India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை (E.D) 9வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில் 8 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. சம்மன்களை எதிர்த்து கெஜ்ரிவால் தொடுத்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் வரும் 21ம் தேதி ஆஜராகும்படி E.D சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பைக்கு புறப்பட்டார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழா, மும்பையிலுள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் நடைபெறுகிறது. இதில் காங்., மற்றும் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இன்றே தேர்தல் பிரச்சாரத்தை INDIA கூட்டணி தலைவர்கள் தொடங்க உள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான செலவு 1.20 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க தேர்தலுக்கு ஆகும் செலவுக்கு சமம் என்று கூறப்படுகிறது. இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்ய நாடுகளின் மொத்த ஜனத்தொகையை விட அதிகம். உலகின் மிகப்பெரிய தேர்தல் இது என்றாலும், இதுவரை அதிகபட்சமாக 67% பேர் தான் வாக்களித்துள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மேலும் ஒரு புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த புதிய வழக்கின் விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை. இது தொடர்பாக இன்று காலை ஆம் ஆத்மி கட்சி செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19 நடைபெறவுள்ளதால், 1 -9ம் வகுப்புக்கு முன்னதாகவே இறுதித்தேர்வை முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக ஜூன் 1 & 2ல் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த முறை ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6ம் தேதி முடிவுக்கு வருவதால், அதன்பின்பு ( ஒருவாரம் கூடுதல் லீவ்) பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது.
இம்மாதம் 22ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக ரன் மெஷின் விராட் கோலி நாடு திரும்பியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன், கோலி தனது மனைவி அனுஷ்காவின் பிரசவத்திற்காக லண்டன் சென்றது தெரிந்ததே. பிப்ரவரி 15 அன்று தனது மகன் பிறந்ததாக அறிவித்த பிறகு அவர் தற்போது இந்தியா திரும்பியுள்ளார். இனி ஐபிஎல்லில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.
நாடு முழுவதும் உள்ள பெண் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 47.1 கோடி என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். இதில், 1.89 கோடி பெண்கள் புதிதாக இணைந்துள்ளதாக கூறிய அவர், 12 மாநிலங்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், நாட்டில் மொத்தமுள்ள 96.8 கோடி வாக்காளர்களில் 49.7 கோடி பேர் ஆண்கள் என்றும் தேர்தலில் பெண்களும் சமமான அளவில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார்.
‘வசந்த மாளிகை’, ‘தனிக்காட்டு ராஜா’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ராமா நாயுடுவின் மகன் தான் நடிகர் வெங்கடேஷ். தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் இவரது இரண்டாவது மகளின் திருமணம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட சில தமிழ் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, நடத்தை விதி உடனே அமலுக்கு வந்துள்ளது. இதனால் தவெகவின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். நாள்தோறும் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கூட்டம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் மத்தியில் விஜய்யின் அரசியல் குறித்து தொண்டர்கள் பரப்புரை செய்யவுள்ளனர்.
வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அது குறித்து ஊடகங்கள் வழியாக 3 முறை மக்களுக்கு தகவல் வெளியிட வேண்டும். தங்கள் மீதான வழக்குகள், அதற்கு பெற்ற தண்டனை விவரங்கள் போன்றவை குறித்து செய்தித்தாள், காட்சி ஊடகங்கள் வாயிலாக விரிவாக அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.