News March 17, 2024

களைகட்டும் ஐபிஎல் 2024

image

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2024 ஐபிஎல் தொடர், வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில், வெளிநாட்டு வீரர்களும் ஒவ்வொருவராக இந்தியா வந்து கொண்டிருக்கின்றனர். சென்னை, பெங்களூரு, மும்பை, குஜராத், கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் தாங்கள் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை X பக்கத்தில் பதிவிட்டுள்ளதால், ஐபிஎல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

News March 17, 2024

கூட்டணி அமைக்க முடியாமல் திணறும் அதிமுக

image

கூட்டணி அமைப்பதில் அதிமுக திணறி வருவது, அக்கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா இருந்தவரை, கூட்டணி அமைத்து முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்குவார். ஆனால் தற்போது இபிஎஸ் தரப்புக்கும், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கும் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. வேட்பு மனு தாக்கலுக்கு 3 நாளே உள்ளதால், இது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

News March 17, 2024

கேரள ரசிகர்களை சந்திக்கும் விஜய்

image

நடிகரும், தவெக தலைவருமான விஜய், கேரளாவில் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். அவர் நடிக்கும் GOAT படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. அதேநேரம் கேரளாவில் உள்ள ரசிகர்களுடன் சந்திப்பினை நடத்த விஜய் திட்டமிட்டிருக்கிறார். இதற்குமுன் 2010ஆம் ஆண்டு விஜய் கேரள ரசிகர்களை சந்தித்தார். தேர்தல் நேரத்தில் அவர் மீண்டும் ரசிகர்களை சந்திக்கவிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

News March 17, 2024

பட்டய கணக்காளர் தேர்வு (CA) ஒத்திவைப்பு

image

மே மாதம் நடைபெற இருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி CA இன்டர்மீடியட் மற்றும் இறுதித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய அட்டவணை மார்ச் 19-ம் தேதி, www.icai.org இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.

News March 17, 2024

உளவு செயற்கைக்கோள்களை உருவாக்கும் எலான் மஸ்க்

image

அமெரிக்க அரசுக்காக நூற்றுக்கணக்கில் உளவு செயற்கைக்கோள்களை எலான் மஸ்க் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமெரிக்க அரசின் உளவு செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் என்ஆர்ஓ அமைப்புடன் 2021ல் ரூ.14,920 கோடி மதிப்பில் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதன்படி நூற்றுக்கணக்கில் செயற்கைக்கோள்களை உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News March 17, 2024

வாலுடன் பிறந்த அதிசய குழந்தை

image

சீனாவில் 10 செ.மீ. வாலுடன் அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது. கயானாவில் கடந்த ஆண்டு இதேபோல் பிறந்த குழந்தைக்கு, அறுவை சிகிச்சை மூலம் வால் அகற்றப்பட்டது. அதேபோல், சீனாவில் தற்போது ஆண் குழந்தை வாலுடன் பிறந்துள்ளது. Tethered spinal cord எனும் மருத்துவ நிலையே இதற்கு காரணமென கூறப்படும் நிலையில், வாலை அகற்றும்படி பெற்றோர் விடுத்த கோரிக்கையை மருத்துவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

News March 17, 2024

கார்- லாரி மோதி விபத்து; 2 பேர் பலி

image

தேனி அருகே காரும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே நடந்த இந்த கோர விபத்தில், காரில் பயணித்த கல்வி அதிகாரி சங்கு முத்தையா என்பவரும் கார் ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த லாரி ஓட்டுநரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

News March 17, 2024

கேட், வில்லியம் தம்பதியர் இடையே விரிசல்?

image

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேட் தம்பதியிடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாடல் அழகி ஹேன்பரியுடன் வில்லியமுக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும், பிறகு வேறு ஒருவரை ஹேன்பரி திருமணம் செய்து கொண்டதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. 3 பிள்ளைகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்ட கேட், இளவரசருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. இதை வைத்து, விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

News March 17, 2024

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘ரசமலாய்’

image

உலகின் சிறந்த சீஸ் இனிப்பு உணவு வகைகளின் பட்டியலை ‘டேஸ்ட் அட்லஸ்’ (Taste Atlas) நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் ‘ரசமலாய்’ 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் போலந்து நாட்டின் ‘செர்னிக்’ (Sernik) உணவு இடம்பிடித்துள்ளது. வாயில் வைத்ததும் கரையக்கூடிய ரசமலாய், பெங்காலி இனிப்பு உணவாகும். முற்றிலும் பாலை வைத்தே செய்யப்படும் இது, பெரும்பாலானவர்களின் விருப்பமான இனிப்பு உணவாகவும் உள்ளது.

News March 17, 2024

சென்னை வந்தடைந்த CSK வீரர்கள்

image

2024 ஐபிஎல் தொடருக்காக, CSK வீரர்கள் (நியூசிலாந்து) ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டேரில் மிட்செல் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். டேவன் கான்வே, காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை அணி பெங்களூருவை எதிர்கொள்கிறது. இதற்காக தீவிர பயிற்சியில் இறங்கியுள்ள சென்னை அணி, முதல் போட்டியில் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.