India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

PM கிசான் உதவித்தொகையின் 21-வது தவணையான ₹2,000, தீபாவளிக்கு முன்பாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பணம் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், அடுத்த வாரம் (அ) நவம்பர் முதல் வாரத்தில் பணம் கிரெடிட் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வங்கிக் கணக்கின் KYC-யை அப்டேட் செய்யாதவர்கள், உடனே அப்டேட் செய்துவிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தவில்லையே என சொல்பவரா நீங்கள்? இந்த பழக்கம் எல்லாம் உங்ககிட்ட இருக்குதா பாருங்க ★தேவையில்லாத OTT subscription ★கொஞ்ச தூரத்திற்கும் Cab போடுவது ★டெய்லி வெளியில் சாப்பிடுவது ★புகை, மது பழக்கங்கள் ★அடிக்கடி கிரெடிட் கார்டு பயன்படுத்துவது ★அதிக செல்போன் ரீசார்ஜ். இவைதான் அதிகளவில் சைலண்டாக செலவு செய்ய வைக்கின்றன. இந்த பழக்கங்கள் இருந்தா உடனே மாத்திக்கோங்க! SHARE IT.

சைவம், வைணவம் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் பொன்முடி வரும் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பொன்முடி சர்ச்சையாக பேசியதாக, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த சைதாப்பேட்டை கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு MP, MLA-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

வருவாய் கிராமத்தில் பட்டாதாரர் ஒருவர் இறந்திருந்தால், அவர் பெயர் நீக்கப்பட்டு அவரது வாரிசுகளின் பெயர்களை சேர்க்கும் நடைமுறை இருந்தது. இது பவுத்தி பட்டா மாறுதல் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் நடைமுறை சிக்கல்களாலும், வேலைப்பளுவாலும் மாற்றப்பட்டு முழுவதும் ஆன்லைன் வசம் சென்றது. பவுத்தி பட்டா நடைமுறையை மீண்டும் செயல்படுத்த கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் இனி பொதுமக்களின் வேலை எளிமையாகும்.

தீபாவளி விடுமுறையை தொடர்ந்து, மழையால் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறை, முகூர்த்தம், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, ஸ்பெஷல் பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து அக்.24, 25-ல் பல்வேறு ஊர்களுக்கும், கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் இருந்து அக்.26-ம் தேதி திருச்செந்தூருக்கும் ஸ்பெஷல் பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

யூடியூப்பில் பலரும் நேரம் போவது தெரியாமலே ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனை கட்டுப்படுத்த யூடியூப் நிறுவனமே புது கட்டுப்பாடு ஒன்றை விதிக்கவுள்ளது. இனி யூஸர்கள் தாங்களே ‘daily Scrolling limit’ என்பதை செட் செய்யலாம். இதில் நாம் தேர்வு செய்யும் அளவில் மட்டுமே ரீல்ஸ் பார்க்க முடியும். குறிப்பிட்ட நேரத்தை நெருங்கினால், உங்களுக்கு யூடியூப்பில் இருந்து Notification-ம் அனுப்பப்படும்.

Julius Baer Global Wealth and Lifestyle Report 2025-ன் படி உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் மற்றும் உயர்மட்ட வாழ்க்கை முறைகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் வரையறுக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் 10 இடங்களில் உள்ள நகரங்களை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. முதலிடத்தில் எந்த நகரம் தெரியுமா?

நடிகரும், ஆச்சி மனோரமாவின் மகனுமான பூபதி காலமானார். அவர் இறந்த செய்தியை கேட்டவுடன் நடிகர் கார்த்தி முதல் ஆளாக நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவரை தொடர்ந்து நடிகர் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய பிறகு நாளை உடல் அடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

அசாமில் உள்ள கோக்ரஜார் ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில், ரயில் தண்டவாளம் மர்மநபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பாதையில் காலை 8 மணி வரை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. உடனடியாக அதிகாரிகள் பாதையை சீரமைத்ததால், மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படாத நிலையில், அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மரத்தின் வேர்கள் mycorrhizal பூஞ்சைகள் மூலம் பூமியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மரத்தின் இலையை பூச்சிகள் சாப்பிட்டு அழித்தால், மரத்தின் வேரில் இருந்து ரசாயன சிக்னல்கள் வெளியேறும். பூஞ்சைகள் இந்த சிக்னலை மற்ற மரங்களுக்கு கடத்தும். இந்த சிக்னல்களை புரிந்துகொள்ளும் பிற மரங்கள் தங்கள் மரத்தின் இலைகள் பூச்சிகள் சாப்பிடாத படி கசப்பாக மாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. SHARE.
Sorry, no posts matched your criteria.