News April 21, 2025

விஜய் டிவியில் இனி இந்த நிகழ்ச்சிகளுக்கு மூடுவிழா?

image

விஜய் டிவியை கலர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஹாட்ஸ்டாரை ஜியோ வாங்கிய நிலையில், கலர்ஸ் நிறுவனமும் ஜியோவுடன் இணைந்துள்ளது. விஜய் டிவியை வாங்கிய கையோடு சில முக்கிய நிகழ்ச்சிகளை நிறுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சூப்பர் சிங்கர்’, ‘நீயா நானா’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுவதோடு, தொகுப்பாளர்களும் மாற்றப்பட உள்ளனராம்.

News April 21, 2025

தமிழ்ப் புத்தாண்டு: 5 ராசியினருக்கு எச்சரிக்கை

image

தமிழ் புத்தாண்டில், 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க ஜோதிட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கன்னி ராசியினருக்கு குடும்பம், பணியிட சூழ்நிலைகளில் சாதகமற்ற பலன்கள் கிடைக்கும். துலாம் ராசியினருக்கு கணவன்- மனைவி உறவில் சிக்கல் ஏற்படும். தனுசு ராசியினருக்கு பல மாற்றங்கள் ஏற்படும். மகர ராசியினருக்கு வீடு, நில பிரச்னைகள் உருவாகும். கும்ப ராசியினர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.

News April 21, 2025

ரியல் ஹீரோவுக்கு மோதிரம் பரிசளித்த இபிஎஸ்

image

சென்னை அரும்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய கண்ணனுக்கு, இபிஎஸ் தங்க மோதிரம் பரிசளித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். மழையின் போது சிறுவன் துடிதுடித்து போராடிய நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கண்ணன் காப்பாற்றிய வீடியோ வைரலானது. பலரும் அவரை ரியல் ஹீரோ என பாராட்டினர்.

News April 21, 2025

7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD குறிப்பிட்டுள்ளது. இதேபோல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் IMD கணித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?

News April 21, 2025

பஞ்சாயத்துக்கு வந்த ‘பனீர்’

image

நாட்டில் கலப்படம் மிகுந்த பொருளாக ‘பனீர்’ மாறியிருக்கிறது. லோக்கல் உணவகங்களில் வெள்ளை நிறத்தில் விற்கப்படுவது பனீரே அல்ல என்கின்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். மைதா மாதிரியான மாவுப் பொருள்களை கொண்டு, இப்படியான போலி பனீர் தயாரிக்கப்படுகிறதாம். இதனால், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். நம்பத்தகுந்த கம்பெனி பனீரை மட்டுமே வாங்கி பயன்பெறுங்கள்.

News April 21, 2025

IPL: GT அணி முதலில் பேட்டிங்

image

இன்றைய ஐபிஎல் போட்டியில் KKR – GT அணிகள் மோதவுள்ளன. இதில், டாஸ் வென்ற KKR அணியின் கேப்டன் ரஹானே, GT அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளார். புள்ளிப்பட்டியலில் 5 வெற்றிகளுடன் GT அணி முதலிடத்திலும், 3 வெற்றிகளுடன் KKR அணி 7-வது இடத்திலும் உள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் பிட்ச், பேட்டிங் செய்ய சாதகமாக இருப்பதால், இப்போட்டி ஹை-ஸ்கோரிங் கேமாக இருக்கும் என்று தெரிகிறது.

News April 21, 2025

திருமணம் செய்து கொண்ட 2 நடிகைகள்.. வேற லெவல்

image

Twilight பட நாயகி Kristen Stewart-ம், நடிகை Dylan Meyer-ம் 2019-ம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வந்தனர். பின்னர் 2021-ல் 2 பேரும் நிச்சயம் செய்து கொண்டனர். இந்நிலையில், லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள Kristen Stewart வீட்டில் வைத்து 2 பேரும் நேற்று அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். கைவிரல்களில் மோதிரம் மாற்றி மணமுடித்த பின், அந்நாட்டு வழக்கப்படி கட்டியணைத்து முத்தமிட்டு காெண்டனர்.

News April 21, 2025

இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக!

image

லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் WWE – Wrestlemania 41-ல் நடிகர் ராணா டகுபதி கலந்து கொண்டுள்ளார். இந்திய பிரபலம் ஒருவருக்கு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். சிறுவயதில் இருந்தே WWE ரசிகனான தனக்கு, இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததை நம்பமுடியவில்லை என ராணா நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

News April 21, 2025

விரைவில் 1 கிராம் தங்கம் ரூ.10,000.. வியாபாரிகள் சூசகம்

image

நாள்தாேறும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரிக்கிறது. சென்னையில் இன்று 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.9,834ஆகவும், 1 சவரன் ரூ.78,672ஆகவும் விற்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.9,015ஆகவும், 1 சவரன் ரூ.72,120ஆகவும் விற்பனையாகிறது. இந்த விலை குறைய வாய்ப்பில்லை, வரும் நாள்களில் 1 கிராம் ரூ.10,000ஆகவும், சவரன் ரூ.80,000ஆகவும் அதிகரிக்கும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.

News April 21, 2025

மே.வங்க கவர்னருக்கு திடீர் நெஞ்சுவலி

image

மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்படவே, அவர் உடனடியாக கொல்கத்தா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உரிய பரிசோதனைக்கு பின்னர் அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இச்செய்தியை அறிந்து அம்மாநில CM மம்தா பானர்ஜி, உடனே ஹாஸ்பிடலுக்கு விரைந்து கவர்னரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

error: Content is protected !!