India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெங்களூரு போன்ற மாநகரத்தில் ₹21,000 சம்பளத்தில் வாழ்வது குறித்து Reddit-ல் ஒருவர் போட்ட பதிவு பேசுபொருளாகியுள்ளது. சாப்பாடு ₹8,000, வீட்டு வாடகை ₹9,000, போக்குவரத்து ₹2,000, இதர செலவுகள் ₹2,000 என செலவு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். மது, சிகரெட் பழக்கம் இல்லை எனவும், 20 வயதில் வாழ்க்கையை என்ஜாய் பண்ண நினைப்பவர்கள் இதை ஃபாலோ பண்ண வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இத பத்தி உங்க கமெண்ட் என்ன?
தமிழ்நாட்டில் HIV பாதித்த குழந்தைகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், தமிழ்நாட்டில் HIV தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகள், HIV தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுடன் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து உள்ளிட்ட செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.1,000 நிதி உதவி வழங்கப்படும் எனக் கூறினார்.
அணுகுண்டை விட பயங்கரமான ஹைட்ரஜன் வெடிகுண்டை சோதனை செய்து வெற்றி கண்டிருக்கிறது சீனா. மெக்னீசியம் ஹைட்ரைட் என்ற மூலப்பொருளை கொண்டு, அணுசக்தி இல்லாமல் உருவாக்கப்பட்ட இந்த வெடிகுண்டு, 2 நொடிகளுக்கு 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கி மிரள வைத்திருக்கிறது. சீனாவுக்கு எதிராக, அமெரிக்க வர்த்தகப் போரை தொடங்கியிருக்கும் நிலையில், இந்த வெடிகுண்டு சோதனை உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ₹500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சந்தையில் புழக்கத்துக்கு வந்துள்ள இந்த நோட்டில் ஒரு சிறிய எழுத்துப் பிழை மட்டுமே அது கள்ள நோட்டு என கண்டறிய உதவுகிறது. அசல் நோட்டில் ‘RESERVE BANK OF INDIA’ என இருக்கும். கள்ள நோட்டில் உள்ள ‘RESERVE’ல் E என்ற எழுத்துக்கு பதில் A என இருக்கிறது. உஷாரா இருங்க மக்களே!
எம்.எஸ்.தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த மும்பையின் இளம் வீரர் விக்னேஷ் புத்தூர் நெகிழ்ச்சியடைந்துள்ளார். பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தியவரை சந்தித்த அந்த தருணத்தை, என்னால் நம்பவே முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 4 போட்டிகளில் விளையாடிய விக்னேஷ் இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
KKR அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், GT அணியின் ஓப்பனிங் வீரர்கள் தரமான செய்கையை செய்து வருகின்றனர். சாய் சுதர்ஷன் 50 (34), ஷுப்மன் கில் 50 (33) என இருவரும் நிலையாக விளையாடி அரைசதம் கடந்திருக்கின்றனர். 11 ஓவர்கள் முடிந்திருக்கும் நிலையில் GT அணி 104 ரன்களை குவித்திருக்கிறது. இவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல், KKR அணியின் பவுலர்கள் திணறி வருகின்றனர்.
IPL-ல் முகமது சிராஜ் கம்பேக் கொடுத்ததில், கோச் நெஹ்ராவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என GT இயக்குநர் விக்ரம் தெரிவித்துள்ளார். சிராஜுக்குள் நெஹ்ரா தன்னம்பிக்கையை விதைத்தாகவும், இருவர் இடையிலும் கோச்- வீரர் என நல்ல கனெக்ஷன் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். CT தொடரில் அணியில் இடம்பெறாத சிராஜ், நடப்பு IPL சீசனில் 7 போட்டிகளில் 11 விக்கெட்களை கைப்பற்றி, 2 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
7 உயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாறுதல் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலிஜீயம் நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தியது. அப்பாேது இந்த முடிவை எடுத்தது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன்கௌடர், தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கசோஜு சுரேந்தர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது.
விஜய் டிவியை கலர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஹாட்ஸ்டாரை ஜியோ வாங்கிய நிலையில், கலர்ஸ் நிறுவனமும் ஜியோவுடன் இணைந்துள்ளது. விஜய் டிவியை வாங்கிய கையோடு சில முக்கிய நிகழ்ச்சிகளை நிறுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சூப்பர் சிங்கர்’, ‘நீயா நானா’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுவதோடு, தொகுப்பாளர்களும் மாற்றப்பட உள்ளனராம்.
தமிழ் புத்தாண்டில், 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க ஜோதிட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கன்னி ராசியினருக்கு குடும்பம், பணியிட சூழ்நிலைகளில் சாதகமற்ற பலன்கள் கிடைக்கும். துலாம் ராசியினருக்கு கணவன்- மனைவி உறவில் சிக்கல் ஏற்படும். தனுசு ராசியினருக்கு பல மாற்றங்கள் ஏற்படும். மகர ராசியினருக்கு வீடு, நில பிரச்னைகள் உருவாகும். கும்ப ராசியினர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
Sorry, no posts matched your criteria.