News April 23, 2025

சர்வதேச புத்தக தினம்

image

புத்தக வாசிப்பும், படிப்பும் மட்டுமே சமூகத்தை பண்படுத்தும் என்பது சான்றோர் வாக்கு. அதனை ஊக்குவிப்பதற்காக, ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதி சர்வதேச புத்தக தினம் கடைபிடிக்கப்படுகிறது. புத்தகங்களில் எதை படிக்க வேண்டும் என்ற கேள்வியே தேவையில்லை. அனைத்தையும் படிக்கலாம். நல்ல புத்தகங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் மோசமான புத்தகங்கள் எப்படி வாழக்கூடாது என்பதையும் கற்றுத்தரும்.

News April 23, 2025

துயரமாக மாறிய இன்ப சுற்றுலா… கண்ணீர் கதை!

image

காதல் மனைவியின் பிறந்தநாளை கொண்டாட சென்றவர், அடுத்தநாளே பிணமான கொடுமையை என்னவென்பது! இந்தூரை சேர்ந்த சுனில் நதானியேல்(58), குடும்பத்தினருடன் காஷ்மீரின் பஹல்காமுக்கு சென்றார். அந்நேரம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த, மகளை தள்ளிவிட்டு காப்பாற்றியவர், தான் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார். ‘அப்பாவை சுட்டுட்டாங்க… அவர் எங்கள விட்டுட்டு போய்ட்டார்’ என்று கதறும் மகனுக்கு என்ன ஆறுதலை சொல்வீர்கள்?

News April 23, 2025

4 நாள் மட்டுமே! அமைச்சரா? சிறையா?

image

ஒருவேளை அமைச்சர் பதவியில் தொடர வேண்டும் என்று <<16191630>>செந்தில் பாலாஜி மு<<>>டிவெடுத்தால், மீண்டும் கைதாகி சிறைக்கு செல்ல வேண்டும். ஏற்கெனவே சிறையிலிருந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு அமைச்சர் பதவியிலிருந்து விலகி, ஜாமின் பெற்று வழக்கை எதிர்கொள்ளலாம். ஆனால், அமைச்சர் பதவியில் தொடரவே அவர் விரும்புவார் என கூறப்படுகிறது. எது எப்படியோ! இன்னும் 4 நாளில் முடிவு தெரிந்துவிடும்.

News April 23, 2025

தரைவழி, வான்வழி.. அடுத்து ?

image

உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம்
தரை வழியே பாக். ஆக்ரமிப்பு காஷ்மீரில் ஊடுருவி சென்று அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை வான்வழியாக சென்று தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு பகல்ஹாமில் தற்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்தியா எந்த வழியில் பதிலடி காெடுக்க போகிறது?

News April 23, 2025

இந்திய கால்பந்து வீரர் ராங்காங் காலமானார்

image

இந்திய அணியின் முன்னாள் கால்பந்து வீரர் சிங் ராங்காங் காலமானார். நீரிழிவு மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். 1990-களில் பிரபலமான வீரராக இருந்த ராங்காங், அசாம் மாநில அணியிலும், இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார். பல சர்வதேசப் போட்டிகளில் நாட்டுக்காக விளையாடியுள்ள அவரின் மறைவுக்கு விளையாட்டுத் துறை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

News April 23, 2025

BCCI-க்கு முன்னாள் வீரர் வைத்த கோரிக்கை

image

பாகிஸ்தானுடன் இனி எந்த கிரிக்கெட் போட்டியும் விளையாட கூடாது என BCCI-க்கு இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி கடிதம் எழுதியுள்ளார். பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறும் போது அவர்களுக்கு புரியும் மொழியில் தான் நம் பதில் அளிக்க வேண்டு எனவும் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டிக்காக காஷ்மீர் சென்ற போது அங்குள்ள அமைதியை கண்டு மகிழ்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News April 23, 2025

நெஞ்சை உலுக்குகிறது.. நடிகர் சூர்யா உருக்கமாக இரங்கல்

image

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நெஞ்சை உலுக்குகிறது என்று நடிகர் சூர்யா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் இதுபோன்ற ஒரு துயரத்தை யாரும் எதிர்க்கொள்ள கூடாது எனக் கூறிய அவர், உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்கும். அமைதிக்கான நீடித்த பாதை உருவாகட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

இந்திய எல்லையில் வட்டமிடும் பாக். போர் விமானங்கள்?

image

இந்திய எல்லை பகுதிகளில் பாக். போர் விமானங்களை நிறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லாஹூர், ராவல்பிண்டி விமானப்படை தளங்களில் போர் விமானங்கள் நகர்த்தப்படும் ஸ்க்ரீன்ஷாட்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல, இந்தியா திடீரென தாக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

News April 23, 2025

அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

image

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லை மையப்படுத்தி, அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 6.2 ரிக்டர் அளவுகோளில் ஏற்பட்ட நிலநடுக்கம் நகரை கடுமையாக உலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 55,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News April 23, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை & குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

error: Content is protected !!