News March 16, 2024

100 நாள் வேலை ஊதியம் ₹400ஆக உயர்த்தப்படும்

image

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் ₹400 ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் கார்கே, “அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டங்கள் & தொழிலாளர்களின் சுகாதார உரிமை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும். ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் போல நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.

News March 16, 2024

நினைவு பரிசாக உடைந்த கண்ணாடி

image

WPL எலிமினேட்டர் போட்டியில் மும்பையை வீழ்த்தி ஆர்சிபி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டிக்குப் பின் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரிக்கு டாடா நிறுவனம் புதுமையான பரிசை வழங்கியுள்ளது. UP வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில், ​​பெர்ரி அடித்த சிக்ஸர் பரிசாக வழங்க நிறுத்தப்பட்டிருந்த டாடா காரின் கண்ணாடியை உடைத்தது. உடைந்த கண்ணாடித் துண்டுகளை ஒன்றாக சேர்த்த கண்ணாடி அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.

News March 16, 2024

“ஆளுநரின் ராஜ்யத்திற்கு முடிவு கட்டப்படும்”

image

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவி கால விவகாரத்தில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படுகிறார். ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்யம் நடத்துகிறார். தேர்தலுக்குப் பின் அவரது ராஜ்யத்திற்கு முடிவு கட்டப்படும் என அமைச்சர் ரகுபதி காட்டமாக பேசியுள்ளார். மேலும், அமைச்சராக பொன்முடி பதவியேற்பதில் எந்த தடையும் இல்லை. தேர்தல் தேதி அறிவித்தாலும் பதவியேற்பு விழா கண்டிப்பாக நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

News March 16, 2024

“கூட்டணி குறித்து தலைமை கழகம் அறிவிக்கும்”

image

கூட்டணி குறித்த முடிவை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தேமுதிக தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கூட்டணி குறித்து யூகத்தின் அடிப்படையில் பல செய்திகள் வெளியாகிறது. கூட்டணி குறித்து தலைமை கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது’ எனத் தெரிவித்துள்ளது.

News March 16, 2024

BREAKING: ” தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்”

image

தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் 2021இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால், அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 16, 2024

தமிழக மீனவர்கள் ‘இந்தியர்கள்’ இல்லையா?

image

தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், “இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதையும், சித்ரவதை செய்யப்படுவதையும் பாஜக அரசு ஏன் தடுத்து நிறுத்தவில்லை. அதானியின் வர்த்தக நலனுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த பாஜக அரசு, மீனவர்களுக்காக ஏன் இதுநாள் வரை அழுத்தம் கொடுக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News March 16, 2024

இந்த முறை எத்தனை கட்டமாக தேர்தல் நடைபெறும்?

image

தேர்தல் தேதி இன்று வெளியாக உள்ள நிலையில், எத்தனை கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2004இல் 4 கட்டங்களாகவும், 2009இல் 5 கட்டங்களாகவும், 2014இல் 9 கட்டங்களாகவும், 2019இல் 7 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த முறை மார்ச் 10ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், இம்முறை சற்று தாமதமாகியுள்ளது.

News March 16, 2024

BREAKING: ஒரே மணி நேரத்தில் கட்சி மாறினார்

image

மநீமவில் இருந்து விலகுவதாக மாநில பரப்புரை செயலாளர் டாக்டர் அனுஷா ரவி, சரியாக இன்று நண்பகல் 12:02 மணிக்கு அறிவித்தார். ஆனால், கட்சியில் இருந்து விலகி ஒரு மணி நேரத்தில் (மதியம் 1 மணிக்கு) அவர் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் இதுபோன்று இன்னும் பலர் கட்சித் தாவ வாய்ப்புள்ளது. அந்த வரிசையில் அதிமுக முன்னாள் எம்பி ஒருவரும் பாஜகவில் இன்று ஐக்கியமாக உள்ளதாக கூறப்படுகிறது.

News March 16, 2024

பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார்

image

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி வருவதாக முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். குமரியில் கூட்டத்தில் பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய முதல்வர், “திமுக அரசின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க கடந்த பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 16, 2024

புதிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம்

image

தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். புதிய கல்விக்கொள்கை வேறு, பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் வேறு. புதிய கல்விக்கொள்கையை பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் கையெழுத்திடுவதற்கு குழு அமைத்துள்ளோம். அக்குழுவின் அறிக்கைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.