India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட அரிய நீல நிற வைரம், மே 14-ம் தேதி ஜெனிவாவில் ஏலத்திற்கு வருகிறது. ‘The Golkonda Blue’ (23.24 கேரட்) என்று அழைக்கப்படும் இந்த வைரத்தை, Christie என்ற நகை வியாபாரிகள் ஏலத்தில் விடுகின்றனர். 1947க்கு முன், இந்தூர் மன்னர்களிடம் இருந்த இந்த வைரம் பின்னாட்களில் தனியாருக்கு விற்கப்பட்டது. நடைபெறவிருக்கும் ஏலத்தில் இது, ₹430 கோடி வரை விலை போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பேத்கர் உயிரோடு இருக்கையில் திரும்பத் திரும்ப அவரை காங்கிரஸ் அவமதிப்பு செய்ததாக மோடி விமர்சித்துள்ளார். தேர்தல்களில் அம்பேத்கரை 2 முறை காங்கிரஸ் தோல்வியடைய செய்ததாகவும், அவர் மரணமடைந்த பிறகு அவரது நினைவுகளை அழிக்க முயன்றதாகவும் சாடியுள்ளார். சமத்துவத்துக்காக அம்பேத்கர் போராடினார், ஆனால் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலை நாடு முழுவதும் பரப்பியது என்றும் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
LSG அணிக்கு எதிராக விளையாடும் CSK அணியில் கேப்டன் தோனி இரண்டு முக்கிய மாற்றங்களை செய்துள்ளார். இன்றைய போட்டியில், கான்வேக்கு பதிலாக ரஷீத்தும் அஷ்வினுக்கு பதிலாக ஓவர்டன்னும் களம் இறங்கவுள்ளனர். அதேபோல, LSG அணியில் ஹிம்மத் சிங்குக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் களமிறங்கவுள்ளார். இந்த மாற்றங்கள் CSK அணிக்கு கை கொடுக்குமா என்று கமெண்ட்டில் சொல்லுங்க
விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. இப்படம் வெளியாகி 34 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக, ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 4K தரத்தில், 7.1 சவுண்ட் மிக்ஸிங் தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் முறையில் ரீ-மாஸ்டர் ஆகியிருக்கும் இப்படம், 500 திரையரங்குகளில் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. இடி மின்னலுடன் மிதமான மழை: விருதுநகர், குமரி, கிருஷ்ணகிரி. இடி- மின்னலுடன் லேசான மழை: நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
CSK, LSG அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டியில், CSK அணி முதலில் பவுலிங் செய்யவுள்ளது. டாஸ் வென்ற CSK அணியின் கேப்டன் தோனி, LSG அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளார். தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் CSK அணி, இப்போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேநேரம், 4-வது இடத்தில் இருக்கும் LSG, இப்போட்டியில் வென்றால் முதலிடத்தை பிடிக்கும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வரும் CSK அணி, மொத்தம் விளையாடியுள்ள 6 போட்டிகளில் 32 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளது. ஆனால், இன்று CSK அணிக்கு எதிராக களமிறங்கவிருக்கும் LSG அணியின் நிக்கோலஸ் பூரன் மட்டும் 31 சிக்ஸர்கள் விளாசியிருக்கிறார். இதனால், பூரனை சமாளிப்பதே CSK அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். தாக்குப்பிடிக்குமா CSK?
மோடி அரசு, அம்பேத்கர் பெயரை பேச்சளவிற்கே பயன்படுத்துகிறது, அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற எதுவும் செய்யவில்லை என்று மல்லிகார்ஜூன கார்கே சாடியுள்ளார். தலித்துகளை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இருப்பதாகவும், அதை மோடி அரசு பின்பற்றுவதில்லை என்றும் அவர் சாடியுள்ளார். தலித்துகள், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் அவமதிக்கப்படுகையில், பிரதமர் மோடி மவுனம் காப்பதாகவும் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
CSK இன்னும் சற்று நேரத்தில் LSG-யுடன் மோதப் போகிறது. தான் ஆடிய 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே CSK வென்றுள்ளது. தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ள CSK அடுத்து வரும் 7 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப் செல்ல முடியும். ஆகவே, இன்றைய ஆட்டம் CSK-க்கு வாழ்வா சாவா போராட்டம் தான். LSG, CSK இடையே இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களில் 3-ல் LSG வென்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் CSK வெல்லுமா?
அதிமுக கூட்டணியில் தமாகா 10 தொகுதிகள் கேட்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 2026 தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி அமைத்துள்ளன. பாஜகவுடன் கூட்டணியிலுள்ள உள்ள தமாகாவுக்கு, தேர்தலில் எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள் என ஜிகே வாசனிடம் கேட்டதற்கு, அப்போது உடனிருந்த EX எம்பி சித்தன், 10 தொகுதிகள் கேட்கப்படும் என கைவிரல்களைக் காட்டினார். இதற்கு ஜிகே வாசன் மறுப்பு கூறவில்லை.
Sorry, no posts matched your criteria.