News April 24, 2025

வாழ்க்கையையே மாற்றும்.. இந்த பழக்கங்கள் இருக்கா!

image

நம்மிடம் இருக்கும் சிறு சிறு பழக்கங்களே, வாழ்க்கையில் நமக்கு பெரிய மாற்றத்தை கொடுக்கும் ✦வாழ்வில் நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ளுங்கள் ✦பொறாமைப்பட்டு ஒன்றையும் நீங்கள் சாதித்து விட போவதில்லை ✦கவனம் எப்போதும் செய்யும் வேலையிலேயே இருக்கட்டும். இப்போதே எதிர்காலத்தை குறித்து கவலைப்பட வேண்டாம் ✦சோம்பேறிக்கு சோம்பல் முறிப்பதும் கஷ்டமே *Over Confidence எப்போதும் வேண்டாம் Bro..

News April 24, 2025

அதிக சிக்சர்கள்.. சாதனை படைத்த ரோஹித் சர்மா..!

image

அதிக சிக்சர்கள் விளாசிய MI வீரர் என்ற பொல்லார்டின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். SRH உடனான நேற்றைய போட்டியில் அவர் 3 சிக்சர் விளாசினார். இதன்மூலம், மொத்தமாக MI அணிக்காக 260 சிக்சர் அடித்துள்ள அவர், பொல்லார்டின் (258) சாதனையை முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக 456 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 12,000 ரன்களை கடந்தும் அசத்தியுள்ளார்.

News April 24, 2025

அடிவாங்கிய டெஸ்டா பங்குகள்.. அதிரடி முடிவெடுக்கும் மஸ்க்

image

ட்ரம்பின் அரசு நிர்வாகத்தில் இருந்து விலக எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார். அமெரிக்க அரசு நிர்வாக செலவுகளை குறைக்கும் குழுவின் செயல் தலைவரான எலான் மஸ்க், ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்நிலையில், அவரது டெஸ்டா நிறுவன பங்குகள் 20% வரை சரிவை சந்தித்தன. இதனால், டெஸ்டா வளர்ச்சிக்கு பங்காற்றும் நோக்கில் அரசு நிர்வாகத்தில் இருந்து அடுத்த மாதத்தில் விலக அவர் திட்டமிட்டுள்ளார்.

News April 24, 2025

மோடியை கொல்ல வந்த தீவிரவாதிகள்?

image

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் PM மோடியை கொல்ல வந்தவர்களாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கட்ரா – ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க 19-ம் தேதி அவர் அங்கு செல்வதாக இருந்தது. ஆனால் பயணம் ரத்தானது. தீவிரவாதிகள் திட்டம் குறித்த உளவுத்துறை தகவலால் பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கொல்ல வந்தவர்கள், சுற்றுலா பயணிகளை கொன்றதாக கூறப்படுகிறது.

News April 24, 2025

RCB VS RR: ஆதிக்கம் செலுத்தப் போவது யார்?

image

இந்த சீசனில் சொந்த மைதானத்தில் ஒரு போட்டியை கூட RCB அணி வெல்லவில்லை. இந்த சூழலில்தான் இன்று RR அணியை எதிர்கொள்கிறது. 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே RR வென்றுள்ளது. காயம் காரணமாக சஞ்சு சாம்சன் விளையாடாததால் ரியான் பராக் அணியை வழிநடத்தவுள்ளார். அதேநேரத்தில், சொந்த மண்ணில் தொடரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க RCB மல்லுக்கட்டும். இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பாங்க?

News April 24, 2025

ஹய்யா ஜாலி.. இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

image

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. அதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப். 17 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மதியத்துடன் இறுதித் தேர்வு நிறைவடைகிறது. அதன்பின்னர், அவர்களுக்கும் விடுமுறைதான். கோடை விடுமுறை நிறைவடைந்து ஜுன் 2-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமே ஜாலிதான்!

News April 24, 2025

40 திருமணம் செய்வேன்.. வனிதா விஜயகுமார் காட்டம்

image

ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் என பரவிய செய்திக்கு நடிகை வனிதா விஜயகுமார் காட்டமாக பதிலளித்துள்ளார். ‘மிஸஸ் & மிஸ்டர்’ பட போஸ்டரை வைத்து இருவருக்கும் திருமணம் என செய்தி பரவியது. இதுகுறித்து பேசிய வனிதா, 40 திருமணம்கூட செய்வேன் என முதலில் கூறினார். பின்னர், ‘4 திருமணம்கூட செய்யவில்லை. என்னை அசிங்கப்படுத்த வேண்டாம். நான் திருமணம் செய்வதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை’ எனக் குறிப்பிட்டார்.

News April 24, 2025

பயங்கரவாதம்.. ஓரணியில் நிற்க வேண்டும்: ஷமி

image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில், பயங்கரவாதத்தை கண்டித்து அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த அவர், இத்தகைய வன்முறை நமது சமூக கட்டமைப்பை மட்டுப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

News April 24, 2025

காதல் சின்னத்தை ரசித்த USA துணை அதிபர்..!

image

இந்தியாவிற்கு குடும்பத்துடன் சுற்றுப் பயணம் வந்துள்ள USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்து மகிழ்ந்துள்ளார். கடந்த 21-ம் தேதி இந்தியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து, PM மோடி விருந்தளித்தார். இந்நிலையில், மனைவி உஷா, 3 குழந்தைகளுடன் சென்று ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை அவர் சுற்றிப் பார்த்தார். இதனையடுத்து, தாஜ்மஹால் முன்பு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

News April 24, 2025

ஏப்ரல் 24: வரலாற்றில் இன்று

image

▶ தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். ▶ 1973 – கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள். ▶ 1934 – எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள். ▶ 2013 – வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர். ▶ 2004 – லிபியா மீதான 18 ஆண்டுகால பொருளாதார தடையை நீக்கியது அமெரிக்கா.

error: Content is protected !!