News March 16, 2024

BREAKING: “இரட்டை இலை” சின்னம்.. புதிய சிக்கல்

image

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவும், படிவம் ஏ மற்றும் பி -இல் கையெழுத்திடும் அதிகாரத்தை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இது இபிஎஸ்-க்கு புதிய தலைவலியாக அமைந்துள்ளது.

News March 16, 2024

அடுத்த ஆண்டு சென்னையில் செம்மொழி மாநாடு

image

சென்னையில் 2025 ஜூன் மாதம் 2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இயல், இசை, நாடகம் என முத்தமிழுடன் கணினித் தமிழும் இணைந்து நற்றமிழாக திகழ்கிறது. தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்து நூற்றாண்டு கனவை நனவாக்கியவர் கலைஞர். அவரது வழியில் சென்னையில் 5 நாள்கள் சீரோடும் சிறப்போடும் நடத்தப்படும்” எனக் கூறினார்.

News March 16, 2024

இரும்பு பெட்டியில் தபால் வாக்கு

image

*தபால் வாக்கு சீட்டுகளில் வேட்பாளர் பெயர், சின்னம், வரிசை எண் சரியாக அச்சடிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
*அச்சகத்தில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் தபால் வாக்கு சீட்டுகளை கொண்டு செல்ல வேண்டும். *வாக்குச் சீட்டுகள் அனைத்தும் இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டு, தனி அறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 16, 2024

வேட்பாளர்கள் ஏஜெண்டுகளை நியமிக்கலாம்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணியை கண்காணிக்க வேட்பாளர்கள் தங்களின் ஏஜெண்டுகளை நியமிக்கலாம். ஒரு பண்டலுக்கு 50 வாக்குச் சீட்டுகள் என்ற அடைப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களை இட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 16, 2024

தேர்தல்: முதல் அறிவிப்பு வெளியாகியுள்ளது

image

தபால் வாக்கு சீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தபால் வாக்கு சீட்டுகளை தயார் செய்யும் பணிகளை கண்காணிக்க தனியாக ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உடனே தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும். தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள அரசு அச்சகங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்.