India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘குட் பேட் அக்லி’ படம் இளையராஜாவின் பாட்டால் தான் ஓடியது என கங்கை அமரன் சமீபத்தில் பேசியது வைரலானது. ஆனால், அதை மறுத்துள்ள அவரது மகன் பிரேம்ஜி, அனைவருக்குமே உண்மை தெரியும் எனவும், அஜித்தின் படம் அஜித்தால் மட்டுமே ஓடும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், எனது அண்ணனுக்கு ஒரு பிரச்னை என்றால் நான் குரல் கொடுப்பது போன்று, எனது அப்பாவும் அவருடைய அண்ணனுக்காக குரல் கொடுத்ததாக பிரேம்ஜி கூறியுள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளது. 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளையுடன் இறுதித்தேர்வு முடியும் நிலையில், ஏப்ரல் 25 முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை என்றும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஜூன் 2-ம் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. பஹல்காமில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் முப்படைத் தளபதிகள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், ஸ்ரீநகரில் இருந்து திரும்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டுள்ளனர். பதிலடி தாக்குதல் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில், SRH – MI அணிகள் மோதவுள்ளன. இதில், டாஸ் வென்ற MI அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, SRH அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்துள்ளார். இந்த இரு அணிகளுக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் MI அணி வெற்றி பெற்றது. இதனை பழி வாங்கும் நோக்கில் SRH ஆக்ரோஷமாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலின் போது, அப்பகுதியில் குதிரை சவாரி தொழில் செய்யும் சையது அடில் ஹூசைன் ஷா என்பவர் செய்த செயல் கண்கலங்க வைத்துள்ளது. அப்பாவி மக்கள் சுடப்படுவதை கண்டதும் உடனே அவர், தீவிரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். இருப்பினும் சுதாரித்துக் கொண்ட தீவிரவாதி, அவரை சுட்டு கொன்றுள்ளான். தனது உயிரை துச்சமாக நினைத்து, மக்களை காப்பாற்ற முயன்றுள்ளார் அந்த வீரன்.
பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.
பிரபல அசாமிய நடிகர் மற்றும் பாடகர் ஃப்விலா பஸுமாட்டரி (54) காலமானார். இவரது மறைவு அசாம் மற்றும் வடகிழக்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாமின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் என போற்றப்படும் இவர், அம்மக்களால் ‘பாசு டா’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். மேலும், போடோ மொழியில் எண்ணற்ற பாடல்களையும் இவர் பாடியுள்ளார். இவரின் மறைவுக்கு திரைக் கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் <<16187361>>துரைமுருகனை <<>> விடுவித்த உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. ஏற்கெனவே, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், KKSSR, தங்கம் தென்னரசு மீதான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அதேபோல், சர்ச்சை பேச்சில் பொன்முடிக்கு ஐகோர்ட்டும், செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றமும் செக் வைத்துள்ளன. இந்த விவகாரங்கள் அனைத்தையும் தேர்தல் நேரத்தில் அதிமுக, பாஜக, தவெக கையில் எடுத்து பரப்புரை செய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு ஏன் வார விடுப்பு வழங்கப்படுவதில்லை என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான அரசாணை 2021-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையிலும், விடுப்பு வழங்கப்படுவதில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள், போதிய காவலர்கள் இல்லை என்பது அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பே தெரிய வேண்டாமா என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.
பகல்ஹாமில் 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, நாட்டு மக்கள் தங்கள் இடையேயான கருத்து வேறுபாட்டை மறந்து பாகிஸ்தானை தண்டிக்க குரல் எழுப்பி வருகின்றனர். சமூகவலைதளங்களிலும் இதையே வலியுறுத்தி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நாட்டில் பல இனம், மொழி மக்கள் வாழ்ந்தாலும் தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று ஒற்றுமையுடன் குரல் கொடுத்து வருகின்றனர். இதுவே இந்தியா!
Sorry, no posts matched your criteria.