News March 19, 2024

பிடிக்கவில்லை என்றால், இதை செய்யுங்கள்

image

இன்றைய காலத்தில் மக்கள் பல்வேறு பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வாங்குகின்றனர். அப்படி வாங்கும் பொருட்களின் சேவையில் அதிருப்தி அடைந்தால், ‘தேசிய நுகர்வோர் உதவி மையத்தில்’ புகார் செய்யலாம். இதற்கு 1800-11-4000, 1915 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும், 8800001915 என்ற எண்ணில் உங்கள் புகார்களை SMS வாயிலாக அனுப்பலாம். அரசு இணையதளத்திலும் குறைதீர்க்கும் வசதி உள்ளது.

News March 19, 2024

சற்றுமுன்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 130 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 6.3ஆக பதிவான நிலநடுக்கத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 19, 2024

வாரிசு அரசியலை எதிர்த்த வைகோவின் இன்றைய நிலை?

image

வாரிசு அரசியலை எதிர்த்து மிகப்பெரிய கலகம் செய்து, பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக என்ற கட்சியை தொடங்கியவர் தான் வைகோ. ஆனால், காலச் சுழற்சியில் சிக்கிய அவர், கடந்த தேர்தலில் சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல் போனது. வேறுவழியில்லை!, மீண்டும் அவரே வாரிசு அரசியலை கையிலெடுத்து, தற்போது மகனுக்கு திருச்சி தொகுதியை விடப்பிடியாக கேட்டு பெற்றிருக்கிறார்.

News March 19, 2024

ஆர்டரை ரத்து செய்ததற்காக ₹10,000 அபராதம்!

image

ஃப்ளிப்கார்ட் தளத்தில் நுகர்வோர் ஒருவர் ₹39,000 கொடுத்து ஐபோனை ஆஃபரில் புக் செய்துள்ளார். ஆனால் கூடுதல் லாபத்திற்காக அந்த ஆர்டரை வேண்டுமென்றே ஃப்ளிப்கார்ட் ரத்து செய்து, பணத்தை திருப்பி கொடுத்துள்ளது. ஆனால், ஆர்டரை ரத்து செய்ததற்காக அந்த நபர் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார். அதில், நுகர்வோர் அடைந்த மன உளைச்சலுக்காக ₹10,000 இழப்பீடு வழங்க ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 19, 2024

OPS-க்கு நிரந்தர தடை: தனிக் கட்சியா? மாற்றுக் கட்சியா?

image

அதிமுக பெயர், சின்னம், கொடியைப் பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு விதித்த இடைக்கால தடையை நிரந்தரம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வரும் தேர்தலில் மட்டுமல்ல, ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கைக்கே மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஓபிஎஸ் தனிக்கட்சித் தொடங்குவாரா? இல்லையென்றால் தனது ஆதரவாளர்களுடன் மாற்றுக்கட்சியில் இணைவாரா போன்ற பல கேள்விகள் எழுத் தொடங்கி இருக்கிறது.

News March 19, 2024

வைரலாகும் ராமதாஸ் பழைய ட்வீட்

image

பாஜக கூட்டணியில் பாமக அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் இணைந்துள்ளது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் 2017 நவம்பர் 7ஆம் தேதி பதிவிட்ட எக்ஸ் பதிவு தற்போது டிரெண்டிங் செய்யப்படுகிறது. “பிரதமர் மோடி வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லை: செய்தி – நெரிசல் ஏற்படுவதற்கு அவர் என்ன எடப்பாடி அளவுக்கு பெரிய தலைவரா?” என்று பிரதமர் மோடியை ராமதாஸ் விமர்சித்த பதிவு, வைரலாகி வருகிறது.

News March 19, 2024

சக்திகள் நிறைந்த பட்டீஸ்வரம் துர்க்கை ஆலயம்

image

துர்கா தேவி ஆனவள் கெட்டதை அழித்து நல்லதை நிலை நாட்ட கூடியவர். இந்த அன்னைக்கு பல்வேறு ஆலயங்கள் இருந்தாலும் கும்பகோணம் அருகில் இருக்கும் பட்டீஸ்வரம் துர்க்கையின் ஆலயம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. பல சக்திகள் நிறைந்த பட்டீஸ்வரம் ஆலயத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவதாக சொல்லப்படுகிறது. இங்கு மிகப் பெரிய பைரவர் சன்னதியும் உள்ளது. வாய்ப்பு உள்ளவர்கள் தரிசனம் செய்து அருளை பெறுங்கள்.

News March 19, 2024

நல்ல நேரம் பார்த்து கையெழுத்து போட்ட ராமதாஸ்

image

பாஜக கூட்டணியில் பாமக கடந்த முறை 7 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தைலாபுரம் தோட்டத்திற்கு அண்ணாமலை 6 மணி வந்தார். ஆனால், காலை 7.30 மணி வரை நல்ல நேரம் இல்லை. இதனால், இருகட்சிகளின் தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிய நிலையில், சரியாக காலை 7.47 மணிக்கு நல்ல நேரத்தில் தொகுதி உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

News March 19, 2024

டிரெண்டிங்கில் ‘#RIP ஹர்திக் பாண்டியா’!

image

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதால் ரோஹித் ரசிகர்களின் கோபம் அதிகரித்துள்ளது. சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் பற்றிய கேள்விகளை ஹர்திக் மற்றும் பயிற்சியாளர் பௌச்சர் இருவரும் தவிர்த்துவிட்டனர். இதனால் ரசிகர்கள் இன்னும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், ஹர்திக்கிற்கு எதிராக #RIPHARDIKPANDYA என்ற ஹேஷ்டேக்கை ரோஹித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

News March 19, 2024

மார்ச் 24இல் பரப்புரையை தொடங்குகிறார் இபிஎஸ்

image

மார்ச் 24 ஆம் தேதி இபிஎஸ் திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். மார்ச் 24 – 31 வரை தனது முதற்கட்ட பரப்புரையை மேற்கொள்கிறார். மார்ச் 24 – திருச்சி, மார்ச் 25 – தூத்துக்குடி, நெல்லை, மார்ச் 27 -குமரி, தென்காசி, மார்ச் 28 – விருதுநகர், ராமநாதபுரம், மார்ச் 29 – காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், மார்ச் 30 – புதுச்சேரி, கடலூர், மார்ச் 31 – சிதம்பரம், நாகையில் பரப்புரையை மேற்கொள்கிறார்.