India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிள்ளை போனாலும் பரவாயில்ல, விஜய்யை பார்த்தோம் என கரூர் துயரில் பாதிக்கப்பட்ட பெற்றோர் பேசியதை ஜி.பி.முத்து விமர்சித்திருந்தார். அவரை சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் விளாசினர். இந்நிலையில், தான் பேசியது சரி என ஜி.பி.முத்து பதிலடி கொடுத்துள்ளார். மேலும், விஜய்க்கு அசிங்கத்தை ஏற்படுத்துவதே அவருடைய ரசிகர்கள்தான் எனவும் இப்படி பேசித்தான் அவர்கள் தற்குறி என பெயர் வாங்கியிருப்பதாகவும் சாடியுள்ளார்.

சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை CM ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் இருந்த நிலையில், அதிகாரிகளிடம் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கொடிய நோயான போலியோவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 24-ம் தேதி ‘உலக போலியோ தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. வரும் முன் காப்போம் என்பதற்கு இணங்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது மிகவும் அவசியமானதாகும். ‘Every Child, Every Vaccine, Everywhere, is a call to ensure that no child, in any setting, is left unprotected’ என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில், டிரம்ப் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில், பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான மேற்கு கரையை, இஸ்ரேல் சட்டப்பூர்வமாக இணைக்க முயன்றால், அமெரிக்காவின் ஆதரவை இழக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். அரபு நாடுகளுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளதால், இஸ்ரேலின் இந்த முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2 நாளாக தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹11,540-க்கும் சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹ 92,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை உயர்ந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆந்திராவில் சொகுசு பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த துயர சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் PMNRF-லிருந்து ₹2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக, பிரதிகா ராவல் 122(134) ரன்களை விளாசியது மட்டுமின்றி, 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம், இந்திய பெண்கள் அணிக்காக உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் சதம் & விக்கெட் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை பிரதிகா படைத்துள்ளார். நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக வெற்றி பெற்று இந்திய பெண்கள் அணி, தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, பற்பாடகத்தை காய்ச்சி குடித்தால் சளி குணமாகும் *பற்பாடகத்தை தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சியடையும் *பற்பாடகம், மிளகு, சுக்கு, அதிமதுரம், வேப்பங்கொழுந்தை தண்ணீரில் காய்ச்சி, குடித்தால் காய்ச்சல் குறையும் *கண்டங்கத்திரி இலை, ஆடாதொடை, விஷ்ணுகாந்தி, பற்பாடகம் , சீரகம், சுக்கு ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி குடித்தால் தலையில் நீர் ஏற்றம் குறையும்.

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சற்றுமுன் உருவாகியுள்ளது. இதனால், சென்னை, தென்காசி, குமரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. மேலும், இன்று கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால், மழையை பொறுத்து பள்ளிகளுக்கு மதியத்திற்கு மேல், மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மாரடைப்பு என்றால் நெஞ்சு வலிக்கும், திடீரென வியர்க்கும் என்று மட்டும் தான் நினைக்கிறோம். ஆனால் பெண்களுக்கு மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் இருக்கிறது என்றால் வேறு சில முக்கியமான அறிகுறிகளும் இருக்கும் என்று கூறுகின்றனர் டாக்டர்ஸ். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் மிகவும் ஆபத்து எனவும் எச்சரிக்கின்றனர். அவை என்னென்ன என்பதை அறிய மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…
Sorry, no posts matched your criteria.