India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஃபைனலில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை அவர் எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற ஆட்டத்தில், 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று ஹோல்ஜர் ரூனே வாகை சூடினார். 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யும் பாஜகவையும் அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அதிமுகவையும் மூன்றாவது முறையும் TN மக்கள் தோற்கடிப்பார்கள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த கூட்டணி இரு முறை திமுகவால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான் எனத் தெரிவித்த அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்ததுபோல் கள்ளக் கூட்டணிதான் வைத்திருந்தார்கள் எனக் குற்றஞ்சாட்டினார்.
▶ அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கிக் கொள்ளும். ▶ நீ தூங்கும்போது வருவது கனவல்ல. உன்னை தூங்க விடாமல் செய்யும் கனவே கனவாகும். ▶ அவமானங்களை பொருட்படுத்தாதீர்கள். ஆனால் ஒரு முறை செய்த தவறை இன்னொரு முறை செய்யாதீர்கள். ▶ வெற்றிக் கதைகளை படித்தால் செய்திகளே கிடைக்கும். தோல்வி கதைகளை படியுங்கள். வெற்றி பெற யோசனைகள் கிடைக்கும்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 313 ▶குறள்: செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும். ▶பொருள்: யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால், அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.
காசாவின் கண்ணீரைத் துடைக்க போப் பிரான்சிஸ் குரல் கொடுத்துள்ளார். ஈஸ்டர் திருநாளையொட்டி வாடிகன் சதுக்கத்தில் மக்களிடம் உரையாற்றிய அவர், காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். பசியால் வாடும் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும், மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்று சேர வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.
சிஎஸ்கே அணியின் மோசமான சீசன்களில் ஒன்றாக இந்த சீசன் மாறி இருக்கிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணிக்கு, மீண்டும் தோனி தலைமையேற்ற பிறகும் தடுமாற்றமே நீடிக்கிறது. லீக் சுற்றில் எஞ்சி இருக்கும் 6 போட்டிகளையும் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும். அதற்கு வாய்ப்பிருக்கா?
▶ஏப்ரல் 21- சித்திரை- 08 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶ குளிகை: 1:30 PM – 3:00 PM ▶ திதி: திதித்துவம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶ பிறை: தேய்பிறை
டாஸ்மாக் கடைகளைத் தவிர அனைத்து அரசு கட்டடங்களுக்கும் கருணாநிதி பெயரைச் சூட்டுவதை திமுக வாடிக்கையாக வைத்திருப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் பெயரை மாற்றி கருணாநிதி பெயர் சூட்டுவதுதான் திராவிட மாடலா என்றும் அவர் வினவியுள்ளார். தலைவர்களின் பெயரில் இருக்கும் சிறுசிறு அடையாளங்களையும் அழிக்க திமுக அரசு முயல்வதை ஏற்க முடியாது என சீமான் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சிரிஸ் வால்சங்கர், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த அவர், இந்தியா முழுமைக்கும் பிரபலமானவர். வீட்டில் இருந்தபோது திடீரென கைத்துப்பாக்கியை எடுத்து தலையில் சுட்டுத் தற்காெலை செய்து கொண்டார். இதற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று (ஏப்ரல் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.