India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலக் கட்சி அங்கீகாரத்துக்காக இரு தொகுதிகள் கேட்டிருந்தது மதிமுக. ஆனால், திமுக ஒரு தொகுதி தான் தரமுடியுமெனக் கூறியபோது, துரைக்காக அதற்கும் மதிமுக சம்மதித்தது. வாரிசு அரசியலை எதிர்த்த கலகக்காரரான வைகோ, இன்று தனது வாரிசுக்கு சீட்டு வாங்கியது காலத்தின் கோலம் என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
மக்கள் பணியை நேரடியாக செய்ய வேண்டும் என்ற நோக்கில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக தமிழிசை தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் அரசியல் அனுபவம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தனது முடிவுக்கு பாஜக தலைமை தடை விதிக்கவில்லை என விளக்கமளித்தார். மேலும், வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு தேர்தலில் போட்டியிட உள்ளதால் தனது அன்பை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
CUET நுழைவுத் தேர்வு தேதிகளில் மாற்றமில்லை என யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. மே 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மட்டும் தேர்வும், தேர்தலும் ஒரே நாளில் வருகின்றன. எத்தனை பேர் அந்த நாளில் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர் என்பதை அறிந்து, அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். அதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மே 15 முதல் 31 வரை CUET நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தும் எனத் தெரிவித்துள்ளது.
நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் சூரியமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். கொமதேக-வின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளரான சூரியமூர்த்தி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில், வங்கதேச வீரர் ரிஷாத் ஹொசைன் வாணவேடிக்கை காட்டியுள்ளார். இலங்கை வீரர் ஹசரங்கா வீசிய 39ஆவது ஓவரில், சிக்சர்-பவுண்டரி என விளாசி அசத்தினார். அவர் விளையாடிய கடைசி 10 பந்துகளில் 6 4 6 0 6 6 4 4 4 என பறக்க விட்டு ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர வைத்தார். மொத்தமாக 18 பந்துகளில் 48 ரன்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
தமிழிசை துணை ஜனாதிபதி பதவியை எதிர்பார்ப்பதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தேர்தலில் தோல்வி அடைந்தால் துணை ஜனாதிபதி பதவி உள்ளிட்ட உயர் பதவிகள் தருவார்கள் என அவர் எதிர்பார்க்கிறார். ஆழம் தெரியாமல் அவர் தேர்தல் அரசியலுக்கு மீண்டும் வருகிறார். தூத்துக்குடியில், கனிமொழியை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்கப்போவது உறுதி என சூளுரைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. குறிப்பாக, ரிஷாத் ஹொசைனின் அதிரடி ஆட்டத்தால் 41 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வங்கதேசம் வெற்றி பெற்றது. இதனால் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது வங்கதேச அணி.
மும்பையில் நேற்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய ராகுல், மகாராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் காங்., தலைவர் ஒருவர் சோனியாவை சந்தித்து அழுததாக கூறினார். EDயிடம் இருந்து தப்பிக்க பாஜகவில் சேர்ந்தார் என்றும் கூறியிருந்தார். அது அசோக் சவான் என பலரும் கூறிய நிலையில், அது நான் இல்லை என அசோக் சவான் மறுத்துள்ளார். “ராகுல் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசினார். அது நான்தான் என கூறுவது உண்மையல்ல” என்றார்.
போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் தொடர்பிலிருந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளார்களாம். அவருக்கு ஃபைனான்ஸ் செய்த மலேசியப் பிரமுகர் ஒருவர் தற்போது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அடிப்படைவாத அமைப்பு ஒன்றுக்கு அவர், நிதி உதவி செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த அரசியல் கட்சியினர் பீதியில் உள்ளனராம்.
அமித் ஷா பெயரை முதலில் கேட்டதும் அவரும் ஒரு நடிகர் என்று தான் நினைத்ததாக சந்தான பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அமித் ஷா பிறந்தநாளுக்கு என் புகைப்படத்தை போட்டு சிலர் வாழ்த்து தெரிவித்ததை பார்த்தேன். அவர்களுக்கு நான் யாரென்று தெரியவில்லையா? அமித் ஷா புகைப்படம் கிடைக்கவில்லையா எனத் தெரியவில்லை. முதலில் இதை பார்த்து என்ஜாய் செய்தேன். தற்போது அந்த மாதிரி நடப்பதில்லை என்றார்.
Sorry, no posts matched your criteria.