News March 17, 2024

மியாமி ஓபனில் இருந்து ஜோகோவிச் விலகல்

image

மெரிக்காவில் வரும் 19ஆம் தேதி தொடங்கவுள்ள மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக நம்பர் 1 வீரர் ஜோகோவிச் அறிவித்துள்ளார். மியாமியில் கலந்துகொள்ளாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. எனது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், எனது தனிப்பட்ட மற்றும் தொழில் அட்டவணையை நான் சமநிலைப்படுத்துகிறேன் எனக் கூறிய அவர், ரசிகர்களின் ஆரவாரத்தை அனுபிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

பாஜகவில் இணைந்த பிரபல பாடகி

image

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, நட்சத்திர விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், பாலிவுட்டை சேர்ந்த பிரபல பாடகி அனுராதா படுவால் பாஜகவில் இணைந்துள்ளார். பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அனுராதா, அவரது தலைமையின் கீழ் பணிபுரிவது மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

நூல் விலை ரூ.10 வரை உயர்வு

image

நூற்பாலைகள் நூல் விலையை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது தொழில்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பஞ்சு, நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன என்று குற்றம் சாட்டிய ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம், நூல் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

News March 17, 2024

ஒரு வெற்றிக்காக காத்திருக்கும் தமிழ் சினிமா

image

இந்த ஆண்டு இதுவரை தமிழில் 52 படங்கள் வெளியான நிலையில், ஒரு படம் கூட பெரிய வெற்றியைப் பெறவில்லை. புளூ ஸ்டார், லவ்வர் போன்ற ஒரு சில படங்கள் கவனம் ஈர்த்தன. பெரிய பட்ஜெட்டில் வெளியான கேப்டன் மில்லர், லால் சலாம், அயலான் போன்ற படங்கள் கூட பெரிதாக வெற்றிபெறவில்லை. GOAT, விடாமுயற்சி, இந்தியன் 2, வேட்டையன் படங்களைத்தான் கோலிவுட் பெரிதும் நம்பி இருக்கிறது. நீங்க எந்த படத்திற்கு வெயிட்டிங்?

News March 17, 2024

OPSக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு

image

அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்று இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஓபிஎஸ் கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவதாக இபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் வாதாடினார். இதனைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

News March 17, 2024

ஐபிஎல் ஒரு சர்க்கஸ் போன்றது

image

ஐபிஎல் போட்டிகள் சர்க்கஸ் போல் மகிழ்விக்கும் என்று ஆஸி.யின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல்லில் விளையாடுவது புதிய சவாலாக உள்ளதாக கூறிய அவர், இந்த போட்டி உலகின் சிறந்த டி20 லீக் ஆகும் என்று தெரிவித்தார். 2014, 2015 சீசன்களில் ஆர்சிபிக்காக விளையாடிய ஸ்டார்க், தற்போது கொல்கத்தா அணி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

News March 17, 2024

BREAKING: 21 தமிழக மீனவர்கள் கைது

image

தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் செய்துள்ளது. நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளுடன் 21 மீனவர்களை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழக மீனவர்கள் கைது தொடர் கதையாகி வருகிறது.

News March 17, 2024

பிரதமர் மோடி குறிப்பிட்ட எக்ஸ் பக்கம் முடக்கம்

image

பிரதமர் மோடியின் உரையை AI தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழில் மொழிபெயர்க்க துவக்கப்பட்ட டிவிட்டர் கணக்கை, டிவிட்டர் எக்ஸ் தளம் சஸ்பெண்ட் செய்துள்ளது. 2 நாட்களுக்கு முன் குமரியில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் இந்த டிவிட்டர் கணக்கை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியிருந்தார். இந்த நிலையில், அந்த கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

News March 17, 2024

இன்று I.N.D.I.A கூட்டணி பொதுக்கூட்டம்

image

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் தொடங்கிய பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நேற்று மும்பையில் நிறைவடைந்தது. தொடர்ந்து, இன்று மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

News March 17, 2024

WPL : இன்று இறுதிப் போட்டி

image

WPL இல் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் ஆர்வத்தில் விளையாட உள்ளன. ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு வருவது இதுவே முதல் முறை. டெல்லி அணிக்கு இது இரண்டாவது முறை. எந்த அணி கோப்பையை வெல்லும்.