News March 18, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாதென ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம் ➤ அதிமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை ➤ EVM இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாதென ராகுல் பேச்சு ➤ மக்களின் உயிரைப் பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து திமுக பணம் வாங்கியதாக இபிஎஸ் குற்றச்சாட்டு ➤கேரளாவில் ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய் ➤ WPL தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது பெங்களூரு அணி.

News March 18, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News March 18, 2024

EVM இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது

image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் பிரதமர் மோடியால் வெற்றி பெற முடியாதென காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார். மும்பையில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய அவர், ‘இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் தான் மோடி அரசை இயக்குகின்றனர். பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தலித், பழங்குடியினர் ஒருவர் கூட இல்லை. நீங்கள் நினைப்பதை நான் செய்வேன். இது அன்பை பரப்புகின்ற தேசம்’ என்றார்.

News March 18, 2024

‘அமரன்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?

image

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்புகள் 80% நிறைவடைந்ததால், ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

News March 18, 2024

வீடியோ காலில் வாழ்த்து கூறிய விராட் கோலி!

image

WPL இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. கோப்பை வென்று அசத்திய பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு, ஆடவர் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பெங்களூரு நகரின் பல்வேறு தெருக்களிலும் வெற்றி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

News March 17, 2024

தோனிக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்

image

தோனிக்கு வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டுள்ளேன் என ரவிச்சந்திரன் அஷ்வின் உருக்கமாக பேசியுள்ளார். பாராட்டு விழாவில் பேசிய அவர், “2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை சேர்த்தது. அந்த நாள் எனது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. தோனி எனக்கு பலமுறை வாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்த நிலைக்கு வருவேன் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

குபேரன் ஆகப் போகும் ராசிகள்

image

நவ கிரகங்களில் இளையவராக கருதப்படும் புதன் பகவான், அறிவு மற்றும் ஞானத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவர். இவர் ஏப்ரல் 2ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடைய இருக்கிறார். இதன் காரணமாக சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசியினர் குபேர யோகத்தை பெற இருக்கின்றனர். தொழிலிலும், வேலை வாய்ப்பிலும் ஞானத்தை பயன்படுத்தி முன்னேறும் வாய்ப்பினை இந்த ராசியினருக்கு புதன் பகவான் ஏற்படுத்தி தரப் போகிறார்.

News March 17, 2024

பெங்களூரு அணி அபார வெற்றி

image

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான WPL இறுதிப் போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. கடைசி ஓவரில் இலக்கை அடைந்து, மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இந்தியாவில் நடைபெற்ற பிரீமியர் லீக் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி, பெங்களூரு அணி வரலாறு படைத்துள்ளது.

News March 17, 2024

Flipkart மதிப்பு ₹41,000 கோடி குறைந்தது

image

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட்டின் சந்தை மதிப்பு சுமார் ₹41,000 கோடி குறைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 40 பில்லியன் டாலராக இருந்த Flipkart-ன் சந்தை மதிப்பு தற்போது 35 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. சில எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய Flipkart நிறுவனம் தவறியதே இந்த இழப்புக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

News March 17, 2024

என்னை திட்டுகிறார்கள். நடிகர் ராதா ரவி வேதனை

image

தேர்தல் முடிந்த பிறகு அனைவரும் ஒன்றாகி விடுவோம் என நடிகர் ராதா ரவி கூறியுள்ளார். டப்பிங் யூனியன் தேர்தல் குறித்து பேசிய அவர், “இந்தத் தேர்தலே வந்திருக்க கூடாது. இவர் வரமாட்டார், படுத்துவிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். எதிரணி ராஜேந்திரன் என்னை திட்டி வருகிறார். யார் யாரோ என்னை திட்டுகிறார்கள். என்ன வேண்டுமானாலும் திட்டட்டும். இதுபோன்ற பல பிரச்சனைகளை நான் பார்த்து இருக்கிறேன்”எனக் கூறியுள்ளார்.