India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போலீஸ் ஒருத்தரை எதிரிங்க கொன்னுடுறாங்க. அவர் மனைவிக்கும் விஷம் கொடுத்துடுறாங்க. அதனால, அவங்களுக்கு பிறக்குற இரட்டை குழந்தைகள்ல ஒரு குழந்தை ஊனமா பிறக்குது. 25 வருஷம் கழிச்சு, அந்த போலீசை கொன்னவங்க ஒவ்வொருத்தரா இறந்து போறாங்க. அவங்களை யாரு கொன்னதுங்குற சுவாரஸ்யமான திரைக்கதையோட உருவாக்கப்பட்ட படம்தான் இது. இப்படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆகுது. கண்டுபிடிச்சுட்டீங்களா?!
கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு மீண்டும் ஒரு தொடர் விடுமுறை கிடைக்கப் போகிறது. ஆம், வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.18) ‘GOOD FRIDAY’-வை முன்னிட்டு அரசு விடுமுறை வருகிறது. அடுத்த நாள் சனிக்கிழமை. ஆகவே, இந்த வார இறுதியும் 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. கோடை விடுமுறையும் தொடங்கப் போவதால், இப்போதே உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
அமரனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடுத்து வரவிருக்கும் படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸுடன் SK இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புத்தாண்டையொட்டி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 5-ம் தேதி மதராஸி திரைக்கு வருகிறது. விரைவில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிகிறது. மதராஸிக்கு அடுத்து
‘பராசக்தி’ படம் SK லைன்அப்பில் உள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், பாஜகவை தவெக தலைவர் விஜய் விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், விஜய்க்கு பாஜகவை பார்த்து பயமா என கேள்வி எழுப்பினார். அத்துடன் 2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப விரும்பும் கட்சிகள் பாஜக கூட்டணியில் சேரலாம் எனவும் அழைப்பு விடுத்தார்.
தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து போதிய அளவு இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.500ஆகவும், ஐஸ் மல்லி, ஜாதி மல்லி, முல்லைப்பூ தலா ரூ.400ஆகவும், கனகாம்பரம் ரூ.800ஆகவும் உயர்ந்துள்ளது. சாமந்தி ரூ.240ஆகவும், சம்பங்கி ரூ.200ஆகவும், அரளிப்பூ ரூ.500ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
தை முதல் நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டு என்று ஒரு சிலர் சொல்கின்றனர். ஆனால், சித்திரையில் புத்தாண்டு கொண்டாட காரணம் இருக்கிறது. பண்டைய காலத்தில், மாதங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் ஆறு பெரும்பொழுதுகள்தான் இருந்தன. அவை, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்பன. அவற்றில், இளவேனில் காலத்தின் முதல் மாதமான சித்திரைதான் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. இக்கருத்தை மறுப்போரும் உள்ளனர்.
ஒரே ஆண்டில் 16.08 லட்சம் கார்களை விற்று, நாட்டின் நம்பர் 1 கார் விற்பனை நிறுவனம் என்ற பெயரை மாருதி சுசூகி தக்க வைத்துள்ளது. 2024-ம் நிதியாண்டில் அதிக கார்களை விற்று, கார் சந்தையில் 40.6 சதவிகிதத்தை அந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதற்கடுத்து ஹூயின்டாய் நிறுவனம் 5,59,149 கார்களை விற்று (13.46%) நாட்டில் 2ஆவதாக அதிக கார்களை விற்ற நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. நீங்க என்ன கார் வச்சிருக்கீங்க?
கன்னட காமெடி நடிகர் பேங்க் ஜனார்த்தன் (76) காலமானார். 800 படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். வயது மூப்புத் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, பெங்களூரு தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை காலமானார். நடிப்புத் தொழிலின் இடையே சில காலம் அவர் வங்கியில் வேலை பார்த்தார். இதனால் பேங்க் ஜனார்த்தன் என்று அவருக்கு பெயர் வந்தது.
அம்பேத்கர் எழுதிய Annihilation of Caste, Riddles in Hinduism ஆகிய ஆங்கில புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களை CM ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழாவில், அம்பேத்கர் பேரன் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ₹227.85 கோடி மதிப்பில் பள்ளி, கல்லூரி விடுதி கட்டடங்களை திறந்துவைத்து, ₹104.75 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் CM வழங்கினார்.
5 தொடர் தோல்விகளுக்கு பிறகு இன்று LSG அணியை சந்திக்கும் CSK கட்டாய வெற்றியை பெற வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது. அதனால், பிளேயிங் XI-ல் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. திரிபாதிக்கு பதிலாக வன்ஷ் பேடி களமிறங்க வாய்ப்புள்ளதாம். அதேநேரத்தில், தொடர்ந்து சொதப்பி வரும் அஸ்வினுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. CSK வெற்றிக்கு தேவை என நீங்கள் நினைப்பது என்ன?
Sorry, no posts matched your criteria.