News March 18, 2024

எலக்ட்ரிக் டூவிலருக்கு ₹10,000 மானியம்

image

எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காற்றுமாசு அதிகரித்து வருவதால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், டூவிலருக்கு ₹10,000, இலகுரக மூன்று சக்கர வாகனத்திற்கு ₹25,000 (இ-ரிக்‌ஷாக்கள் போன்றவை), கனரக மூன்று சக்கர வாகனங்களுக்கு ₹50,000 (ஆட்டோக்கள் -வணிக அலகுகள் போன்றவை) வரை மானியம் வழங்குகிறது.

News March 18, 2024

NEET UG: இன்று முதல் திருத்தம் செய்யலாம்

image

NEET UG-2024 விண்ணப்பங்களை திருத்த NTA வாய்ப்பளித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் மார்ச் 20ஆம் தேதி இரவு 11:50 வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். இதுவே கடைசி வாய்ப்பு என்றும் அதன் பிறகு எடிட் ஆப்ஷன் வழங்கப்பட மாட்டாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தேர்வு மே 5 ஆம் தேதி ஆஃப்லைன் முறையில் நடத்தப்படும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 8ம் தேதியுடன் முடிவடைந்தது.

News March 18, 2024

சில்க் ஸ்மிதா செய்த பெரிய தவறு

image

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து பிரபல கவர்ச்சி நடிகை ஜெயமாலினி அதிர்ச்சிகர தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். சில்க் தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு தனது பெற்றோரை ஒதுக்கி வைத்தது. அவர் ஒருவரை மட்டுமே நம்பி வாழ்ந்தார். உறவினர்கள் நம்முடன் இல்லை எனத் தெரிந்தால் நம்முடன் இருப்பவர்கள் நம்மை ஏமாற்றத்தான் பார்ப்பார்கள். சில்க் ஸ்மிதாவிற்கும் அதுதான் நடந்தது எனக் கூறியுள்ளார்.

News March 18, 2024

முடங்கியது Paytm Insider தளம்

image

ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணி முதல் தொடங்கும் என்றும் டிக்கெட்டுகளை Paytm Insider, CSK தளத்தில் பெறலாம் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரேநேரத்தில் அதிகளவில் பயனர்கள் குவிந்ததால் 2 தளங்களும் முடங்கியுள்ளது. இதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

News March 18, 2024

இன்னும் சற்று நேரத்தில்…

image

இன்னும் 4 நாட்களில் ஐபிஎல் 17வது சீசன் தொடங்க உள்ளது. மார்ச் 22இல் நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. ரூ.1700 முதல் ரூ.7500 வரை விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளை, Paytm Insider (9:30am) மற்றும் சிஎஸ்கே இணையதளத்தில் (9:30am) பெறலாம். ஒரு நபர் 2 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

News March 18, 2024

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வரலாறு

image

வாக்காளர் அடையாள அட்டையில் ஆரம்ப காலத்தில் வாக்காளர்களின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது. 1957 இல், புகைப்பட அடையாள அட்டைகளை வழங்குவதற்கான யோசனை உருவானது. 1979 சிக்கிம் தேர்தலிலும், பின்னர் வடகிழக்கு மாநிலங்களிலும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1994 இல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1997ல் வாக்காளர் பட்டியல் கணினிமயமாக்கல் துவங்கியது.

News March 18, 2024

பாஜகவை கடுமையாக சாடும் பிரகாஷ் ராஜ்

image

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பு இல்லை; 420 மோசடி பேர்வழிகள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசுகிறார்கள் என்று பிரகாஷ் ராஜ் பாஜகவை மறைமுகமாக கடுமையாக விமர்சித்துள்ளார். NDA கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பிரதமர் மோடி பேசிய நிலையில், இது திமிர்த்தனமான பேச்சு என்றும் விமர்சித்துள்ளார்.

News March 18, 2024

வாக்காளர் பட்டியலில் சேர்க்க 5 லட்சம் பேர் விண்ணப்பம்

image

மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், வேட்புமனுத் தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை, பணிகள் குறித்து எடுத்துரைக்கும் சாகு, வாக்காளர் பட்டியலுடன் துணை வாக்காளர் பட்டியலை சேர்ப்பது தொடர்பாக கருத்து கேட்கிறார்.

News March 18, 2024

இன்று காங்கிரஸ் தொகுதி இறுதியாகிறது?

image

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் பட்டியல் இன்று இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை இந்த முறை கொடுக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திமுக நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

News March 18, 2024

சற்றுநேரத்தில் அரசியலை புரட்டிப்போடும் தீர்ப்பு

image

ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது தரப்பு அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்பு வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பு தான் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால் ஓபிஎஸ் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் செய்து, சாமி கும்பிட்டார்.