News March 19, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ பாஜக – பாமக கூட்டணி உறுதியான நிலையில், இன்று அதிகாரபூர்வ அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுகிறார் ➤ நீண்ட இழுபறிக்கு பின்னர் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது ➤ அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் ➤ ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை ➤ மக்களவைத் தேர்தல் பரப்புரையை மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் துவங்குகிறார்.

News March 19, 2024

ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதா?

image

வீட்டிலிருந்து (Work From Home) வேலை செய்யும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாது என டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. கணினி, மடிக்கணினி & மின்னணு உதிரி சாதனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான டெல், தனது ஊழியர்களை ஹைப்ரிட் – ரிமோட் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. இதில் ஹைப்ரிட் ஊழியர்களை வாரத்தில் 3 நாள்களுக்கு அலுவலகத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

News March 19, 2024

மோடியின் பிடியில் உள்ள தேர்தல் ஆணையம்

image

தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என பிரதமர் மோடிக்கு தெரியும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரையில் பேசிய அவர், “வெற்றி பெறும் திமுக கூட்டணிக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் தேதி அறிவித்துள்ளனர். மிகக் குறைந்த கால அவகாசத்தை வழங்கியுள்ளனர். தேர்தல் ஆணையமே மோடியின் பிடியில் உள்ளது” எனத் தெரிவித்தார்.

News March 18, 2024

திமுக வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிப்பு?

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக 21 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. குறிப்பாக அதிமுக வலுவாக உள்ளதாக கூறப்படும் கொங்கு மண்டலத்தில் பல தொகுதிகளில் களம் காண்கிறது. எனவே அதிமுகவுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 18, 2024

கூட்டமே இல்லாமல் வேனில் செல்வது தான் பேரணியா?

image

மோடி கலந்துகொண்ட சாலை பேரணியை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவையில் இன்று வாகனப் பேரணியில் கலந்துகொண்டார். சுமார் 2.5 கிமீ தொலைவுக்கு இந்த வாகனப் பேரணி நடந்தது. இதில் பெரிய அளவுக்கு கூட்டம் இல்லை என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது. இது குறித்து X-ல் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், கூட்டம் இல்லாமல் பிரதமர் ரோடு ஷோ நடத்தியதாக விமர்சித்துள்ளார்

News March 18, 2024

தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள்?

image

மக்களவைத் தேர்தல் பரபரப்பு தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்த்த சூழலில், பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக, அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளது. குறிப்பாக, தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க நினைக்கும் அதிமுக, அந்தக் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கவும் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 18, 2024

பண மழை கொட்டப் போகும் ராசிகள்

image

பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனமான சனி பகவான் இன்று (மார்ச் 18) கும்ப ராசியில் உதயமாகியுள்ளார். இதனால் மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசியினருக்கு பண மழை கொட்டப்போகிறது. புதிய முதலீடுகள், வியாபாரத்தில் லாபம், நீண்ட நாள் நிலுவையில் உள்ள கடன் பாக்கி வசூலாவது, பல நாள் கனவு கைகூடுவது, வெளிநாடுகளில் பணி வாய்ப்பு போன்ற பல்வேறு சுப பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.

News March 18, 2024

பாமக-பாஜக கூட்டணி; நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

பாஜக – பாமக கூட்டணி உறுதியான நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் நாளை காலை அறிவிக்க உள்ளார். இன்று தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில், பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக நிர்வாகிகளிடம் பேசி இறுதி முடிவெடுக்கப்பட்டது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 முதல் 14 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

News March 18, 2024

கே.எல்.ராகுலுக்கு NCA அறிவுரை

image

2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க கே.எல்.ராகுல் நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாக NCA அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அவர், காயம் காரணமாக மற்ற 4 போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. லண்டனில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது முழுவதும் குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளில் கீப்பராக இருக்க வேண்டாம் எனவும் NCA அறிவுறுத்தியுள்ளது.

News March 18, 2024

திமுக நிர்வாகி கொலையில் ஊராட்சி மன்ற தலைவி கைது

image

சென்னை அருகே திமுக நிர்வாகி ஆராவமுதன் கொல்லப்பட்ட வழக்கில் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி முத்தமிழ் செல்வி கைது செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 29ஆம் தேதி வண்டலூர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி ஆராவமுதன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைதாகியுள்ளனர். இந்த நிலையில், கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக முத்தமிழ் செல்வி, அவரது கார் ஓட்டுநர் துரைராஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.