India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான (39,512) தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதன் தொழில்துறை சார்ந்த ஆய்வறிக்கையில் , “2022 நிதியாண்டில், நாட்டின் தொழில்துறை உற்பத்தியில், தமிழகம் (3ஆவது இடம்) ₹ 11.6 லட்சம் கோடி பங்களித்தது. அதே நேரம் அதிகளவு (7,906) தொழிற்சாலைகள் மூடப்படும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ., வங்கி வெளியிட்ட தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள் நாட்டின் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ED சோதனை நடந்த பெரிய நிறுவனங்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக கட்சிகளுக்கு வழங்கியது அம்பலமாகியுள்ளது. இந்த உண்மை வெளியாக காரணமாக இருந்த பத்திரிகையாளர் பூனம் அகர்வால். இதழியல் துறையில் புலிட்சர் விருதுப் பெற்ற அவரை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக 2025 டிச.26 வரை தொடர்வதற்கு தமக்கு அதிகாரம் உள்ளது. 2022 ஜூன் 28ஆம் தேதி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பழனிசாமி விலகிவிட்டார். எனவே, வழக்கு நிலுவையில் இருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைப்பாளரான தான் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரியுள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வரவுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவும், படிவம் ஏ மற்றும் பி -இல் கையெழுத்திடும் அதிகாரத்தை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இது இபிஎஸ்-க்கு புதிய தலைவலியாக அமைந்துள்ளது.
சென்னையில் 2025 ஜூன் மாதம் 2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இயல், இசை, நாடகம் என முத்தமிழுடன் கணினித் தமிழும் இணைந்து நற்றமிழாக திகழ்கிறது. தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்து நூற்றாண்டு கனவை நனவாக்கியவர் கலைஞர். அவரது வழியில் சென்னையில் 5 நாள்கள் சீரோடும் சிறப்போடும் நடத்தப்படும்” எனக் கூறினார்.
*தபால் வாக்கு சீட்டுகளில் வேட்பாளர் பெயர், சின்னம், வரிசை எண் சரியாக அச்சடிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
*அச்சகத்தில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் தபால் வாக்கு சீட்டுகளை கொண்டு செல்ல வேண்டும். *வாக்குச் சீட்டுகள் அனைத்தும் இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டு, தனி அறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி, தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணியை கண்காணிக்க வேட்பாளர்கள் தங்களின் ஏஜெண்டுகளை நியமிக்கலாம். ஒரு பண்டலுக்கு 50 வாக்குச் சீட்டுகள் என்ற அடைப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களை இட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தபால் வாக்கு சீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தபால் வாக்கு சீட்டுகளை தயார் செய்யும் பணிகளை கண்காணிக்க தனியாக ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உடனே தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும். தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள அரசு அச்சகங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.