India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
META நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க வர்த்தக ஆணையம் (FTC) தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று தொடங்குகிறது. அமெரிக்க மாவட்ட நீதிபதி முன் இருதரப்பும் தங்களது அறிக்கைகளை சமர்பிக்க உள்ளனர். META நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இணைய சந்தையில் போட்டி நிறுவனங்களே இருக்கக்கூடாது என இன்ஸ்டா, வாட்ஸ்அப்பை வாங்கி மெட்டா Monopoly செய்ததாக FTC வழக்கு தொடர்ந்தது.
அம்பேத்கர் புகழை போற்றி வணங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சாசனத்தின்படி சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி கொண்ட சமூகத்தை அமைக்க உறுதியேற்போம் என இபிஎஸ் வலியுறுத்தினார்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சில தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 2-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 9-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியுள்ளன. அரசு தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத போதிலும் ஜூன் 4 அல்லது 5-ம் தேதி திறக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மருமகன் ஆகாஷ் ஆனந்த் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டதால் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார் மாயாவதி. அதே நேரம் ஆரோக்கியமாக இருக்கும் வரை யாரையும் அரசியல் வாரிசாக நியமிக்கப் போவதில்லை என மாயாவதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் கட்சிக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதால், அரசியல் வாரிசாக இருந்த ஆகாஷை, கட்சியில் இருந்து மாயாவதி நீக்கியிருந்தார்.
பெரு எழுத்தாளரும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவருமான மரியோ வர்காஸ் லோசா காலமானார் (89). 50 ஆண்டுகளாக இலக்கிய நயத்துடன் புத்தகங்கள் எழுதி, எழுத்துலகில் கோலோச்சியவர். வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், லிமாவில் உள்ள வீட்டில் அவரது உயிர் அமைதியாக பிரிந்தது. ‘Death in the Andes’, ‘The war of the End of the World’ படைப்புகளுக்காக 2010ல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு சரியாக ஓராண்டு கழிந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நுழைந்து கொலை செய்வோம் எனவும், காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் எனவும் மும்பை போக்குவரத்து துறையின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களின் உற்பத்தி 60% அதிகரித்துள்ளது. மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த 2024- 25 நிதியாண்டில் ஐபோன் விற்றுமுதல் (Turnover) ₹1.89 லட்சம் கோடியை தொட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பிரிவில் ஐபோன்கள் மட்டும் ₹1.5 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் பாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது.
அதிமுகவிலிருந்து விலகுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருமாவளவன் திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக ஆவேசமாக கூறினார். மேலும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் தான் கட்சியிலிருந்து விலகுவேன் என எங்கும் கூறவில்லை எனவும் உயிர்மூச்சு இருக்கும் வரையில் அதிமுகவில் தொடருவேன் என்றும் கூறியுள்ளார்.
உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீர் ‘Acqua di Cristallo Tributo a Modigliani’ ஆகும். 750 மி.லி கொண்ட இந்த பாட்டிலின் விலை ₹50 லட்சம். 24 காரட் தங்கத்தால் செய்யப்படும் இந்த பாட்டில் தண்ணீரில் 5 கிராம் தங்கம் சேர்க்கப்படுகிறது. பிரான்ஸ், பிஜி, ஐஸ்லாந்தில் இருந்து சேகரிக்கப்படும் நீர் இதில் நிரப்பப்படுகிறது. இதன் பெயர் 2019-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். இந்திய அரசமைப்பை கட்டமைத்த பாபாசாஹேப்பை இந்நாளில் வணங்குவதாக X பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசமைப்பை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில், அம்பேத்கரின் போராட்ட குணம் நிச்சயம் வழிகாட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.