News April 14, 2025

இரு துருவமாக பிரியும் பாமக நிர்வாகிகள்

image

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்டிருக்கும் மோதலால், நிர்வாகிகள் இரு அணியாக பிரியத் தொடங்கியுள்ளனர். அதன் உச்சமாக, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக திலகபாமா கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வடிவேல் ராவணன் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News April 14, 2025

தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி?

image

பிஹார் தேர்தலுக்கு முன்பு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்றும், அப்பாேது பிஹார் மாநிலத்தை சேர்ந்த சிலருக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அதேபோல், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, அண்ணாமலை, அன்புமணி, சி.வி. சண்முகம், ஜி.கே. வாசன் ஆகியோருக்கும் மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News April 14, 2025

4 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

மாலை 4 மணி வரை 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதேநேரத்தில் சில பகுதிகளில் மழையும் பெய்கிறது. இந்நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கூறியுள்ளது.

News April 14, 2025

ஸ்ரீ விவகாரம்.. Beep போட்டு திட்டிய ‘மாநகரம்’ தயாரிப்பாளர்

image

முறையாக சம்பளம் கொடுக்காததால் நடிகர் ஸ்ரீ, மன அழுத்தத்திற்கு உள்ளாகி உடல் மெலிந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஸ்ரீயின் உடல்நலம் பற்றி அக்கறை கொண்டுள்ளதாகவும், அவரை தொடர்பு கொள்ள நீண்ட நாள்களாக முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விஷயம் தெரியாமல் தன்னை திட்டுபவர்களை கெட்டவார்த்தையிலும் திட்டியுள்ளார்.

News April 14, 2025

மகளிர் உரிமைத் தொகை நாளை டெபாசிட்

image

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் 1.10 கோடி பெண்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் 15-ம் தேதி வங்கிக் கணக்கில் ரூ.1,000 டெபாசிட் செய்து வருகிறது. இந்த மாதத்திற்கான ரூ.1,000 நாளை (ஏப்.15) பெண்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படவுள்ளது. இதற்கான SMS செல்போன் எண்ணுக்கு வந்ததும் பெண்கள், தங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,000 எடுத்து கொள்ளலாம். இந்தத் தகவலை பகிருங்கள்.

News April 14, 2025

அக்‌ஷர் படேலுக்கு ₹12 லட்சம் அபராதம்

image

MI-க்கு எதிரான நேற்றைய போட்டியில், ஓவர் வீச தாமதப்படுத்தியதால் DC கேப்டன் அக்‌ஷர் படேலுக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. MI அதிரடியாக விளையாடியதால், ஃபீல்டிங் செட் செய்ய அவர் அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீச முடியவில்லை. இது அவருக்கு முதல்முறை என்பதால் ₹12 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறு மீண்டும் நடந்தால் ₹24 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

News April 14, 2025

PM அன்று சொன்னார்.. சோக்சி இன்று கைது

image

<<16092028>>மெஹூல்<<>> சோக்சியின் கைதை சுட்டிக்காட்டி, PM மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருவதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் கொள்ளையடித்தவர்கள் அதை திருப்பி தர வேண்டும் என PM முன்பு சொன்னதாகவும், அதை நிறைவேற்றும் வகையில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற சோக்சி கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பெல்ஜியத்தில் வைத்து சோக்சி கைது செய்யப்பட்டுள்ளார்.

News April 14, 2025

ஒரே போஸ்ட்.. டோட்டல் டேமேஜ்!

image

இந்திய, USA நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவத்தை சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் Reddit-ல் போஸ்ட் போட, அது பேசுபொருளாகியுள்ளது. USA நிறுவனர்கள் ஊழியர்களை நம்பி, திறன், தரத்திற்கு மதிப்பளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்திய நிறுவனர்களிடம் இந்த மனப்பான்மை இல்லை எனவும், ஊழியர்களை அலட்சியப்படுத்துவதாகவும் விமர்சித்துள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

News April 14, 2025

விஜய்க்கு இது தமிழ் புத்தாண்டு இல்லையா?

image

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி இன்று காலையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய், தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. எக்ஸ் தளத்தில், ‘அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்’ என அவர் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து, தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News April 14, 2025

சிபிஎம் மூத்தத் தலைவர் கா.சின்னையா காலமானார்

image

சிபிஎம் மூத்தத் தலைவர் கா.சின்னையா (75) உடல்நலக்குறைவால் காலமானார். 1973-ல் கட்சியில் சேர்ந்த இவர் DYFI சங்கத்தை வளர்த்தெடுத்ததில் முக்கியமானவர். தென்சென்னை மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார். சின்னையா உடலுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சின்னையாவின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RIP

error: Content is protected !!