India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சற்றுமுன் உருவாகியுள்ளது. இதனால், சென்னை, தென்காசி, குமரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. மேலும், இன்று கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால், மழையை பொறுத்து பள்ளிகளுக்கு மதியத்திற்கு மேல், மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மாரடைப்பு என்றால் நெஞ்சு வலிக்கும், திடீரென வியர்க்கும் என்று மட்டும் தான் நினைக்கிறோம். ஆனால் பெண்களுக்கு மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் இருக்கிறது என்றால் வேறு சில முக்கியமான அறிகுறிகளும் இருக்கும் என்று கூறுகின்றனர் டாக்டர்ஸ். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் மிகவும் ஆபத்து எனவும் எச்சரிக்கின்றனர். அவை என்னென்ன என்பதை அறிய மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…

UK-ல் நாய் வளர்க்க ஆசைப்பட்ட சிறுமி(8) பெற்றோரிடம் முறையிட, அவர்கள் மறுத்து விடுகின்றனர். தனது ஏக்கத்தை, ‘To God, Cloud 9, Heaven’ என்ற முகவரிக்கு சிறுமி லெட்டராக எழுதி அனுப்பினார். 6 மாதம் கழித்து, ‘சரியான நேரத்தில் உன் ஆசை நிறைவேறும், தாமதமாக லெட்டர் போட்டதற்கு மன்னிக்கவும்’ என பதில் லெட்டர் வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் பகிர, அந்த கடவுளை பலரும் தேடி வருகின்றனர்.

பல நூற்றுக்கணக்கான மெயில்களால் இன்பாக்ஸ் நிரம்பி விட்டதா? இத பண்ணுங்க ★Browser-ல் ஜிமெயிலை ஓபன் பண்ணி, Inbox-ஐ கிளிக் பண்ணுங்க ★Search-ல் ‘Unsubscribe’-ஐ செலக்ட் செய்யவும் ★Display-ஆகும் அனைத்து மார்க்கெட்டிங் மெயில்களையும் டெலிட் பண்ண, Refresh button-க்கு இடதுபுறத்தில் இருக்கும் செக்பாக்ஸ்-ஐ கிளிக் செய்யவும் ★Trash icon-ஐ கிளிக் செய்தால் மொத்த மெசெஜும் ‘Trash folder-க்கு சென்றுவிடும்.

தமிழக முன்னேற்ற கழகம் (TMK) என்ற புதிய கட்சி இன்று உதயமாகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் யாதவ மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் செங்கம் கு.ராஜாராம், தனது ஆதரவாளர்களுடன் TMK கட்சியை சற்றுநேரத்தில் தொடங்குகிறார். கட்சியின் கொடியை அறிமுகம் செய்யும் அவர், 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்தும் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. கடைசியில், தேஜஸ்வி யாதவ் CM வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், RJD-க்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் மற்றும் VIP கட்சிகளின் 4 வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றனர். இதனிடையே, 10 தொகுதிகளில் மனுவை வாபஸ் பெறாததால் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியது ஏன் என்பதற்கு இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார். தனக்கு முதுகுப் பிரச்சினை இருப்பதை தெரிவித்த அவர், அதன் காரணமாக தன்னால் தொடர்ந்து 2 நாள்கள் பீல்டிங் செய்ய முடிவதில்லை என கூறினார். இதனாலேயே டெஸ்டில் ஓய்வு எடுத்துள்ளதாக கூறிய அவர், ஆனால் ODI-ல் ஒரு நாள் பீல்டிங் செய்த பிறகு, மீண்டுவர நேரம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க, US அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் இரு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்தார். ஆனால் இந்த தடைகளுக்கெல்லாம் ரஷ்யா ஒருபோதும் அஞ்சாது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்த தடைகள் ரஷ்ய பொருளாதாரத்தை பாதிக்காது என்று கூறியுள்ள அவர், எந்தவொரு அழுத்தத்திற்கும் ரஷ்ய அடிபணிய போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹5,600 சரிவை கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதே. ஆனால் இன்று காலை முதலே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக தங்கத்தின் விலை இன்று மாற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தேவை: கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை, இஞ்சி, மிளகு, சீரகம் *செய்முறை: வெந்நீரில் தலா 5 கற்பூரவள்ளி & துளசியை சேர்க்கவும். பின்னர், வெற்றிலையின் காம்போடு நரம்பை நீக்கிவிட்டு அதனுடன் சேர்க்கவும். அடுத்ததாக, மிளகு, இஞ்சி, சீரகத்தை இடித்து சேர்க்கவும். இவற்றை நன்கு கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்து வடிகட்டி ஆறவைத்து குடிக்கலாம். இது நெஞ்சு சளியை விரட்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.