News April 24, 2025

ஹய்யா ஜாலி.. இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

image

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. அதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப். 17 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மதியத்துடன் இறுதித் தேர்வு நிறைவடைகிறது. அதன்பின்னர், அவர்களுக்கும் விடுமுறைதான். கோடை விடுமுறை நிறைவடைந்து ஜுன் 2-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமே ஜாலிதான்!

News April 24, 2025

40 திருமணம் செய்வேன்.. வனிதா விஜயகுமார் காட்டம்

image

ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் என பரவிய செய்திக்கு நடிகை வனிதா விஜயகுமார் காட்டமாக பதிலளித்துள்ளார். ‘மிஸஸ் & மிஸ்டர்’ பட போஸ்டரை வைத்து இருவருக்கும் திருமணம் என செய்தி பரவியது. இதுகுறித்து பேசிய வனிதா, 40 திருமணம்கூட செய்வேன் என முதலில் கூறினார். பின்னர், ‘4 திருமணம்கூட செய்யவில்லை. என்னை அசிங்கப்படுத்த வேண்டாம். நான் திருமணம் செய்வதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை’ எனக் குறிப்பிட்டார்.

News April 24, 2025

பயங்கரவாதம்.. ஓரணியில் நிற்க வேண்டும்: ஷமி

image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில், பயங்கரவாதத்தை கண்டித்து அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த அவர், இத்தகைய வன்முறை நமது சமூக கட்டமைப்பை மட்டுப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

News April 24, 2025

காதல் சின்னத்தை ரசித்த USA துணை அதிபர்..!

image

இந்தியாவிற்கு குடும்பத்துடன் சுற்றுப் பயணம் வந்துள்ள USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்து மகிழ்ந்துள்ளார். கடந்த 21-ம் தேதி இந்தியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து, PM மோடி விருந்தளித்தார். இந்நிலையில், மனைவி உஷா, 3 குழந்தைகளுடன் சென்று ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை அவர் சுற்றிப் பார்த்தார். இதனையடுத்து, தாஜ்மஹால் முன்பு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

News April 24, 2025

ஏப்ரல் 24: வரலாற்றில் இன்று

image

▶ தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். ▶ 1973 – கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள். ▶ 1934 – எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள். ▶ 2013 – வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர். ▶ 2004 – லிபியா மீதான 18 ஆண்டுகால பொருளாதார தடையை நீக்கியது அமெரிக்கா.

News April 24, 2025

என்னை மாற்றியது இவர்தான்: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

image

நிகழ்ச்சிகளில் THUG பதில் அளிப்பதிலும், குறும்பு சேட்டை செய்வதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் கெட்டிக்காரர். முதலில் INTROVERT ஆக இருந்த தன்னை EXTROVERT ஆக மாற்றியதே இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர்தான் என அவர் தெரிவித்துள்ளார். இளையராஜா, எம்.எஸ்.வி, கே.வி. மகாதேவன் உள்ளிட்டோரிடம் வேலை செய்து இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், டி.ராஜேந்தர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து தன்னை மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

News April 24, 2025

ரோஹித்துக்கு வந்த சோதனை.. 9 வருஷத்துல இதுதான் ஃபர்ஸ்ட்!

image

ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 2 போட்டிகளில் அரைசதம் விளாசுவது 9 ஆண்டுகளில் இதுதான் முதல்முறையாம். CSK, SRH அணிகளுக்கு எதிராக தற்போது தொடர்ச்சியாக அரைசதம் அடித்த அவர், இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டில் KKR, RPS அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்திருக்கிறார். தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் ரோஹித் சர்மாவிற்கு இது ஒரு மோசமான சாதனைதான் என நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News April 24, 2025

மலாலா யூசஃப்சாய் பொன்மொழிகள்

image

▶ ஒட்டுமொத்த உலகமும் மவுனம் காக்கும் போது, ஒரே ஒரு குரல்கூட சக்திவாய்ந்ததாக மாறும். ▶ ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் ஆகியவை உலகையே மாற்றும். ▶ நாம் அமைதியாக இருக்கும்போதுதான் நமது குரலின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். ▶ என்னால் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும். ▶ பெண்கள் கல்வியைப் பெற வேண்டும் என்றால், அவர்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.

News April 24, 2025

பிரேக் எடுக்கும் விஜய்?.. ‘ஜனநாயகன்’ பட அப்டேட்!

image

கடைசி படமாக ‘ஜன நாயகன்’-ல் நடித்து வரும் விஜய், ஷூட்டிங்கிற்கு ஒரு வாரம் ப்ரேக் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஷூட்டிங் நிதானமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசியல் பணி காரணமாக ஷூட்டிங்கிற்கு முழுக்கு போட விஜய் திட்டமிட்டுள்ளாராம். எனினும், மே மாத இறுதிக்குள் விஜய்யின் போர்ஷன் நிறைவடையும் என கூறப்படுகிறது.

News April 24, 2025

1,500 பேர் கைது.. அதிரடியில் இறங்கிய காஷ்மீர் போலீஸ்!

image

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததன் எதிரொலியாக 1,500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் டேட்டாக்களில் இருப்பவர்கள், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டவர்கள், தொழிலாளர்கள் என பலரையும் கைது போலீஸ் விசாரித்து வருகிறது. மேலும், ஜம்மு – காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!