India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கட்சிப் பெயர் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பு மனு அளித்துள்ளது. அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரை வரும் தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இரட்டை இலை சின்னத்துக்கு பதிலாக இரண்டு அணிகளுக்கும் தனி சின்னத்தை வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் நேற்று மனு அளித்திருந்தார். அதற்கு எதிராக இபிஎஸ் தற்போது மனு அளித்துள்ளார்.
மதக்கலவரத்தை தூண்டியதாக பாஜக MP தேஜஸ்வி சூர்யாவை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். நாகர்ட்பேட் பகுதியில், இஸ்லாமியர்கள் நமாஸ் செய்தபோது, மொபைல் கடைக்காரர் முகேஷ் என்பவர் அனுமன் பாடலை இசைத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முகேஷ் தாக்கப்பட்ட நிலையில், அதனை கண்டித்து தேஜஸ்வி உள்ளிட்டோர் பேரணி சென்றனர். அப்போது தேர்தல் விதிகளை மீறி மத வெறுப்புப் பேச்சுகளை பேசியதாக போலீசார் அவரை கைது செய்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் 5 கட்சிகளுடனான கூட்டணியை பாஜக தமிழகத்தில் உறுதி செய்துள்ளது. அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி அதிமுகவினர் பாஜகவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி மொத்தமாக பாஜகவுடன் சேர்ந்துக் கொண்டது. கொங்குநாடு முன்னேற்றக் கழகம் மற்றும் பாமக ஆகியவையும் பாஜகவுடனான கூட்டணியை அறிவித்துள்ளது. இது குறித்து உங்களது கருத்து என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தை காண, ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதற்காக, கடந்த வாரம் சென்னை சேப்பாக்கத்திற்கு வந்த CSK அணி, தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. போட்டிக்கான டிக்கெட்டுகள் பலருக்கும் கிடைக்காததால், இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும். மார்ச் 20 – மார்ச்27ஆம் தேதி வரை காலை 11 – பிற்பகல் 3 மணி வரை மனுத்தாக்கல் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை காலை 11 மணிக்கு தமிழகத்தில் தொடங்குகிறது. முதற்கட்ட தேர்தலிலேயே தமிழகத்தின் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் நாளை முதலே தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய 27 கடைசி நாளாகும்.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவினை சந்தித்திருக்கின்றன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 238 புள்ளிகளை இழந்து 21,817 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 736 புள்ளிகளை இழந்து 72,012 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அன்னிய நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதே வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2011ல் உள்துறை அமைச்சராக ப. சிதம்பரம் இருந்த போது, 263 சீனர்களுக்கு விசா அளிக்கப்பட்டதில் மோசடி நடந்ததாக E.D. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் E.D. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, ஏப்.5ல் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
2024 ஐபிஎல் தொடருக்கான புது ஜெர்சியை பெங்களூரு அணி வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற ‘RCB Unbox’ நிகழ்ச்சியில், RCB அணியினர் தங்களது புதிய ஜெர்சியினை அணிந்து வந்தனர். இம்முறை சிவப்பு மற்றும் நீல நிற காம்பினேஷனில் ஜெர்சி உருவாகியுள்ளது. மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னையை எதிர்கொள்ள உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஜெர்சி எப்படி இருக்கு?
ஊட்டியில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தனியார் பள்ளிகளுக்கு அண்மையில் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் நிலையில், ஊட்டியில் 2 சர்வதேச பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.