இடையேயான நல்லுறவுக்கு இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

News August 19, 2025

CP ராதாகிருஷ்ணன் Vs சுதர்சன் ரெட்டி.. யாருக்கு வெற்றி?

image

துணை ஜனாதிபதி ரேஸில் தென்னிந்தியர்கள் இருவர் மோதுகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி NDA-வின் CP ராதாகிருஷ்ணனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகும். லோக்சபா, ராஜ்யசபா 2 அவைகளிலும் 782 பேர் உள்ளனர். இதில், 6 இடங்கள் காலியாக உள்ளன. LS-ல் NDA-வுக்கு 293, INDIA-வுக்கு 249 MP-க்கள் உள்ளனர். RS-ல் NDA-வுக்கு 130 MP-க்கள் உள்ளனர். இதனால் வெற்றிக்கு தேவையான 392-ஐ விட NDA அதிக வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. SHARE IT.

News August 19, 2025

வார விடுமுறை.. ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு

image

வார விடுமுறையையொட்டி ஆக. 22, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்களை TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கும், கோயம்பேட்டிலிருந்து நாகை, ஓசூர், பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளன. பிற நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.

News August 19, 2025

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க கேமிங் மசோதா அறிமுகம்

image

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மக்களவையில் கேமிங் மசோதா நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான மோசடிகள் தொடர்ந்து அரங்கேறும் நிலையில் அதை தண்டனைக்குரிய குற்றமாக குறிப்பிட்டு PM மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் கேமிங் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரபலங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்த கூடாது. இதற்கு ஏற்கனவே 28% ஜிஎஸ்டி வரி உள்ளது.

News August 19, 2025

திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி: EPS

image

TASMAC கடைகளில் பாட்டிலுக்கு ₹10 அதிகம் வாங்கி 4 ஆண்டுகளில் ₹22,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக EPS விமர்சனம் செய்துள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகம் மீட்போம்’ பரப்புரையின் 100-வது தொகுதியான காட்பாடியில் பேசி வரும் அவர், திமுக ஆட்சியில், விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதாகவும், கொரோனா காலத்தில் மக்களை கண் இமைபோல் காத்த அதிமுக அரசை மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்றார்.

error: Content is protected !!