India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சோம்பல் என்பது உடல் ஆற்றல் இல்லாமல் மந்தமான நிலைக்கு செல்வது ஆகும். சோம்பல் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சத்தான சில உணவுகள், உடல் மற்றும் மூளைக்கு புத்துணர்வு ஊட்டி, சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அது என்ன உணவுகள் என்பது மேலே போட்டோக்களில் இருக்கு. அதை ஒவ்வொன்றாக பாருங்க. உடலை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

தமிழகத்தில் S.I.R. எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. இப்பணியில் 75,050 அலுவலர்கள் ஈடுபடுவார்கள் என்றும் வீடு வீடாக சென்று விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரிகள் வழங்குவர் எனவும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்து தர ஒரு மாதம் வரை அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

✦கவின்- ஆண்ட்ரியா நடித்துள்ள மாஸ்க் படம் வரும் நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது ✦TTF வாசன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘IPL’ படத்தின் டீசர் வெளியானது✦’டாடா’ படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது ✦தெலுங்கில் தான் நடித்த ‘பரதா’ படத்தின் ரிசல்ட் தன்னை மிகவும் வருத்தமடைய வைத்ததாக அனுபமா தெரிவித்துள்ளார்.

Montha புயல் எதிரொலியால், தமிழ்நாட்டிற்கு மிக கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மழையை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ODI-யில் விராட் தொடர்ச்சியாக 2 முறை டக் அவுட்டாகி பார்த்ததே இல்லை என இர்ஃபான் பதான் கூறியுள்ளார். SM அழுத்தம் காரணமாகவே விராட் இப்படி விளையாடுகிறார் என்ற அவர், அழுத்தங்களை Ro-Ko பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், கழுத்தின் மேல் கத்தி தொங்கும்போது சிறப்பாக விளையாட முடியாது எனவும், ரன் எடுக்காத வேளையில் அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

வங்கக்கடலில் 27-ம் தேதி உருவாகவுள்ள புயலுக்கு <<18090174>>MONTHA<<>> என இந்திய வானிலை ஆய்வு மையம் பெயரிட்டுள்ளது. பொதுவாக தாய்லாந்தில் உள்ள பெண்களுக்குதான் MONTHA என பெயர் சூட்டப்படுகிறதாம். இந்த பெயருக்கு உறுதியான மனம் கொண்டவர் என்பது பொருள். வங்கக்கடலில் உருவாகவுள்ள இந்த புயல் வலுவாக இருக்கும் என கணித்துதான் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகவல் பிடித்திருந்தால் SHARE பண்ணலாமே.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் வரும் 27-ம் தேதி புயலும் உருவாக உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலான கனமழைக்கு வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இதுவரையிலான பாதிப்புகள் குறித்து CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருவெடுக்கும் என IMD கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும். அதன்பின், 27-ம் தேதி புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு Montha என பெயரிடப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக 27-ம் தேதி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகில் சில இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு, ரகசியம் என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அரசால் தடை செய்யப்பட்டுள்ள சில இடங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த கால் பதிக்க முடியாத வேறு இடம் ஏதேனும் இருந்தால் கமெண்டில் சொல்லுங்க.

மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு இயக்குநர் பாக்யராஜ் அஞ்சலி செலுத்தினார். இதன்பின் பேசிய அவர், ரஹ்மான் எங்கேயாவது வெளியூர் போனா சபேஷை தான் இசையமைக்க கூப்பிடுவாங்க… அந்த அளவுக்கு அவருக்கு திறமை இருந்துச்சு. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய திறமைசாலி நம்மை விட்டு பிரியும்போது, மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தமிழ் சினிமா நல்ல இசைக் கலைஞரை இழந்துவிட்டது என்று உருக்கமாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.