News October 23, 2025

ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் இந்தியா

image

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் புதிதாக தடைகளை விதித்ததை தொடர்ந்து, இந்திய நிறுவனங்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளன. இந்திய நிறுவனங்களின் முடிவால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 3% அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

News October 23, 2025

பிரதிகா ராவல் அசத்தல் சதம்

image

மகளிர் WC போட்டியில் நியூசி.,க்கு எதிரான ஆட்டத்தில் ஓபனிங் இறங்கிய பிரதிகா ராவல் சதம் அடித்துள்ளார். ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து புதிய சாதனை படைத்த பிரதிகா 122 பந்துகளில் சதம் அடித்து களத்தில் நிற்கிறார். முன்னதாக ஸ்மிருதி மந்தனா 109 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 38.1 ஓவர்களில் 239/1 ரன்களுடன் ஆடிவருகிறது.

News October 23, 2025

சென்னையில் கனமழை.. துயர மரணம்

image

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை மாங்காட்டில் மழைநீரில் மூழ்கி பிரனிகா ஸ்ரீ என்ற 2 வயது குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, மழை நீரில் மூழ்கி இறந்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 23, 2025

முதல் கார் இப்படிதான் இருந்ததா?

image

இன்றைய கார்களின் வடிவமைப்பை கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். ஆனால், உலகின் மிகவும் பிரபலமான கார் பிராண்டுகளின் முதல் கார் எப்படி இருந்தது என்று தெரியுமா? அவர்களது பயணம் எங்கிருந்து தொடங்கியது என்பதை விளக்கும் விதமாக மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த கார் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 23, 2025

RAIN ALERT: 20 மாவட்டங்களுக்கு வந்தது அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி, சென்னை, கோவை, திண்டுக்கல், குமரி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2025

CM, அமைச்சர்கள் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்: EPS

image

விவசாயிகளுக்காக போராடுவதாக கூறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட நெல் கொள்முதல் பிரச்னைகளை பேசுவதில்லை என EPS தெரிவித்துள்ளார். முதலமைச்சரும், அமைச்சர்களும் பொய்யான கற்பனை உலகில் வாழ்வதாகவும், மக்கள் சுபிட்சமாக வாழ்வதாக தங்களுக்கு தானே சொல்லிக் கொண்டு கனவுலகில் வாழ்வதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், முளைவிட்ட நெல்லை கணக்கிட்டு, உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News October 23, 2025

BREAKING: ஆஸி., வெற்றி… தொடரை இழந்தது இந்தியா

image

ஆஸி.,யுடனான 2-வது ODI ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 264/9 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய ஆஸி., வீரர்கள் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மாட் ஷாட்(74), கூப்பர் கன்னோலி (61) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 46.2 ஓவரில் இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி., வெற்றிபெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

News October 23, 2025

நேருக்கு நேர் வாருங்கள்: PAK தளபதிக்கு TTP தளபதி மிரட்டல்

image

நேருக்கு நேர் வந்து மோதுங்கள் என PAK ராணுவ தளபதி அசிம் முனீருக்கு, PAK தலிபான் அமைப்பான TTP-யின் தளபதி காஸிம், பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவில், வீரர்களை பலியிடுவதற்கு பதில், உயர் அதிகாரிகள் போர்க்களத்திற்கு வாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார். TTP தளபதி காஸிமை பிடித்து தந்தால் ₹10 கோடி சன்மானம் என்று PAK அதிகாரிகள் அறிவித்த நிலையில், இந்த மிரட்டல் வீடியோ வெளியாகி உள்ளது.

News October 23, 2025

அனைத்து பள்ளிகளிலும்.. பறந்தது புதிய உத்தரவு

image

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் விடுத்துள்ளது. ஏற்கெனவே, கடந்த 5 நாள்களாக வெளுத்து வாங்கும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என HM – களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 23, 2025

காடுகள் வளர்ப்பில் இந்தியா டாப்-3

image

காடுகள், பூமியின் நுரையீரல். அவை அழியும் போது, மனித வாழ்வின் சுவாசமும் நின்று போகிறது. இந்த காடுகளை அதிகரிப்பதில், UN அறிக்கையின்படி உலகளவில் இந்தியா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளது. உலக வன பரப்பு தரவரிசையில் இந்தியா ஒரு படி முன்னேறி, தற்போது 9வது இடத்தை பிடித்துள்ளது. 2025-ல் இந்தியாவின் வனப்பரப்பு 72.7 மில்லியன் ஹெக்டேராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் மொத்த வனப்பரப்பில் சுமார் 2% ஆகும்.

error: Content is protected !!