India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகவுள்ளது. மக்களவைத் தேர்தலில், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையிலுள்ள அக்கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வெளியிடவுள்ளார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் உள்ளிட்ட 2 தனித்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், 2019 தேர்தலைப் போலவே இம்முறையும் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 2 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். கடந்த மாதம் இபிஎஸ்சை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்திருந்தார். இந்த நிலையில், திடீர் திருப்பமாக அவர் திமுக பக்கம் சாய்ந்தது அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. 2 நாளுக்கு முன் இக்கட்சியை சேர்ந்த சிலர் அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருந்தனர்.
சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் காயமடைந்தார். பின் நடக்க முடியாமல் இருந்த அவரை Stretcher-இல் தூக்கிச் சென்றனர். இதையடுத்து IPL தொடரில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே செய்திகள் வெளியானது. இந்நிலையில், காயம் குணமடைந்ததால் IPL தொடரில் கலந்துகொள்வதற்காக இன்று சென்னை கிளம்பியுள்ளார். இவரது வருகை CSK அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில்
ஆஜராகும்படி பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி ஆயுர்வேதாவின் விளம்பரம் தொடர்பான விவகாரத்தில், ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெறுகிறது. இதன்மீது விளக்கமளிக்கக் கோரி, உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸூக்கு 2 பேரும் விளக்கமளிக்காததால், நேரில் ஆஜராகும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் விராட் கோலி ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறார். ஒவ்வொரு முறையும் மைதானத்திற்குள் வரும்போது கோலி, புதிய கெட்டப்பில் காணப்படுவார். அந்தவகையில், இந்த முறையும் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். அவர் புதிய லுக்கில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கெட்டப் எப்படி இருக்கிறது என கமெண்ட் பண்ணுங்க.
தமிழ்நாட்டில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 32 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல், மூடுவது என்பது சரியான போக்கு அல்ல. இது ஒரு தலைமுறையின் கல்வியை அழிக்கும் செயலாகும். எனவே, பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்வதே நல்லது.
பிரதமர் மோடி நேற்று கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ், இதே போல, குஜராத் கலவரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஒக்கி புயல், மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியவர், மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை தேர்தல் ஆயுதமாக மோடி கையில் எடுத்துள்ளதாக சாடினார்.
படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்ததால், இந்தி நடிகர் கோவிந்தா கன்னத்தில் அறை வாங்கிய சம்பவம் தெரிய வந்திருக்கிறது. சுமார் 400 படங்களில் நடித்துள்ளவர் மூத்த நடிகர் அம்ரிஷ் புரி. அவருடன் இணைந்து நடித்தபோது, 9 மணி நேரம் தாமதமாக கோவிந்தா வந்துள்ளார். இதனால் பொறுமை இழந்த அம்ரிஷ் புரி, கோவிந்தாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதன்பிறகு, இருவரும் எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.
விசிக வேட்பாளர்கள் பானை சின்னத்தில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அக்கட்சியின் தலைவர் திருமா அறிவித்துள்ளார். 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவோம் என சூளுரைத்த அவர், அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தேர்தல் முரண்கள் உண்டு; ஆனால் சமூகநீதி என்ற புள்ளியில் இரு கட்சிகளும் இணைந்துள்ளன. தமிழ்நாட்டில் 2வது இடம் பிடிக்க பாஜக பல்வேறு சதிகளை செய்வதாக விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.